தொடர்கள்
விகடகவியார்
மீண்டும் கமல் ரஜினி -லைட் பாய்

20250812233030750.jpeg

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். வித்தியாசமான கதை வித்தியாசமான நடிப்பு என்று கமலும் தமிழ் சினிமாவில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். அவர் சூப்பர் ஸ்டாரென்றால் இவர் உலகநாயகன். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. கமலஹாசன் கதாநாயகன் நடித்த அபூர்வ ராகம் படத்தில் தான் ரஜினியின் என்ட்ரி.

மூன்று முடிச்சு, 16 வயதினிலே போன்ற படங்களில் கமலுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

கிட்டத்தட்ட 18 படங்கள் மற்றும் ஒரு இந்தி படம் என்று இருவரும் இணைந்து நடித்தார்கள்.

இருவரும் இணைந்து நடிக்க வேண்டாம் என்று நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்பில் முடிவு செய்தார்கள்.

சொல்லப்போனால் இது கமல் எடுத்த முடிவு, ரஜினிகாந்த் அந்த முடிவுக்கு சம்மதித்தார் அப்படித்தான் சொல்ல வேண்டும்.

தற்சமயம் நாம் இருவரும் மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகர்கள் நமக்கு பணம் தேவை இருவரும் சேர்ந்து நடிப்பதால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் நமக்கு வருமானம் பாதியாக பங்கு பிரிக்கப்படுகிறது. நாம் அது ஏன் இழக்க வேண்டும் என்று எடுத்து சொல்லி தான் கமல் ரஜினியை சம்மதிக்க வைத்தார்.

இருவரும் இணைந்து நடிக்கப் போகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்ட கமல் சொன்ன பிஸ்கட் உதாரணம் தான் எதார்த்தமான உண்மை.

ஒரு பிஸ்கட்டை பிரித்து ஆளுக்கு பாதியாக தந்தார்கள். நாங்கள் முழு பிஸ்கட் சாப்பிட முடிவு செய்தோம் என்றார் இதுதான் உண்மை. இதை பொது வெளியில் இருவரும் சேர்ந்து அறிவித்தார்கள்.

எப்படி தனியாக பிரிந்து நடிப்போம் என்று கமல் முடிவு செய்து அதை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டது போல் இப்போது இணைந்து நடிப்போம் என்று கமல் முடிவு ரஜினி அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

வியாபார ரீதியாக நாங்கள் இணைகிறோம் என்று வெளிப்படையாக உண்மையையும் சொல்லிவிட்டார் கமல். ரஜினி கமல் இணைப்பு என்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்ற விஷயம் தெரிந்த இரண்டு அனுபவஸ்தர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதற்காக இந்திய சினிமாவே காத்திருக்கிறது.

கமல் ரஜினி இணைந்து நடித்த படங்களில் கமல் தான் பேசும் பொருளாக இருந்திருப்பார் ரஜினிக்கு ஒரு முக்கியமான இடம் இருந்திருக்காது. ரஜினி ஜஸ்ட் லைக் தட் அதை எடுத்துக் கொண்டார். மேலும் அப்போது கமல் ஒரு சீனியர் நடிகர் , எனவே அந்த உண்மை தெரிந்து ரஜினி நடித்தார்.

சமீபத்திய கமல் ரஜினி படங்கள் அவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியிருந்தாலும் பெரிய அளவு வெற்றியை தரவில்லை.

லப்பர் பந்து, டூரிஸ்ட் ஃபேமிலி போர் தொழில் போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் தயாரிப்பாளர் கஜானாவை நிரப்பியது .

கமல் மிகப்பெரிய அறிவாளி ஆனாலும் அரசியலில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் சறுக்கல் தான்.

அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி ரசிகர்களை ஏமாற்றியவர் ரஜினி.

இப்படிப்பட்ட இருவர்தான் மீண்டும் இணைகிறார்கள்.

இதை எல்லாம் ரசிகர்கள் யோசிக்காமலா இருப்பார்கள் .

கூட்டணி ஜெயிக்குமா ?? பொறுத்திருந்து பார்ப்போம். !!!