தொடர்கள்
விகடகவியார்
பற்றி எரியும் நேபாளம் !! இந்தியாவுக்கு பாதிப்பு வருமா ?? - விகடகவி நிருபர் குழு

20250812233458419.jpeg

நேபாளம் இந்தியாவின் பக்கத்து வீடு மாதிரி இந்தியாவிற்கு வர நேபாளத்துக்கு போக விசா எல்லாம் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் அங்கு இந்திய கரன்சி செல்லுபடியாகும்.

இந்திய கரன்சி தந்து நாம் பொருள் வாங்கலாம்.

நேபாளில் உள்ள முக்திநாத் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. எனவே பெரும்பாலான இந்துக்கள் முக்திநாத் போகப் பிரியப்படுவார்கள்.

பசுபதிநாத் சிவாலயமும் இந்தியர்களுக்கு பிடித்தமான ஒரு சிவஸ்தலம்.

நேபாளத்தின் வருவாய் என்பது பெரும்பாலும் இந்தியாவை நம்பி தான்.

இந்தியாவில் எல்லா இடங்களில் நேபாளிகள் பணிபுரிகிறார்கள். தவிர இந்தியர்களுக்கு நேபாளம் பிடித்தமான ஒரு சுற்றுலா தளம்

நேபாளம் என்பது பனி சூழ்ந்த இமயமலை ஏற்றத்தாழ்வான ஒரு மலைப்பகுதி ரம்யமான இயற்கை காட்சிகொண்ட ஒரு சமவெளி தான் நேபாளம்.

கிட்டத்தட்ட 1.48 மற்றும் சதுர கிலோமீட்டர் கொண்ட நான்கு பக்கமும் நிலம் சூழ்ந்த நேபாளத்தின் மக்கள் தொகை மூன்று கோடி தான்.

நேபாளத்தில் முதலில் மன்னர் ஆட்சி இருந்தது. பிறகு மக்களாட்சிக்கு அது மாறியது. அதன் பின்னணியில் சைனா இருந்தது என்ற ஒரு பேச்சு அப்போதே இருந்தது

. நேபாள கம்யூனிஸ்ட் ஐக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் ஒரு தொழிற்சங்கம் அளவுக்கு தான் அதன் வளர்ச்சி இருந்தது போகப்போக தேர்தல்ஆட்சி என்று அந்தக் கட்சி அதிகாரத்துக்கு வந்தது.

பிரதமர் கே.பி.ஷர்மா இந்திய எதிர்பாளர் சைனா ஆதரவாளர் என்ற பேச்சு கூட உண்டு.

அதற்கேற்ற படி நேபாளத்திற்கு சைனா நிறைய உதவியும் செய்தது.

அப்படிப்பட்ட நேபாளம் இப்போது வன்முறை காலமாக மாறிவிட்டது.

அகிம்சையை போதித்த புத்தர் பிறந்த பூமியில் இன்று அகிம்சையும் சரி அமைதியும் சரி கேள்விக்குறி என்று ஆகிவிட்டது.

பிரச்சனைக்கு ஆரம்பம் சமூக ஊடகங்களுக்கு தடை என்பதுதான்.

கூட்டணி அரசின் பிரதமர் பதிவு செய்யாத சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பது என்ற முடிவை ஆகஸ்டு 25-ஆம் தேதி அறிவித்தார்.

ஏற்கனவே நேபாள நீதிமன்றம் பிறப்பித்த ஆணையைத்தான் நேபாள் அரசு செயல்படுத்த முன்னெடுத்தது.

இதன்படி அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் இது நேபாள அரசு ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஒரு ஆணை பிறப்பித்தது.

அந்த குறிப்பிட்ட காலக்கெடுக்குள் பதிவு செய்யாத சமூக ஊடக அனைத்தையும் இந்த மாதம் நான்காம் தேதி தடை செய்யப்பட்டன.

