தொடர்கள்
அரசியல்
கருத்துக் கதிர்வேலன்

20251008063747755.jpeg

மனோஜ் பாண்டியன் திமுகவில் சேர்ந்தார்.

ஒன்றிணைந்த அதிமுக எங்கே இருக்கிறது என்றுஅவருக்கு தெரிந்து இருக்கு!!

பொன்முடிக்கு மீண்டும் கட்சிப் பதவி.

இனிமேலாவது வாயை மூடிக்கொண்டு பேசவும் !!

மத்திய அரசுக்கு எதிரான வழக்குகளை நான் விசாரிப்பதை விரும்புவதில்லை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விமர்சனம்.

நீங்கதான் சீக்கிரம் ரிட்டையர்டு ஆக போறீங்களோ அதான் !!

காங்கிரஸ் சார்பில் மாவட்ட வாரியாக "வார் ரூம் "அமைத்து தரப்படும். செல்வப் பெருந்தகை அறிவிப்பு.

ஏற்கனவே கட்சிக்குள்ள சண்டை நடந்துகிட்டு இருக்கு இப்ப அவங்களுக்கு ரூம் வசதி வேறயா !!

திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அமைச்சர் நேரு குற்றச்சாட்டு.

அண்ணா, உங்க தலைவர் பாஜகவை உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டேன்னு சொல்லியிருக்காரே ?

மக்கள் எங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

ஆமா நீங்க 'பசை' உள்ள கட்சி என்று அவர்களுக்கு தெரிஞ்சிருக்கு !!

திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் விஜய் கட்சி பங்கேற்கவில்லை.

பனையூரில் கூட்டி இருந்தா வந்திருப்பாங்க !!

பீகாரில் ராகுல் காந்தி மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்தார் .

ஆட்சியதான் பிடிக்க முடியாது மீனாவது பிடிக்கலன்னு நினைச்சிருப்பாரு !!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால்.

தலைவரே அமலாக்கத்துறைக்கு அழைப்பு விடுகிறார் !!

ஆந்திர மாடல் பாணியில் திராவிட மாடலிலும் கூட்டணி ஆட்சி கார்த்தி சிதம்பரம் கோரிக்கை.

இதை வந்து தைரியமா அறிவாலயத்தில் சொல்வாரா !!

திமுக ஆட்சி முடிவதற்கான "கவுன்ட் டவுன் "தொடங்கிவிட்டது நயினார் நாகேந்திரன் கருத்து.

இவர் பெரிய இஸ்ரோ விஞ்ஞானியோ ?

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் எடப்பாடி தான் முதல் குற்றவாளி செங்கோட்டையன் கடும் தாக்கு.

கட்சியை விட்டு நீக்கிய பிறகு தான் இந்த தகவல் அவருக்கு தெரிந்திருக்கிறது !!

எனக்கு இன்னொரு வாய்ப்பு தாருங்கள் வீடியோ வெளியிட்டு நிதீஷ்குமார் உருக்கம். .

அது அமித் ஷா கைல தான் இருக்கு !!

இரட்டை எஞ்சின் அரசு இல்லை. எல்லாம் டெல்லி கண்ட்ரோல் தான். பிரியங்கா காந்தி ஆவேசம்.

நீங்க சொன்னா கரெக்டா இருக்கும் !!