தொடர்கள்
பொது
அட இதக் கேட்டீங்களா – பால்கி

வனிஷ்கா போட்ட கூக்ளியில் குல்தீப் யாதவ் அவுட்

20250518224541133.jpg

ஆமாம்.

20250518224647406.jpg

தற்போது இந்திய கிரிக்கெட் டெஸ்ட் டீமில் இடம் பெற்றிருக்கும் இடது கை ஸ்பின்னர் குல்டீப் யாதவ் தனது இளமைக்கால நண்பி வனிஷ்காவைத் தான் மணக்கப் போகிறார்.

20250518224609396.jpg

அவர் இந்திய ஆயுள் காப்பீடுக்கழகத்தில் பணி புரிகிறார். நிச்சயதாம்பூலம் ஜூன் 4 ஆம் தேதி லக்னௌவில் நடந்தது.

***************

20250518224719826.jpg

AI 171ல் பிரயாணம் செய்யத் தவறியவர் இப்போது அதே ஃப்ளைட்டை அஹமதாபாதிலிருந்து பிடித்துக்கொண்டு லண்டனுக்குப் பயணம் ஆனார்.

அந்த ஃப்ளைட்டின் நெம்பர் இப்போது AI 159 என்று ஆக்கி விட்டார்கள்.

ஜெயேஷ் ராம்ஜி, விழுந்து நொறுங்கிய அந்த AI 171ல் தான் லண்டன் திரும்பவேண்டியவராம். அவரது விதி என்ன ஆச்சுன்னா, அவரது தாயின் உடல் நலம் திடீரென்று மிகவும் குன்றிப்போனதால் அந்த பிரயாணம் செய்யமுடியவில்லை.

தற்போது அதே ஃப்ளைட் அதே ரூட் அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. டெர்மினல் 2, கேட் 4 ல் “நாலு நாளுக்கு முன்னால் AI 171ல் பறந்திருக்க்வேண்டியவன், என்னோட அம்மாவின் உடல் நிலை மோசமாகவே எனது பிரயாணத்தை இன்று (16.06.2025) ஒத்திப் போட்டேன்” என்று தெரிவித்தவர், எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஏர் இண்டியா மீதும் நம்பிக்கை உண்டு. திரும்ப ஆசைப்படுகிறேன். சதா பயந்துகொண்டிருக்கமுடியுமா?” என்று தொடர்கிறார்.

இதை விட அதிர்ஷ்டம், ட்ராஃபிக் ஜாமில் சிக்கி விமானத்தைத் தவறவிட்டு மரணத்திலிருந்து தப்பித்தாரே.....!!!

*************************

20250518224805787.png

2011ல் ஐபிஎல்லில் புதிதாக அணி சேர்த்த கொச்சி டஸ்கர்ஸ் அடுத்த வருஷமே பேங்க் கியாரண்டீ கொடுக்காததால், ஃப்ரான்ச்சைஸ் ஒப்பந்தத்தை மீறிய குற்றத்திற்காக ஐபிஎல்லிலிருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் தூக்கிவிட்டது. 2012லிருந்து நடந்து வந்த கோர்ட் கச்சேரி தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் கேட்க்கப்பட்டு, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மொத்தமாக கொச்சி டஸ்கர்ஸுக்கு ரூ538 கோடி கொடுக்க உத்திரவிட்டுள்ளது.

*********************

சைப்ரஸில் மோடி......

உலகில் டிஜிட்டல் மூலமாக நடக்கும் பண பரிவர்த்தனையில் 50% இந்தியாவில் நடக்கிறது என்று கூறுகிறார் மோடி.

************************

20250518224916545.jpg

அனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி தான் இன்றைய இளைய தலைமுறையில் 2025ல் பெரும் பணக்கார இந்தியர்கள். இவர்களது இன்றைய சொத்தின் மதிப்பு மட்டும் ரூ. 3.59 லட்ச கோடி.

***************************

2025051822501864.jpg

ஐடி கம்பெனியை ஆள்வது ஃபுட்பால் கிளப்பை நடத்துவது போன்றது எனும் கூகுளின் சுந்தர் பிச்சைக்கு லைனால் மெஸ்ஸி தான் பிடித்த கால் பந்தாட்டக்காரர்.

************************