க்யோங்கீ ஸாஸ் பீ கபி பஹு தீ 2
ஏன்னா! மாமியாரும் முன்னே மருமகளாயிருந்தவள் தானே!!!.
3 ஜூலை 2000 முதல் 6 டிசம்பர் 2008 வரை ஸ்டார் ப்ளஸ் தொலைக் காட்சியில் பிரசாரமாகிய ஒரு நீஈஈஈஈள குடும்ப தொடர் நிகழ்ச்சி.
அனில் நாக்பால், ராஜேஷ் ஜோஷி, ஆனந்த் காந்தி விபுல் மெஹ்தா என இந்த தொடரின் கதையாளர்களாக இருந்து வந்துள்ளனர்.
மருமகள் துளசியாக நடித்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவின் ஸ்மிரிதி இரானி. சின்னத்திரை நடிகையாயிருந்து 2014ல் பாஜகவில் இணைந்து வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.
சந்தோஷ் பட், நிவேதிதா பாசு, சாந்தாராம் வர்மா, அவிரூப் மஜும்தார், தீபக் ஷர்மா என பலர் டைரக்ட் செய்துள்ளனர்.
[முதல் சீசனில் ஸ்மிரிதியும் தயாரிப்பாளர் ஏக்தா கபூரும்]
1883 எபிசோட்கள் ஓடியது.
க்யோங்கீ ஸாஸ் பீ கபி பஹு தீ 2”, 2014 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய நாடாளுமன்றத்தில் பணியாற்ற வேண்டியிருந்ததால் நான் அதிலிருந்து விலகிவிட்டேன்' என்று முதல் பாகத்தில் துளசியாக உலா வந்த ஸ்மிருதி இரானி கூறுகிறார்.
ஜூலை 3, 2025 அன்று முதல் திரையிடப்படும் க்யோங்கீ ஸாஸ் பீ கபி பஹு தீ 2” சின்னத்திரை தொடரில், அதி முக்கிய வேடத்தில், துளசியாக ஸ்மிருதி இரானி மீண்டும் நடித்து வருகிறார்
2014 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் அலுவலகத்திலிருந்து நீங்கள் சத்தியம் செய்ய வேண்டும் என்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எனவே, நான் இருவரிடமிருந்தும் விலகிச் சென்றேன். ரிஷி கபூர் இப்போது வெளியேறச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது, ஏனென்றால் உங்கள் நாட்டிற்கு சேவை செய்வது ஒரு படம் செய்வது அல்லது தொலைக்காட்சி செய்வதை விட பெரிய சேவை.
அது சரி! இன்று இதை யார் கேட்டார்கள்?
க்யோங்கீ ஸாஸ் பீ கபி பஹு தீ ஒரு காலத்தில் குடும்ப விழுமியங்களின் அடையாளமாக நின்று, ஒரு சிறந்த பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்வையாளர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம், ஆனால் பெண்கள் சமையலறையைத் தாண்டி கனவுகளைத் துரத்தும் இன்றைய காலகட்டத்தில் இது உண்மையில் பொருத்தமானதா?
இன்றைய 2025 ஆம் ஆண்டில் இந்த க்யோங்கீ ஸாஸ் பீ கபி பஹு தீ நமக்குத் தேவையா?
• புதிய இந்தியா க்யோங்கீ ஸாஸ் பீ கபி பஹு தீ பார்க்க ஆர்வமாக உள்ளதா?
• துளசி விரானியை நம் வாழ்வில் மீண்டும் கொண்டு வருவது ஒரு படி பின்னோக்கியா அல்லது முன்னோக்கியா?
• பெண்களை வளர்ப்பதை மகிமைப்படுத்தும் பழங்காலக் கதைகளை மறுசுழற்சி செய்வதில் நாம் திருப்தி அடையும் அளவுக்கு படைப்பாற்றல் குறைவாக இருக்கிறோமா? என்ற கேள்விகளுக்கிடையே இந்த தொடரின் பாகம் 2 வெளிவந்திருக்கிறது.
சில பயணங்களை ஒருபோதும் மீண்டும் எடுக்கக்கூடாது. அவை பின்னால் விடப்பட்டு நினைவுகளாகப் போற்றப்பட வேண்டும்.
