தொடர்கள்
கதை
வரம் தந்த சாமி சுந்தர மணிவண்னன்

20250813085320691.jpeg

“உள்ளே வா “ அந்த பெல் அழைத்தது.

உள்ளே சென்று பிளட் டெஸ்ட் ஃபைலை டாக்டரிடம் நீட்டினேன். ரிசல்ட்டைப் பார்த்த பின், டாக்டர் கற்பகம்,

“இப்ப எப்படி இருக்கு” என்னிடம் கேட்டார்.

“கொஞ்சம் பரவாயில்லை . மணிக்கட்டு எலும்பு, கை விரல் எலும்பு எல்லாம் லேஸா வலிக்குது டாக்டர்.

“மற்றபடி வேற எங்கையும் வலி இல்லையே. வேற ஒரு மாத்திரை எழுதித் தரேன். இன்னும் ஒரு மாசத்துக்கு இதையும் சேர்த்து சாப்பிடுங்க. சரியாயிடும்.

ரிவ்யூ அடுத்தமாஸம்….. என்று சொல்லிக் கொண்டே தன் டைரியை புரட்டி தன் அவைலபிலிட்டியை பார்த்து ஒரு தேதி சொன்னார்.

“Ok டாக்டர்”... நானும் அந்தத் தேதியைக் குறித்துக் கொண்டேன்.

நான் கிளம்பும் முன்,

“ இப்பெல்லாம் நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்க டாக்டர். உங்க அப்பாய்ண்ட் மெண்ட் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு” டாக்டரைக் கேட்டேன்,

சிரித்துக் கொண்டே “ஆமாம் மேடம் . இப்ப இன்னொரு ஆஸ்பிடலுக்கும் போறேன்”

“காலேஜ் என்ன ஆச்சு டாக்டர்”.

காலேஜ்…. அத…..ரிசைன் பண்ணிட்டேன்.

டாக்டர் கற்பகம் Rheumatologist . UKவில் படித்தவர். எப்பவும் பிஸி. பேப்பர் Presentation, Seminar அட்டெண்ட் பண்றதுன்னு இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சுற்றிச் சுற்றி வருபவர்.

சென்னையில் இருக்கும் இரண்டு பிரபல மருத்துவ மனைகளில் visiting doctor.

சிட்டியில் இருக்கும் ஒரு மெடிகல் கல்லூரியில் பேராசிரியர்.

“ஏன் டாக்டர் ரிசைன் பண்ணீங்க. பசங்க உங்கள மிகவும் மிஸ் பண்ணு வாங்களே டாக்டர் ”.

“ அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. இப்ப படிக்கிற பசங்க ரொம்பவே ஸமார்ட். அந்த மாதிரி அவுங்க நினைக்கவே மாட்டங்க”

“மெடிகல் ஸ்டூடண்ட்ஸ் டாக்கடர்”

“ஸோ வாட்”

“நீங்க சொல்லி கொடுக்காம சப்ஜெக்ட் எப்படி புரியும்”.

“நீங்க வேற. அவுங்க எனக்குச் சொல்லிக் கொடுப்பாங்க”

“என்ன சொல்றீங்க டாக்டர் ”.

“ஆமாம். அவுங்களுக்கு சொல்லிக் கொடுக்க கூகுள் வாத்தியார் இருக்கார்”

“கூகுளில் எல்லாம் கத்துக்க முடியுமா டாக்டர்”

முடியுதோ? இல்லையோ….அது போதுங்கிறாங்க.

“AI ன்னு ( Artificial intelligence ) இன்னொன்னு புதுசா வந்திருக்காமே.

“அது வேற வந்ததுன்னா என்ன ஆகும்”.

“அது வந்த பிறகு தான் என்ன ஆகும்னு தெரியும்”.

“நீங்க பண்ணுற வேலையை அது எப்படி பண்ண முடியும்”.

“ என்ன நோய்னு துல்லியமா கண்டு பிடிச்சு சொல்லிடுமாம்”.

“பரவாயில்லையே. அப்ப உங்களுக்கு வேலை பளு குறையும்”

“வேலை பளுவ மட்டும் குறைக்காது.நிறைய பேருக்கு வேலை இல்லாமல் பண்ணிடும்”. டாக்டர் கவலையோடு தான் சொன்னார்.

“பத்து டாக்டர் இருக்கிற இடத்தில், ஒரு டாக்டர் இருந்தா போதும்னு குறைச்சிடும்”.

“இப்படி போனால் டாக்டருக்கு படிக்கிறவங்க கதி என்னவாகும்”.

“வேகமா வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்துல அவுங்க, அவுங்க கதியை அவங்களே முடிவு பண்ணும் படி ஆயிடும்”.

“Human values க்கு என்னதான்மதிப்பிருக்கும்”

“என்ன மதிப்பு இருக்கும்னு தெரியல”

Super intelligence AI வரப்போகுது. அத்தோட மனுஷன் போட்டி போடணும்.அது மனுஷனையே over take பண்ணிடுமாம்,

அப்ப அது மனுஷாளையே மண்டி யிட வச்சுடும்.

அப்படியெல்லாம் ஒண்ணும் ஆயிடாது, புராணக் கதையில் படிக்கலையா.

“வரம் தந்த சாமி தலையிலேயே கை வைச்சு பார்க்கிறது”.

ஆண்டவன் கிட்ட மோத முடியுமா?”.

அது போலத்தான் இதுவும்.

"மனுஷ்யனுக்கு மூளையை பகவான் வச்சான்.

மெஷினுக்குள் மூளையை மனுஷ்யன் வச்சான்.

படைச்சவன் பார்த்துப்பான் விடுங்க"... டாக்டர் கற்பகம் நம்பிக்கையுடன் சொல்லி முடித்தார்.

நானும் மெல்ல நகர்ந்தேன்.