டாக்டர் ராமதாஸ் பாமக பிரச்சினைக்கு காரணம் திமுக தான் என்று சொல்கிறாரே அன்புமணி ?
இதுதான் உண்மையில் ரீல் உடான்ஸ் அவங்க பாவம் கூட்டணி தலைவர்கள் குடைச்சல் மத்திய அரசு நிதி தராமல் அக்கப்போர் போன்ற விஷயங்களில் அவங்க கவன முழுசா இருக்கும்போது இதில் எல்லாம் தலையிட மாட்டார்கள். அன்புமணி ஒரு பொய்யர் என்பதற்கு இது தான் ஆதாரம்.
உங்களுக்கு பிபி சுகர் எல்லாம் இருக்கிறது என்கிறாரே?
அதாவது இதெல்லாம் காரணம் காட்டி என்னை ஓய்வெடுக்க சொல்கிறார். அவருக்கு கூடத்தான் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறது. அவரது மனைவிக்கு தூக்கத்தில் உளறும் வியாதி இருக்கிறது இதையெல்லாம் எல்லாம் நான் என்றும் பொது வெளியில் சொல்வதில்லை.
சரி பாமகவின் எதிர்காலம் எப்படி?
பாமகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது அதனால் தான் பேப்பர் டிவி சேனல் எல்லாவற்றிலும் பாமக பற்றி விவாதிக்கிறார்கள் பிளாஷ் நியூஸ் போடுகிறார்கள். எனவே இட ஒதுக்கீடு பிரச்சனையில் பாமகவின் கருத்தை கேட்க வேண்டும் அதாவது என் பேச்சைக் கேட்க வேண்டும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு 40 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் என் தலைமையிலான பாமக கூட்டணி வைக்கும்.
உங்கள் இரண்டு பேர் சண்டையால் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களே?
அரசியல் தலைவர்களின் நெஞ்சுவலி பற்றி உங்களுக்கு தெரியாதா இன்கம் டாக்ஸ் ரெய்டு அமலாக்கத்துறை ரெய்டு கைது ரெய்டு வரிசையில் இப்போது உட்கட்சி விஷயம் சேர்ந்து விட்டது அவ்வளவுதான் .இரண்டு பேரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க முயற்சி செய்தபோது டாக்டர்கள் எழுதிய மருந்து சீட்டில் இரண்டு ராமதாஸ்களின் தொடர்பை துண்டித்தால் தான் உங்கள் இதயம் வலுப்பெறும் என்று சொல்லிவிட்டார்களாம். இது அவர்கள் குடும்பத்தினர் என்னிடம் சொன்ன தகவல்.
விஜய் -தமிழக வெற்றி கழக தலைவர்
பள்ளிக்கூட பசங்களாய் கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தால் முதல்வராக முடியுமா?
அந்தப் பள்ளிக்கூட பசங்களுக்கு ஓட்டு இருக்கிறது அவர்கள் குடும்பத்திற்கு ஓட்டு இருக்கிறது இதுவரை 25 லட்சம் ஓட்டு என் கணக்கில் பதிவாகி இருக்கிறது.
ஆனால் நீங்கள் உறுப்பினர் சேர்க்கையில் ஒன்றரை கோடியை தாண்டி விட்டதாக சொல்கிறார்கள்.
அது ஆனந்த் சொல்லும் கணக்கு அவர் கொஞ்சம் கணக்கில் வீக் இருந்தாலும், இப்படியே சொல்லிக் சொல்லிக் கொண்டிருங்கள் அப்போதுதான் திமுகவுக்கு பிபி எகிரும் என்று சொல்லி இருக்கிறேன்.
நீங்கள் கட்சி ஆரம்பித்த பிறகு உங்களுடன் கூட்டணி பேச எந்தக் கட்சியும் வந்ததாக தெரியவில்லையே ?
எல்லாம் வருகிறார்கள் பேசுகிறார்கள் எல்லாவற்றையும் இப்போது என்னால் சொல்ல முடியாது. தொகுதி பங்கீடு துணை முதல்வர் பதவி என்று பேச்சுவார்த்தை போய்க் கொண்டு தான் இருக்கிறது. இப்போதைக்கு நான் உங்களுக்கு சொல்லும் ஒரு தகவல். நான் முதலமைச்சர். கூட்டணிக் கட்சி அமைச்சர்கள் துணை முதல்வர் என்று அழைக்கப்படுவார்கள் அமைச்சர் என்ற பெயர் எங்கள் ஆட்சியில் இருக்காது. எல்லோரும் துணை முதல்வர்கள் தான்.
சரி தமிழக வாழ்வுரிமை கழகத் தலைவர் உங்களை கடுமையாக சாடுகிறாரே?
அவர் தான் எங்கள் கட்சியின் பிராண்ட் அம்பாசிடர். கூடவே அவர் அப்படி எங்களை திட்டினால் தான், திமுக அவரை கூட்டணியில் வைத்துக் கொள்ளும் இப்படி ஒரு கணக்கு இருக்கிறது தெரியாதா ?
Leave a comment
Upload