தனிநபர்கள், HUFகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு, (சென்ற நிதியாண்டு 2024-25) மதிப்பீட்டு ஆண்டு 2025-26 க்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15, 2025 என்று ஜூன் முதல் வாரத்திலேயே நிதி அமைச்சகம் அறிவித்துவிட்டிருந்தது. எனில் சுளையாக நான்கரை மாதங்கள் இருக்கின்றன என்று எனது 7.6.2025 நாளிட்ட விகடகவியில் வந்த கட்டுரையில் தெரிவித்துமிருந்தேன்.
கட்டுரை லிங்க் இதோ கீழே:
https://www.vikatakavi.in/magazines/427/14527/Income-tax-returrn-filing-for-AY-2025-26-few-suggestions.php
அதற்கேற்றார்போல் முன்கூட்டியே தேவையான வருமானம் சம்பந்தப்பட்ட தரவுகளை ஓரிடத்தில் சேர்த்து வைத்திருத்தல் பற்றியும் அதில் சொல்லியிருந்தேன்.
ஆனால் செப்டம்பர் முதல் வார முடிவிலிருந்தே வருமான வரி சம்பந்தப்பட்ட வெப்சைட்டில் அளவுக்குமதிகமாக போக்குவரத்து ஏற்பட பதிவேற்றம் திக்குமுக்காடத்தொடங்கியது உண்மைதான்.
போர்டடல் கோளாறுகள் குறித்த புகார்கள் பலமாக முன் வைக்கப்பட்டன. எப்படியும் ஒரு ஒத்திவைப்பு கிடைத்துவிடும் என்று பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார்போல் சமூக வலைத்தளங்களில் நிதியமைச்சகம் கடைசி நாளை செப்டம்பர் 30க்கு தளர்த்தியுள்ளது என்ற செய்திகள் காட்டுத் தீயாக பரவ அது பொய் என நிதி அமைச்சகம் மறுப்பு சொல்லி வந்தது. மேலும் அவர்கள் தரப்பில், இந்த கால கெடுக்குள் உங்கள் வருமானக்கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும், பல வரி சலுகைகளையும் இழக்க நேரிடும் என்றும் கூறப்பட்டது..
இரவு 11.50 மணி சமயத்தில் போர்டலில் பதிவேற்றத்தில் கட்டுக்கடங்காத போக்குவரத்து கருதி அடுத்த 24 மணி நேர அவகாசம் தரப்பட்டது. அவ்வளவே.
செப் 16 தின முடிவில் 7.5 கோடிக்கும் அதிகமான ITRகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டின் 7.28 கோடி ITRகளை விட அதிகமாகும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது. இது புதிய சாதனையாகும்.
வெவ்வேறு வகைகளுக்கு வெவ்வேறு காலக்கெடு மற்றும் இணக்க விதிகள் பொருந்தும் என்பதை வரி செலுத்துவோர் புரிந்துகொள்வது முக்கியம்.
இந்த நிலை இப்படியிருக்க, முக்கியமாக, இந்த வருமான வரி கணக்கு படிவங்களை முறைப்படி நிரப்பி பதிவேற்றம் செய்ய தொழில்முறை சேவையாக பட்டயக் கணக்காளர்கள் (CA) செய்கிறார்கள்.
இந்த கடைசி நேர கிளர்ச்சிகள் பற்றி அவர்களிடையே நிலவிய மனநிலையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். இதோ அது.
ஒரு பட்டயக் கணக்காளரின் குரல்
7 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் பெருமையுடன் கூறுகிறது.
கடந்த பத்தாண்டுகளில், இந்த எண்ணிக்கை 2 கோடியிலிருந்து 7 கோடியாக வளர்ந்துள்ளது.
ஆனால் ஒரு கணம் இடைநிறுத்துவோம் - இதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம் யார்?
அது பட்டயக் கணக்காளர்கள் தானே.
