இவருடைய பூர்வீகம் இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஃபஜில்கா மாவட்டத்தில் சக் கேர்வாலா என்னும் இடம் தான். அங்கு இவருக்கு சொத்து சுமார் 60 ஏகரா நிலம் உண்டு.
கில் இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் ஆகிவிட்டார் என்ற செய்தி வருகிறது. அதைக்கேட்ட சர்பன்ச், அதாவது கிராம பஞ்சாயத்துத் தலைவர் ரங்கா ராம்
அதை ஊர் முழுதும் தெரியப்படுத்த கிராமமே கொண்டாட்டத்தில் இறங்கி விட்டது.
பிறந்த தேதி செப்டம்பர் 8, 1999
2018 ல் நடந்த அண்டர்-19 ICC உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வைஸ் கேப்டனாக இருந்து ஆடி 372 ரன்கள் குவித்து அந்த தொடரின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தியாவும் கோப்பையை வென்றது. ஜனவரி 2019ல் ஒன்-டே தொடரில் இந்தியாவுக்காக ஆட ஆரம்பித்தார். அடுத்த வருஷமே இந்திய டெஸ்ட் அணியின் இடமும் பிடித்துவிட்டார்.
ஷுப்மானின் கிரிக்கெட் வெறிகண்டு அவரது தந்தை லக்விந்தர் சிங் 2007லேயே தனது குடும்பத்துடன் மோஹாலி நகரில் கிரிக்கெட் மைதானத்தின் அருகாமையிலேயே வீடு அமைத்துக் கொண்டார்.
இதுல இன்னோரு ஸ்பெஷல் என்னன்னா, இவரது தந்தையே தினமும் தனது பைய்யனுக்கு 500லிருந்து 700 பந்துகள் வரை பௌலிங்க் போட்டு பேட்டிங்க் ஆட வைப்பாராம். கூடவே இருந்து ட்ரைனிங்க் கொடுப்பாரம்.
ஷஹ்னீல் கில் இவரது அக்கா, ஒரு கண்டென்ட் கிரியேடர்.
மன்சூர் அலி கான் பட்டௌடி, ரவி சாஸ்திரி, கபில் தேவ், சசின் டெண்டூலர் மாதிரி 25 வயதிலேயே இந்திய அணியின் கேப்டனாகிவிட்டார். ஆமாம், இவர் இந்தியாவின் 37ஆவது டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லில் ரூ.16.5 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு (கேப்டனாக) ஆடுகிறார்
ஸ்பைடர் மேனின் தீவிர ரசிகர். பவித்ர ப்ரபாக்கர் என்ற இந்த ஸ்பைடர் மேன்னின் ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் அந்த கேரக்டருக்கு,, Spider man : Across the Spider – Verse (2023) குரல் கொடுத்திருக்கிரார். சினிமா இவரது பிடித்த பொழுதுபோக்கு.
இவ்வளவு புகழ் இருந்தால், அதிலும் கிரிக்கெட் வீரர், இளம் காளை என்றால் பிரபல பல பல பிரபல பெண்களுடன் தொடர்பு என்ற கிசு கிசு இல்லாமல் இருக்குமா!
சச்சின் டெண்டூல்கரின் மகள் சாரா டெண்டூல்கர் , சாய்ஃப் அலி கானின் மகள் சாரா அலி கான்,
அவ்னீத் கௌர்
இவர்களுடன் இவரது பெயர் சர்வ சாதாரணமாக அடி பட்டுக்கொண்டிருக்கிறது உண்மைதான். இப்பத்திக்கி அவர், அய்யோ! இவர்களை பார்த்தது கூட கிடையாது என்று நழுவுகிறார்.
Leave a comment
Upload