தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250709010249534.jpg

Heading : மஹாராஷ்ட்டிராவில் விவசாயிகள் தற்கொலை – பால்கி

Comment : உலகில் உள்ள உயிர்கள் வாழ முதுகெலும்பாக இருப்பது விவசாயமே•

Ujjivanam, Chennai

Heading : சோழர் ஸ்பெஷல் ! "பொன்னியின் செல்வனும் பொன் நிற கீரியும் !" - கி.ரமணி

Comment : அருமையான கதை...சோழ மன்னர் தேவாசுர யுத்தத்தில் பங்கேற்றதாக படித்துள்ளேன்

K sreenivasan, சென்னை

Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி

Comment : நிமேஷ் வர்மா .... இவரும் விவசாயி தான்... ஆனால் வித்தியாசமாக யோசனை செய்து லாபம் ஈட்டி இருக்கிறார்.... இதை இந்த தூக்கு போட்டு கொள்ளும் விவசாயிகள் படித்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்

Sriram Srinivasan, சென்னை

Heading : பிச்சை போடுங்கம்மா தாயே...கியூ ஆர் கோடை ஸ்கான் பண்ணுங்க மவராசா.... - மாலா ஶ்ரீ

Comment : Power of technology 👏👏 சமயோசித புத்தியின் உச்சம்👏👏👏

Sriram Srinivasan, சென்னை

Heading : மஹாராஷ்ட்டிராவில் விவசாயிகள் தற்கொலை – பால்கி

Comment : நிறைய ஏரியாக்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதும் ஒரு முக்கியமான காரணம்.... சீதோஷ்ண நிலை மாறுவதால் 10 அ 20 வருடம் முன்பு இருந்த மாதிரி மழை வருவதில்லை..... ஆகையால் இயற்கையை குற்றம் சொல்லாமல், கூட்டு விவசாயம் (co-operative agricultural society) முயற்சிகள் எடுக்க வேண்டும்.... இவ்வாறு செய்தால் செலவு கம்மியாக வாய்ப்பு உள்ளது...மற்றும் விவசாய வல்லுனர்களை வரவழைத்து அந்தந்த இடத்திற்கு ஏற்ப பயிரிட வேண்டும்...

Sriram Srinivasan, சென்னை

Heading : சோழரின் காப்பிய காலம்- I - மரியா சிவானந்தம்

Comment : சோழர்களின் பெருமையை இன்ற எல்லாம் பேசிக் கொண்டிருக்கலாம் என்பதை விவரித்த விதம் நெஞ்சைத் தொடுகிறது• ஐம்பெரும் காப்பியங்கள் என்று கூறும் போதே எத்தகைய புலவர்கள் நம் மண்ணில் வாழ்ந்த, இன்றும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை எழுதிய எழுதிய நல் உள்ளத்திற்கு வணக்கத்துடன் கூடிய நன்றிகள் பல•

கண்மணி, சென்னை

Heading : "நரேந்திர சோழன் ??" -விகடகவி நிருபர்‌‌ குழ

Comment : சூப்பர், திரு• நரேந்திர மோடி அவர்கள் ஊருடன்ஒத்து வாழ், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனப்பாங்கு டன் நம் தமிழ் மண்ணில் தமிழில் பேசி தமிழர்களின் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டார்

Ujjivanam, Chennai

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : மஹா பெரியவாளின் அருள் வாக்கினை அவ்வப்போது மூளைக்கு உரைப்பது போல் நினைவு படுத்தும் திரு • பால்கி அவர்களுக்கு வணக்கங்கள் பல•

Ujjivanam, Chennai

Heading : நட்சத்திரக் கோயில்கள்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : கட்டுரை ஆசிரியர் ஆரூர் சுந்தரசேகர் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன். இதுவரை பரிகாரம் என்ற பேரில் நிறைய கோவிலுக்கு சென்று வந்தேன், ஆனால் எந்த பலனும் இல்லை. சென்ற வாரம் நீங்கள் எழுதிய “நட்சத்திரக் கோயில்கள்” கட்டுரையை படித்தவுடன் நல்லாடையில் உள்ள சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்ற ஞாயிற்றுக்கிழமை சென்று வந்தேன். கைமேல் பலன் நேற்று காலையில் 31st July எனக்கு பதவி உயர்வும், எனது சொந்த ஊருக்கு அருகிலேயே Transferம் கிடைத்தது. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

பா.புகழேந்தி , நாமக்கல்