தொடர்கள்
விகடகவியார்
மிஸ்டர் ரீல்

20250417074913925.jpg

"ட்ரம்பை ஒரு நாடை போய் பார்த்து என்ன என்று விசாரிக்க கூடாதா?" ஆபீஸ் பையன் கேட்க உடனே புறப்பட்டார் மிஸ்டர் ரீல்.

மிஸ்டர் ரீல் வெள்ளை மாளிகை போனபோது டிரம்ப் யாரிடமா பேசிக் கொண்டிருந்தார்." என்னது கூடுவாஞ்சேரியில் இருந்து பேசுகிறீர்களா ? உங்கள் தெருக்குழாயில் தண்ணீர் வரவில்லை பஞ்சாயத்து பண்ணனுமா "என்ற அமெரிக்க அதிபர் உங்க ஊர்ல என் பஞ்சாயத்து செல்லாது நான் பேசாம நயாகரா நீர்வீழ்ச்சி தண்ணி பத்து கேன் சவுதி அரேபியா அன்பளிப்பா தந்த சொகுசு ஏரோபிளேனில் தினந்தோறும் அனுப்பி வைக்கிறேன். அத வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று பெண்மணி இடம் பேசிக் கொண்டிருந்தார். மிஸ்டர் ரீல் "உண்மையில் நீங்கள் சொல்லி தான் சண்டை முடிந்ததா ? என்று கேட்க இந்தியா எங்க ஜோலிய முடிச்சுடும் உங்க கடனை நாங்க திருப்பித் தரணும் என்றால் இந்தியா குண்டு போடுவதை நிறுத்தணும். ஐ எம் எப் கடன் தரணும் அப்பதான் முடியும்னு பாகிஸ்தான் சொல்லுச்சு அதான் சண்டையை நிறுத்திட்டேன் நானு அப்படின்னு சும்மா அடிச்சுவிட்டேன். ஆனா மோடி என்ன கண்டுக்கவே இல்ல முன்பெல்லாம் அமெரிக்கா நாட்டாமை என்றால் எல்லா நாடும் பயப்படும் இப்ப மரியாதையே போயிடுச்சு. உக்கிரேன் அதிபரே உரக்க பேச ஆரம்பிச்சிட்டாரு இப்ப அமெரிக்காவுக்கு மரியாதையே இல்லை என்ன செய்யறது "என்று அலுத்து டிரம்ப்.

"ஆனா எல்லோருக்கும் 100 %, 200 % வரி போடுவது நல்லாவா இருக்கு" என்று மிஸ்டர் ரீல் கேட்க அந்த விஷயத்துக்கும் வரேன் அமெரிக்காவுக்கு வேலைக்கு வரவங்க எல்லாம் நிறைய சம்பளம் நல்ல வருமானம் என்று நம்பி வராங்க, ஆனா இங்க கஜானா அப்படி ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல வரி போட்டா தான் வருமானம் எலன் மாஸ்க் பேசாம வெள்ளை மாளிகையை விற்றுவிட்டு நீங்க ஏதாவது வாடகை வீட்டில் குடித்தனம் போங்க ஓரளவு அதை வைத்து பொருளாதார சரிவ சமாளிக்கலாம் என்று யோசனை சொல்லி இருக்கார். வெள்ளை மாளிகையை சவுதி அரேபியா இளவரசருக்கு வித்து அதுக்கு கமிஷனா தான் அவரு ஏரோப்ளேன் பரிசாக தந்தார்.

ஐநா சபையில் எங்களுக்குன்னு ஒரு டபுள் பெட்ரூம் இருக்கு அங்கதான் குடித்தனம் போக போறேன் என்றார் ட்ரம்ப்." ஆக அமெரிக்க பொருளாதாரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை அதானே உண்மை ?"என்று மிஸ்டர் ரீல் கேட்க நான் இப்ப இன்னொரு உண்மைய சொல்ல போறேன் பாகிஸ்தான் ஒரு மில்லியன் டாலர் கடன் ஐ. எம். எஃப்லே கேட்டுச்சே அது அவங்களுக்கு இல்ல நாங்க கடன் வாங்கினா கௌரவ கொறச்சல் என்று அவங்கள வாங்கி தர சொன்னோம் "என்று டிரம்ப் சொல்ல "அடடா அமெரிக்கா நிலைமை ஆப்பிரிக்கா ஏழை நாடுகளை விட மோசமோ?" என்று மிஸ்டர் ரீல் கேட்க உண்மையை சொல்லப்போனால் அதுதான் உண்மை என்றார் ட்ரம்ப்.

அப்போது அப்புறம் எதுக்கு நான் தான் போரை நிறுத்தினேன் என்று ஜம்ப்ப பேச்சு "என்று மிஸ்டர் ரீல் கேட்க அது பழக்க தோஷத்துல வழக்கமாயிடுச்சு என்றார் டிரம்ப். அப்போது கும்பகோணத்தில் இருந்து ஒரு அழைப்பாணை வர இத பாருங்க மாமியார் மருமக சண்டை எல்லாம் என்னால் நிறுத்த முடியாது இதுவரைக்கும் நீங்க பத்து வாட்டி போன் பண்ணிட்டீங்க ரெண்டு நாடுக்குள் ஏதாவது சண்டை என்றால் என்னால் நிறுத்த முடியும் மாமியார் மருமகள் சண்டை எல்லாம் நிறுத்தறதுக்கு எனக்கு சர்வீஸ் பத்தாது "என்றார் ட்ரம்ப்.

மொத்தத்தில் அமெரிக்க அதிபர் நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது மட்டும் தெரிந்தது.