“அக்கா… என் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியல. எதாவது செய்ய முடியுமா?” – கண்களில் கண்ணீருடன் கேட்டாள் அந்த 19 வயது பெண்மணி, மகப்பேறு வார்டில்.
மீனாவின் கண்களில் சிறிதும் தயக்கம் இல்லை. “
பிறந்த குழந்தைக்கு 20 மில்லியிருந்து 40 மில்லி மட்டுமே தேவைபடும் என்று ஒரு பாட்டிலில் பாலைக் கொடுத்தாள்.
அன்று அந்தக் குழந்தையின் மூச்சுக்கு உயிர் கொடுத்தது அவளது தாய்ப்பால்.
“மீனா... உன் பசங்களுக்கு மட்டும் பால் கொடுத்தால் போதாதா? ஏன் எதுக்கு இந்த அவதாரம்?"
அம்மாவின் கேள்வியோடு மாமியாரின் கேள்வியும் சேர்ந்தது.
“என் குழந்தைத் தேவைக்குக் குறைவாகத்தான் பால் குடிக்கிறான். ஆனா எனக்குப் பால் நிறைய வருகிறது,”
“அம்மா… என் பையனுக்குப் போதும் தான். ஆனா இந்த ஒரு பையனா என் உலகம்? என் பால் இன்னொரு பசங்க வாழ, மூச்சு எடுக்க உதவும்னா, அது தான் நிஜமான தாய்மை." என்றாள் மீனா..
அந்த நகரத்தின் பொது அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆன மீனாவுக்கு அது இரண்டாவது பிரசவம்.
இரண்டாம் பிரசவத்தின் பின், பால் சுரப்பு அதிகமாக இருந்தது.
“நான் அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பால் கொடுத்த மாதிரி “. கொஞ்சம் தானமாகப் பால் கொடுக்கலாமா? நம்ம NICU-( Neonatal intensive care unit.)ல இருக்குற பசங்க தாய்ப்பால் இல்லாமல் துடிக்குறாங்க."டாக்டர்.
“நிச்சயம் கொடுக்கலாம் மீனா இந்த மாதிரி உயர்ந்த
எண்ணத்தை கொண்டுள்ள உன்னைப் பாராட்டுகிறேன்” என்றார் டாக்டர் பவானி..
தாய்ப்பாலை சேமிக்கத் தேவையான ஸ்டெர்லைட் பாட்டில்கள், குளிரூட்டும் கருவிகள், பால் சேமிப்பு நடைமுறைகள் – இவை எல்லாம் மருத்துவமனை அளித்தன.
அந்த நாளிலிருந்து மீனா ஆரம்பித்த சேவை – ஒரு நாள், இரண்டு நாள்… ஒரு வாரம், ஒரு மாதம் தொடங்கி … மொத்தம் 22 மாதங்கள்.
ஆரம்பத்தில் எடை குறைவு ஏற்பட்டதோடு, அறிவு கெட்டவள் என்ற கெட்ட பெயர் கிடைத்தது.ஆனால் தாய்பால் பம்ப் பண்ணிய பிறகு தேவையற்ற கலோரிகள் குறைந்து மட்டுமல்ல, உடம்பு ஆரோக்கியமாக ஆனது.
22 மாதங்களில் பால் வங்கிக்கு அவள் தானமாக வழங்கிய பால் அளவு மொத்தம் 300 லிட்டர்.
பூமியில் அவள் பெற்ற குழந்தை இரண்டு. ஆனா அவளால் உயிர் பெற்றவர்கள் ஆயிரம்.
ஆஸ்பத்திரி பால் வங்கிக்கு சென்று தினமும் பால் பம்ப் பண்ணுவது மீனாவுக்கு வழக்கமான செயலாக இருந்தது..
மீனா ஒருஹோம் மேக்கர் .. கணவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை.