ஒவ்வொரு ஆண்டும், இரவும் பகலும், இணக்கம், ஒழுக்கம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பை உறுதி செய்யும் அமைதியான சக்தியாக நாங்கள் இருந்து வருகிறோம்.
இன்னும், இந்த வரி சீசனில் நாம் என்ன அனுபவித்தோம்?
தாமதமாக வெளியிடப்பட்ட படிவங்கள். ஐடி வலைத்தளம் மெதுவாக செயல்படுபது, பிழைகளால் நிரம்பியுள்ள நிலைமை, தேவையான சலான்கள் உருவாக்கப்படாத நிலைமை போன்றவைதானே கண்டோம்.
வாடிக்கையாளர்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள், ஆனால் CAக்கள் இரவும் பகலும் விழித்திருக்கிறார்கள், வரி செலுத்துவோரை அபராதங்கள் மற்றும் கேரி ஃபார்வேர்டு சலுகைகளை இழப்பதில் இருந்து காப்பாற்றுவதற்காக ஒரு தோல்வியுற்ற அமைப்பை எதிர்த்துப் போராடுகிறார்கள்,
செப்டம்பர் 15 ஆம் தேதி - மிக முக்கியமான காலக்கெடு - நம்பிக்கை கிட்டத்தட்ட இழந்தபோது, CBDT ஒரு "நீட்டிப்பை" அறிவித்தது.
காலையில் அல்ல, மதியம் அல்ல. ஆனால் இரவு 11:50 மணிக்கு, முழு நாடும் தூங்கிக் கொண்டிருந்தபோது.
வெறும் 22 மணிநேர நீட்டிப்பு.
நாட்டின் இணக்க கலாச்சாரத்தை இயக்கும் ஒரு தொழிலுக்கு இதுதானா மரியாதை?
ஆயிரக்கணக்கான பட்டயக் கணக்காளர்களின் தூக்கமில்லாத இரவுகளை நீங்கள் இப்படித்தான் மதிக்கிறீர்களா?
போலி பணத்தைத் திரும்பப் பெறும் மோசடிகள் நடக்கும்போது, "ஆலோசகர்கள்" மீது விரல்கள் நீட்டப்படுகின்றன.
ஆனால் பட்டயக் கணக்காளர்களாகிய நாங்கள் நெறிமுறைகளுக்காக, உண்மைக்காக, இந்த தேசத்திற்காக நிற்கிறோம்.
இப்படி கூறும் அந்த CA தொடர்து கூறுவது, நான்ஒரு பெருமைமிக்க பட்டயக் கணக்காளர், எனக்காக மட்டுமல்ல, இந்தியாவின் வரி முறையை உயிர்ப்புடன் வைத்திருக்க குடும்ப நேரம், உடல்நலம் மற்றும் தூக்கத்தை தியாகம் செய்த ஒவ்வொரு CA க்காகவும், இதை ஆழ்ந்த உணர்ச்சியுடன் எழுதுகிறேன்.
நாங்கள் வரி தாக்கல் செய்பவர்கள் மட்டுமல்ல.
நாங்கள் வரி வீரர்கள்.
இந்தியாவின் வளர்ச்சியைத் தூண்டும் வருவாயை நாங்கள் சேகரிக்கிறோம்.
அமைப்பு உடைந்து போகும்போது அமைப்பை ஒன்றாக வைத்திருக்கிறோம்.
அரசாங்கம் இந்தப் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது.
ஏனெனில் மரியாதை கோரப்படுவதில்லை. மரியாதை சம்பாதிக்கப்படுகிறது.
மேலும் பட்டயக் கணக்காளர்கள் அதை ஆயிரம் மடங்கு அதிகமாகப் பெற்றுள்ளனர்.
இந்த குமுறல் நிதி வல்லுனர்களின் குரூப்பில் பகிரப்பட்டது.
இந்த குரலையும் அரசு மதிக்கவேண்டும்.
Leave a comment
Upload