
கோயில், வீடுகளில் நாம் மணி அடித்து பூஜை செய்வது வழக்கம். ஆகம சாஸ்திரங்களின் படி, மணியில் இருந்து வெளிப்படும் ஓசை, ‘ஓம்’ என்கிற பிரணவம் ஒலிப்பதை நம்மால் உணர முடியும். மேலும் மணியோசை எழுப்புகின்ற காந்த அதிர்வுகள் ஒரு நேர்மறையான சக்தியை அந்த இடம் முழுவதிலும் பரப்புகிறது. அதனால் தேவையற்ற எண்ணங்களை மனதிலிருந்து நீக்கி நம்மைத் தெய்வத்துடன் ஒன்றியிருக்கச் செய்கிறது.

கோயில்களில் பூஜை நேரத்தில் எதிர்மறை பேச்சுக்கள் நம் காதில் விழாமல் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் பூஜையின் போது மணிகள் ஒலிக்கப்படும். அதுமட்டுமின்றி
மணியோசையானது பக்தியின் உணர்வை வலுப்படுத்துகிறது.
பூஜையின்போது மணி அடிப்பதின் காரணம்:

மணி அடிப்பதன் ஒலியை வைத்தே கோயிலில் நடக்கும் பூஜைகள் என்ன என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
பூஜைப் பொருளில் ஒன்றான மணியை நாம் நினைத்த நேரமெல்லாம் அடிக்கக் கூடாது.
மணியை எப்போதும் நம் இடது கையால் எடுக்கக் கூடாது. மணியை வலது கையில் எடுத்து பின்னர் இடது கையில் மாற்றிக் கொண்டு, வலது கையால் கற்பூரத் தட்டை எடுத்து ஆரத்தி காட்ட வேண்டும். அதே போல் மணியைக் கீழே வைக்கும் போதும் அதே முறையைப் பின்பற்றவேண்டும்.

பூஜையில் மெதுவாக அடித்தால் அர்க்ய பாத்யதிகள் சமர்ப்பிக்கப்படுகிறது என்றும், கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம். இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது, மெதுவாக அடித்தால் பகவானுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
மணியோசையும், அறிவியலும்:

மணியோசை என்பது வெறும் மரபு மட்டுமல்ல, அது அறிவியல் ரீதியான காரணங்களையும் உள்ளடக்கியுள்ளது. கோயில் மணியோசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்கச் செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி இருக்கிறது.
கோயில் மணியில் இருந்து வெளிவரும் ஓசையில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்குக் கோயில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற கலவையினால் உருவாக்கப் படுகிறது. இதில் ஒவ்வொரு கலவையும் ஒவ்வொரு குறிப்பிட்ட அளவில் சேர்க்கப்படுகிறது. இதிலிருந்து எழும் ஒலியானது, நம் மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்குக் கொண்டு வர உதவுகின்றது.

நாம் மணியோசையை எழுப்புகிற போது அதில் எழும், கூர்மையான சப்தம் கிட்டதட்ட ஏழு விநாடி வரை மூளையில் எதிரொலிப்பதால் நம் உடலின் ஏழு சக்கரங்களும் தூண்டப்படும்.
மணியோசை கேட்கும் போதெல்லாம் நம் உடலில் ஒரு விதமான தனி புத்துணர்வு ஏற்படுத்துகிறது…!!
"ஆகமார்த்தம் து தேவாநாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம், கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சநம்"


Leave a comment
Upload