தொடர்கள்
விகடகவியார்
"நான் தான் நான் தான் " என்று டிரம்ப் சொல்வது ஏன் ?-விகடகவி நிருபர் குழு

20250416193016172.jpeg

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம்.

சண்டை போட்டுக் கொண்டிருந்தால் உங்களுடன் வர்த்தகம் வைத்துக் கொள்ள மாட்டேன் என்று நான் சொல்லி நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் தனது வலைதளத்தில் பதிவு செய்தார்.

சவுதி அரேபியா சென்ற அமெரிக்க அதிபர் அங்கேயும் இதே கருத்தை பதிவு செய்தார்.

இந்த விஷயத்தை இந்தியா கண்டுகொள்ளவே இல்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை இன்னொரு நாட்டுடன் ஆன பிரச்சனையில் மூன்றாவது நாடு மத்தியஸ்தம் செய்வதை என்றுமே விரும்பியது கிடையாது.

அமெரிக்க அதிபரின் கருத்தை இந்தியா கண்டுகொள்ளவில்லை.

ராணுவ நடவடிக்கை நிறுத்திக் கொள்ளுமாறு பாகிஸ்தான் எங்களிடம் கெஞ்சியது என்பதை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள். அதுதான் உண்மை. பாகிஸ்தான இதற்கு எந்த மறுப்பும் இதுவரை சொல்லவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா உண்மையில் யாரை ஆதரித்தது என்ற கேள்வி எழுந்தால் அமெரிக்கா பாகிஸ்தானை தான் ஆதரித்தது என்பது தான் உண்மை.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ,சீனா ,துருக்கி நாடுகள் ஆயுதங்களை விற்பனை செய்து கொண்டிருந்தது.

இந்தியாவின் ராணுவ நடவடிக்கையால் இந்த நாடுகளின் ஆயுதங்கள் காயலான் கடைக்கு போனது.

துருக்கி தனது மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக ராணுவ கப்பலை அனுப்பியது இன்னும் சொல்லப்போனால் துருக்கி ராணுவ வீரர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியது.

இந்தியா பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் வாங்கிய ராணுவ தளவாடங்கள் மிகவும் நவீன ரகம் என்பதால் அமெரிக்கா ,துருக்கி, சீன ராணுவ தளவாடங்கள் அவற்றை எதிர்த்து எதுவுமே செய்ய முடியவில்லை.

உண்மையில் இவர்கள் மானம் கப்பல் ஏறியது.

பாகிஸ்தானை எப்படியாவது பேசி போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய் என்று அன்பாகவும் மிரட்டியும் இந்த நாடுகள் பேசின.

தீவிரவாதத்துக்கு எதிராக உங்களுக்கு பக்க துணையாக இருப்போம் என்று இந்தியாவுக்கு ஆதரவாக பேசிய நாடுகள் எல்லாமே பாகிஸ்தானை தான் ஆதரித்தது.

துருக்கியை எடுத்துக் கொள்வோம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்தியா அளித்த உதவி கணிசமானவை. எல்லாம் மறந்து போய் துருக்கி தனது போர்க்கப்பலை பாகிஸ்தானுக்கு ஆதரவாக அனுப்பியது. டிரோன்களையும் அளித்து உதவி செய்தது.

அஜர்பைஜான் நாடும் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தது.

ஈரான், அஜர்பைஜான் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் போது இந்தியா யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்தது.

அஜர்பைஜான் தன்னுடைய உண்மையான முகத்தை தற்சமயம் இந்தியாவுக்கு தெரிவித்து இருக்கிறது.

மற்ற நாடுகள் எல்லாம் சமாதானமாக போய்விடுங்கள் என்று கடனுக்கு தான் சொன்னது.

ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை, காரணம் காட்டி ஒரு பில்லியன் டாலர் கடன் கேட்டது பாகிஸ்தான்.

இந்தியா கடுமையாக எதிர்த்தது.

அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு கடன் கிடைத்தது.

அமெரிக்க வல்லரசு என்ற முகத்தை தற்சமயம் மெல்ல இழந்து கொண்டிருக்கிறது.

எனது இனிய நண்பர் மோடி என்று சொல்லிக் கொண்டிருந்தார் டிரம்ப். ஆனால் இப்போது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கத்தார் நாட்டில் பேசியிருக்கிறார்.

இந்தியாவின் வெளியுற கொள்கையில் இப்போது மாற்றத்திற்கான அவசியம் வந்துவிட்டது என்கின்றார்கள் அரசியல் விமர்சகர்கள்.