கணவன் கார்த்திக்கும் முதலில் புரியாமல், தன் அம்மாவைப் போல் எதிர்த்தான்.
.“இல்லை கார்த்திக் நான் கொடுத்தது என்னவென்று யோசித்தேன்… வெறும் பாலை தான்.!
ஆனால், அதனால்தான் ஒரு குழந்தை மூச்சுவிட முடிந்தது… இன்னொரு குழந்தை காய்ச்சலை கடந்து வந்தது”…
“நம்ம பசங்க மாதிரி தான் மத்த பிள்ளைகளும் நீ செய்து வருவது புனிதமான செயல் புரிந்துகொண்டேன் மீனா”என்றான் கார்த்திக்.
“உன் நல்ல எண்ணத்துக்கு ஒரு சல்யூட் .”
“ஒரு நாள் ஒரு பெரியவர் கண்களில் கண்ணீருடன் வந்து சொன்னார்.
"அம்மணி … என் பேரக்குழந்தைக்குப் பால் குடிக்க முடியலன்னு சொன்னாங்க.”
உன் பெயர் சொன்னாங்க… நான் வாங்கிக் கொடுத்தேன் என் பேரன் இப்ப உயிரோட இருக்குறதுக்கு நீங்க தான் காரணம்."
அந்தப் பெரியவர் மீனாவுக்கு நன்றி சொன்னார்..
ஆனாலும், இதற்குப் பின்னாலிருந்த உண்மையான சக்தி – மீனாவின் மனதினுள் இருந்த தாய்மை தான்.
இவளின் சேவையைப் பாராட்டி அந்த ஆஸ்பத்திரியும், நகரத்தின் ரோட்டரிகிளப்பும் கௌரவித்தது.
ரோட்டரி சங்க தலைவர் பாராட்டி பேசும் போது,
“உலகத் தாய்பால் தினம் கொண்டாடும் இந்த வேளையில், மீனா பால் வங்கிக்கு இது வரை 300 லிட்டர் பால் கொடுத்துருப்பது இந்தியாவில் இது முதல் முறை”.
இதற்கு அங்கீகரமாக இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்களில் மீனா பெயர் இடம் பெற்றுள்ளது.
“தாய்மை என்பது உணர்வு.
ஆனால் சில தாய்மைகள் — சமூகத்தில் வேரூன்றும் உயிர்ப்பு!”
“இது ஒரு சாதனை இல்லை. இது ஒரு தாய்மைச் சாட்சியம்.
இது ஒரு உணர்வுகளின் புனித ஓட்டம்”.
டாக்டர் பவானி தன் உரையில்
“மீனாவைப் போல ஒரு தாயின் உள்ளத்தால் மட்டுமே, தாய்மையின் துளிகள் — நூற்றுக் குழந்தைகளின் உயிராக்க துளிகளாக முடியும்”.
“
மீனா மூலம் தாய்பால் குடித்த சிறுவர்கள் சிறுமிகள் —
அவர்களின் வாழ்வில் , உள்மனதில் ஒரு குரலை மறக்காது சொல்லும்:
“எனக்குத் தெரியாமலே ஒரு தாய் எனக்காக ஈரமாக மாறினாள்.” என்று.
ஆனால் மீனா அதைக் கூறிக்கொள்ளவோ, புகழப்படவோ விரும்பவில்லை”.
பாராட்டுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய மீனா,
"நான் என் பசங்களுடன் இருக்கேன். அவங்களை நல்லபடியாக வளர்த்து என் வாழ்க்கையை நடத்தறேன்”.
அன்னிக்கு இன்னொருத்தரு பசங்க அழக்கூடாதுன்னு ஏதாவது செய்ய முடியும்னு தோணிச்சு.
தாயாக இருப்பது ஒரு பாக்கியம். ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்போல் வாழ்வு தருவது – அது தெய்வீகச் செயல
கார்த்திக் பெருமைப்பட்டான்.
அவள் சேவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
Leave a comment
Upload