ஆட்சிக் கவிழ்ப்பு கலவரம் அமைச்சர்களுக்கு அடி உதை உயிரிழப்பு இவை எல்லாவற்றிற்கும் இந்த தடை தான் காரணம்.

முகநூல், எக்ஸ், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்,யூடியூப், கிளப் ஹவுஸ், த்ரெட்ஸ் இப்படி 26 முன்னணி தளங்கள் முடக்கப்பட்டன.

எல்லா நாடுகளைப் போல நேபாளத்திலும் இந்தத் தளங்களுக்கு நேபாள மக்களும் அடிமையாக இருந்தார்கள்.

இந்த 26 நிறுவனங்களும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு சொந்தமானவை.

இவர்கள் எல்லாமே மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் என்பதால் சிறிய நாடான நேபாள் அரசு உத்தரவை பெரிது படுத்தவில்லை.

அரசாங்க அறிவிப்பிலும் நிறைய குழப்பம் என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.

இந்த வலைதளத்துக்கு சர்வர் எனப்படும் கணினி மையம் நேபாளத்தில் இல்லாதது,

அவர்களுக்கு அதிகாரப்பூர்வமான அலுவலகங்கள் நேரடி பிரதிநிதிகள் இல்லாதது போன்றவை.

இதுவரை இந்த வலைதளங்கள் மூலம் நேபாளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்காவும் சீனாவும் முயற்சி செய்தது என்பதும் ஒரு காரணம் என்கிறார்கள்.

அமெரிக்கா மற்றும் சீனாவிடம் விரட்டி விடப்பட்ட அரசு நிறைய மானியங்களை வாங்கி அனுபவித்தது.

ஒரு கட்டத்தில் பிரதமர் ஒலி சீனாவை ஓரங்கட்டி விட்டு அமெரிக்காவுடன் கைகோர்த்ததும் ஒரு காரணம் என்ற விமர்சனமும் தற்போது வரத் தொடங்கி இருக்கிறது.

சீன வலைத்தளங்கள் இப்படி பொய் பிரச்சாரம் செய்கிறது என்றும் அமெரிக்க வலைத்தளங்கள் மறுத்து கருத்து தெரிவித்து பிரச்சினையை பெரிதாக்கினது தான் இந்த தடைக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

சென்ற ஆண்டு மாணவர்கள் எழுச்சி காரணமாக அண்டை நாடான வங்கதேசத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு அதன் பிரதமர் இந்தியாவில் அடைக்கலமானர்.

இப்பொழுது இன்னொரு அண்டை நாடு நேபாளத்திலும் இதே பிரச்சனை இந்த நாட்டுப் பிரதமரும் ஏதோ ஒரு நாட்டில் அடைக்கலமாக தலைமறைவாகிருக்கிறார்.

'ஹாமி நேபாள்' என்ற பதாகையுடன் பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இவர்களுக்கு சரியான வழிகாட்டியோ தீர்க்கமான சிந்தனையாளர்களும் யாரும் இந்த அமைப்புகளுக்கு தலைமை ஏற்கவில்லை அதுவும் இந்த குழப்பத்துக்கு காரணம்.

மொத்தத்தில் நமது அண்டை நாடுகள் கலவர பூமி என்பது தொடர்கதையாக இருப்பதை இந்தியா வேடிக்கை பார்க்காது என்பது மட்டும் நிச்சயம்.

சமூக வலைதளங்களில் இந்த ஜென் Z மக்கள் மோடி போன்ற ஒரு தலைவர் நம் நாட்டுக்கு வேண்டும் என்று சொல்வது போலவும் உலா வருகிறது.

20250812233946132.jpeg

ஏதோ நேபாளத்தில் நிலைமை சீரானால் சரி.

ஏராளமான இந்திய மக்கள் நேபாளம் வழியாக கைலாய பயணம் மேற்கொண்டு வரும் இந்த வேளையில் நம் நாட்டு மக்கள் நலமாக சென்று திரும்ப வேண்டும்.