க்யோங்கீ ஸாஸ் பீ கபி பஹு தீ போன்ற ஒரு நிகழ்ச்சி கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு அதே கதாபாத்திரங்களுடனும் உள்நாட்டு நல்லொழுக்கத்தின் அதே புராணங்களுடனும் திரும்பும்போது, அது ஒரு கேள்வியை எழுப்புகிறது: என்ன மாறிவிட்டது - என்ன இடைநிறுத்தப்பட்டுள்ளது?
க்யோங்கீ ஸாஸ் பீ கபி பஹு தீ சீசன் 2 பிரீமியருக்கு முன்னதாக தொடரின் தயாரிப்பாளர் ஏக்தா கபூரும் ஸ்மிருதி இரானியும் நாத்வாரா கோயிலுக்குச் சென்று ஆசி பெற்று வந்தனர்.
[தற்போதைய 2வது சீசனில் ஸ்மிரிதியும் தயாரிப்பாளர் ஏக்தா கபூரும்]
தொடரின் கதையுடன் மக்கள் ஒன்றிப் போனதிற்கு ஒரு உதாரணம். கதாபாத்திரமான மிஹிர் விரானி இறந்ததை மக்களால் ஏற்றுக்கொள்ள இயலாது போனது மட்டுமல்ல. அந்த பாத்திரத்தில் நடித்த அமர் உபாத்யாய், “மக்கள் தன்னை கட்டிப்பிடித்து அழுததை நினைவு கூர்ந்தார்”.
க்யோங்கீ ஸாஸ் பீ கபி பஹு தீ 2: ன் ப்ரீமியர் எபிசோட் மட்டும் ஸ்டார் பிளஸில் 15.4 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது, இது சமீபத்திய வரலாற்றில் அதிக மதிப்பிடப்பட்ட புனைகதை பிரீமியர் ஆகும்.
தற்போது மருமகள் துளசி மாமியார் ரோலில். அதாவது, மாமியார் துளசி-கணவர் மிஹிரின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளைக்கொண்டு இந்த சீசல் நகர ஆரம்பித்துவிட்டது.
கியூங்கி சாஸ் பி கபி பஹு தியின் துளசி இந்தியா முழுவதும் ஒவ்வொருவரின் வீட்டுப் பெயரானார். ஒன்பது ஆண்டுகளாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி இந்தி தொலைக்காட்சித் துறையின் அதிகமாக வரவேற்கப்பட்ட கிளாசிக் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
2008 இல் நிகழ்ச்சி முடிந்ததும், அது ஒரு சகாப்தத்தின் முடிவு போல இருந்தது, இப்போது, 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வந்து இணையத்தை கலக்குகிறது.
"25 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த நிகழ்ச்சியும் மீண்டும் மீண்டும் வருவதில்லை, முதலில், அந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, தொலைக்காட்சியின் பயணத்தை வெவ்வேறு வழிகளில் நாங்கள் மேற்கொண்டுள்ளோம், அதற்காக பார்வையாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். OTT-யில் கூட மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு இவ்வளவு அன்பைக் கொடுப்பார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, அது அருமை." என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார் ஸ்மிரிதி.
சின்னத்திரையில் ஸ்மிரிதி இரானியின் வருகையினால் தொலைக்காட்சி கலைஞர்களுக்கான தேசிய விருதுகளை
ரூபாலி கங்குலி கோருகிறார், நல்ல மாற்றத்தை கொண்டு வரும் என்றும் நம்புகிறார். ரூபா, ஸ்மிரிதி தற்போது சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னர் முதல் முன்னணி நடிகை.
2024 மக்களவை தேர்தலில் தோல்விக்குப்பிறகு ஸ்மிரிதி இரானிக்கு இது ஒரு தாய்வீடு கொடுக்கும் அரவணைப்பு என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு எபிசோடுக்கு சுமார் ரூ14 லட்சங்கள் இவருக்கு சம்பளம். சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களில் இவர் தான் அதிகம் சம்பளம் பெறுபவர்.
Leave a comment
Upload