வீசத்தொடங்கிய லேசானக் காற்று
புயலெனத் தோன்றியது
உதிர்ந்து கொண்டிருக்கும்
ரோஜா மலருக்கு!
கொஞ்ச நேரம்
வலது புற இலையிலும்
கொஞ்ச நேரம்
இடது புற இலையிலும்
சாய்ந்தபடி தன்னை
நிலைபடுத்திக் கொண்டிருந்தது.
மேலிருந்த இலை
சற்றுக் குனிந்து
காற்றின் வேகத்தைக்
குறைக்க முற்பட்டது!
முள்கள் யாவும்
சற்றுத் தடிமனான தண்டினால்
பற்றிக் கொண்டு
பூவை அசையாமல் காத்தன!
கவனித்துக் கொண்டிருந்த
ரோஜாப்பூ கேட்டது
என் துன்பத்தைத் தங்கள்
துன்பமாகக் கருதி
என்னைக் காக்க இவ்வளவு
துயருற்றுப் போராடுகிறீர்களே,
இதற்குக் காரணம் தான் என்ன?
இலைகளும், முள்களும்,
தடிமனானத் தண்டுகளும்
கோரஸாகச் சொன்ன வார்த்தை
"நாங்கள் ஒன்றும் மனிதர்களல்ல"
***
Leave a comment
Upload