தொடர்கள்
பொது
அட இதக் கேட்டீங்களா? – பால்கி

உப்புமா - சூப்பர் ஆரோக்கிய உணவு

20250812224903756.jpg

குடல் ஆரோக்கியத்துக்கான காலை உணவுகளில் உப்புமாக்கு முதலிடம் என்கிறார் ஏய்ம்ஸ், ஹார்வார்ட், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர் சௌரப் சேதி.

**************************************************************

மாட்டிறைச்சியும் சல்மான் கான் குடும்பமும்

20250812225054191.jpg

சல்மான் கானின் தந்தை சலிம் கான் சொல்கிறார்.

எனது முதல் மனைவி ஒரு ஹிந்து. நானும் ஹிந்து சமயத்தில் டெண்டூல்கர்ஊரியவர்களுடன் பழகியவன். முகமது நபியின் போதனைப்படியே மாட்டிறைச்சியை நாங்கள் சாபிடுவதில்லை. நான் மட்டுமில்லை, எனது குடும்பத்தினர் அனவருமே இதனைக் கடைப்பிடிக்கின்றோம். பசுவின் பால் தாயின் பாலுக்கு இணை அதனால் பசுவை வதை செய்வதும் கூடாது என்று நபிகளின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார்.

****************************************

சஞ்சய் தத் உணவகம் ஆரம்பித்தார்.

2025081222472919.jpg

அது என்ன எந்த துறையிலும் உள்ள பிரபலங்கள், சச்சின் டெண்டூல்கர், விராட் கோலி, சுனில் ஷெட்டி, போன்றோரைப் போலவே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் ஒரு உணவகத்தை ஆரம்பித்துவிட்டார்.

பெயர் : சோலைர்.

*************************************

விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு ட்ரெய்னிங்க் கொடுங்க

20250812224648873.jpg

மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்ற நீதிபதியின் ஆணைப் பார்த்துவிட்டு அதில் அவருக்கு அடிப்படை சட்ட அறிவும் இல்லை எனத் தெளிவாகிறது,

ஆதலால் அந்த நீதிபதியின் ஆணையை ஒதுக்கிய கையோடு மாவட்ட நீதிபதி அந்த விசாரணை நீதிமன்ற நீதிபதி வர்ஷா பாலவிக்கு தக்க பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கூறி ஆணை பிறப்பித்து உள்ளது.

**********************************************

பெங்களூரு டாக்டர்கள் எப்படி மற்ற டாக்டர்களை விட வெற்றிப்பாதையில் இருக்கிறார்கள்?

20250812230133303.jpg

ஸ்டெதாஸ்கோப், பிரிஸ்கிரிப்ஷன் …இதையும் தாண்டி நோயாளிகளிடையே பெங்களூரு டாக்டர்கள் வெற்றி காண்பது அவர்களுக்கு குறைந்த பட்சமாக நான்கிலிருந்து ஐந்து மொழிகள் தெரிந்திருப்பதால்தான்.

மனித சேவை செய்ய மொழிகள் தேவை தான்

*****************************************************************