தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

20251007045217229.jpg

ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர் சி இயக்கும் படத்தை கமலஹாசன் தயாரித்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படம் 2027 பொங்கல் ரிலீஸ் என்றும் சொல்லியிருக்கிறார்கள்ர்.

பிரியாமணி

20251007050238282.jpg

மணிரத்தினம் படத்தில் நடிக்க அழைப்பு வந்தால் அதற்காக நான் கையை வெட்டிக் கொள்ளவும் தயார் என்கிறார் நடிகை பிரியாமணி.

ரஜிஷா விஜயன்

20251007054011806.jpg

கர்ணன், ஜெய் பீம் ,சர்தார், பைசன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ரஜிஷா தனது துல்லியமான உணர்ச்சி மிகுந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.அழகு மற்றும் திறமை உள்ள நடிகை என்று இப்போது பேசப்படுகிறார்.

ருக்மணி வசந்த்

20251007050656134.jpg

லிங்குசாமி இயக்கத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷவர்தன் நடிக்கும் புதிய படத்தில் ருக்மணி வசந்த் ஜோடி. கதாநாயகனை விட மூன்று வயது மூத்தவர் நடிகை.

ஸ்ரீ லீலா

20251007054144857.jpg

"இந்தியாவின் ரியல் நேஷனல் கிரஷ் ஸ்ரீ லீலா தான். நாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்கிறோம் என்ற தகவல் வெளியானதும் அவர் ரசிகர்கள் தொடர்ந்து எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டிருக்கிறார்கள் "என்கிறார் ரன்வீர் சிங்..

மிருணாள் தாக்கூர்

20251007060622207.jpg

தமிழ் சினிமாவில் தடம் பதிக்காவிட்டாலும் சமூக வலைதளத்தில் மிருணாள்தாக்கூரின் கவர்ச்சி படங்களை பார்த்து "எப்போது தமிழ் சினிமாவுக்கு வருவீர்கள் ?" என்று தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். படத்தயாரிப்பாளர்கள் நஷ்டத்திற்கு அவர்களின் அதிக சம்பளமும் ஒரு காரணம் என்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்.

வாரணாசி

20251007055748716.jpg

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்கு 'வாரணாசி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள் .இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

ஜோனிதா காந்தி

ஆகாஷ் முரளி நடிக்கும் 'இதயம் முரளி'படத்தில் முக்கிய வேடத்தில் பாடகி ஜோனிதா காந்தி நடிக்கிறார்.இவர் கோலமாவு கோகிலா டாக்டர் பீஸ்ட் உட்பட பல படங்களில் பாடியிருக்கிறார்.

ஷ்ரத்தா தாஸ்

பிரபல ஹிந்தி நடிகை ஷ்ரத்தா தாஸ் தற்சமயம் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படத்தில் நடிக்க முயற்சி செய்கிறார். இந்தி சினிமாவை விட தென்னிந்திய சினிமா படப்பிடிப்புகள் குறித்த நேரத்தில் நடைபெறுகின்றன. ஹிந்தி சினிமாவில் எல்லாமே ஸ்லோ தான் என்கிறார் நடிகை.

ராஷ்மிகா மந்தனா

20251007055257172.jpg

ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் படம் 'த கேர்ள் ஃப்ரெண்ட்'. இந்தப் படத்துக்காக ஒரு கோடி செலவில் காதல் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டது. சமூகவலைதளத்தில் இந்த பாடல் மிகப் பிரபலமானது. தற்போது தயாரிப்பாளர்கள் படத்தில் இந்த பாடலை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

சம்யுக்தா

20251007060241908.jpg

நடிகைகளுக்கு கலர், மொழி எல்லாமே பிரச்சினைதான் .திருமணம் ஆகி இருந்தால் நடிக்க கூப்பிட மாட்டார்கள். இதெல்லாம் மாற வேண்டும் என்கிறார் நடிகை சம்யுக்தா.