தொடர்கள்
ஏக்கம்
" மறைந்து போய்க்கொண்டிருக்கும் உறவுகள் " - ஸ்வேதா அப்புதாஸ்

"Vanishing family bond"

20251005224359111.jpg

இந்த உலகத்தில் மறைந்து போய்க்கொண்டிருக்கும் உறவுகளும் நெருக்கங்களும்

இந்த தலைப்பையும் பாடலை கேட்கும் போது நான் பழைய நினைவுகளை திரும்பி பார்த்தோம்.

நம் குடும்பம் மிக பெரியதாக விரிவாக இருந்தது .

சிறுவயதில் மாமா அத்தை வீடுகளுக்கு சென்று விடுமுறை காலங்களை கழித்தது ஒரு மிக பெரிய மலரும் நினைவுகளாக பிரதிபலிக்கிறது .

20251005231243569.jpg

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நம் உறவு சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் நம் உடன் பிறந்தவர்களாக தான் நினைத்துள்ளோம் .

20251005225540265.jpg

எங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் நம் பாசத்துக்குரிய அத்தைமார்கள் .

மாமாக்களும் அன்பானவர்கள் தான் .

அப்பாவும் மாமாவும் ஒன்றாக குடும்ப கதைகள் , அரசியல் என்று பேசி சிரித்த காலங்கள் .

20251005225611751.jpg

இரவு நேரம் போவதே தெரியாமல் கேரம் போர்ட் விளையாடி அதிகாலை தூங்கலாமே என்று அம்மா , அத்தைகள் கூற " Night is still young " என்று மாமா கூறுவது இன்னும் நம் காதில் கேட்கிறது .

அவ்வப்பொழுது குடும்பத்தில் பெரியோர்கள் மத்தியில் ஏற்படும் தேவையற்ற கோபங்கள் நம் இளம் உள்ளங்களின் இடையே விரிசலை ஏற்படுத்தியது உண்டு .

ஒவ்வொரு குடும்பத்திலும் வேண்டாத ஈகோ அது தான் வறட்டு கெளரவம் குடும்பங்களை பிரித்த சோகம் தொடர்கிறது .

20251005225651831.jpg

நீ பெரியவனா நான் பெரியவனா , என் பிள்ளைகள் தான் சூப்பர் அவர்கள் பிள்ளைகள் சரியில்லை என்று தப்பு கணக்கு கூட குடும்பங்களை பிரிக்க செய்தது .

20251005232047157.jpg

பெரியவர்கள் வயதாகி மறைந்து கொண்டிருக்க நாம் இளசுகள் அவர்களின் இடத்தை நிரப்ப முயற்ச்சிகள் எடுத்தோம் .

அதிலும் ஏகப்பட்ட முட்டு கட்டைகள் வந்து தடுக்க அதை லாவகமாக உடைத்து நகர்த்தினோம் .

ஈகோ ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்க பெரியவர்கள் இருக்கும் வரை குடும்பம் ஒற்றுமையாக நகர்ந்து வந்தது .

2025100522574923.jpg

நான் எல்லா உறவுகளிடம் அன்பை பொழிந்து பிறந்த நாட்கள் , தீபாவளி, கிறிஸ்துமஸ் என்று விசிட்கள் , விருந்துகள் என்று ஒருஅளவுக்கு ஒன்று சேர்த்து வந்த காலங்கள் உண்டு .

20251005231804981.jpg

வந்தார்கள் புதிய இளசுகள் மருமகளாக , மருமகனாக எதையும் வெல்லவில்லை குடும்பத்தை பிரித்தார்கள் .அந்த கால ஈகோவை உடைத்து எரிய நாம் எடுத்த முயற்ச்சிகள் பலன் தரவில்லை என்று தான் தோன்றுகிறது .

20251005232252763.jpg

இந்த இளசுகள் அதை அழுத்தமாக பிடித்து கொண்டு நம்மை கேவலமாக பார்க்க துவங்க பெரியோர்களையும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர குடும்பம் உடைந்து கொண்டு வந்தது .முற்றிலுமாக பெரியோர்கள் மறைந்து போக இல்லங்கள் வெறிச்சோடி போக உறவுகளின் வருகை நின்று போக யார் இவர்கள் என்ற கேள்வி எழுந்து விட்டது .நம்மால் முடிந்த அளவுக்கு நம் உறவுகளின் உறவை அரவணைத்து செல்ல ஏகப்பட்ட முயற்சிகள் எடுத்து கொஞ்சம் தான் மிச்சம் .அதிலும் இளசுகளின் தேவையற்ற செயல் பாடுகளால் பெருசுகள் உறவுக்கே துரோகம் செய்வதை எப்படி பொறுத்து கொள்ளமுடியும் ?.

அடிபட்ட குடும்பங்களுக்கு தான் காயத்தின் வலி தெரியும் .

பெற்றோர் பிரிந்த பின் மூத்த உறவு தான் அரவணைக்க வேண்டும் அந்த உறவு சுயநலத்துடன் தற்போது இருக்கிறது .

நாம் தேடி அந்த உறவே சந்திக்க சம்பிரதாய கவனிப்பு மட்டும் .

அதே உறவு நம் இல்லத்திற்கு இரவு உறங்கும் நேரத்தில் காலிங் பெல்லை அடித்து உள்ளே வந்து தேவையற்ற பேச்சு வம்பு செய்து விட்டு செல்வதை என்ன என்று சொல்வது .

சிலர் தங்களின் தேவைக்கு மட்டும் நம்மிடம் சால்ஜாப்பு உறவை நகர்த்துவதும் உண்டு .

தற்போது நம் உறவுகளின் வாரிசுகளுக்கு உறவே தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது .

ஒரு உறவு இல்லத்திற்கு சென்றிருந்தோம் அவர்களின் ஒரு உறவு வீட்டினுள் இருந்து கொண்டே நம்மை பெயரளவுக்கு கூட வந்து எட்டி பார்க்கவில்லை .

2025100523102024.jpg

இப்பொழுதெல்லாம் வீட்டில் உள்ள இளசுகள் வேலையில் படு பிசி அதனால் இல்லத்திற்கு வரும் உறவுகளை கண்டுகொள்வதில்லை

ஒரு காலத்தில் உறவுகளின் வீடுகளுக்கு சென்றால் என்ன சிரிப்பு பேச்சு கலகலப்பு இருக்கும் .

இப்பொழுது அதே வீடுகளுக்குள் நுழைத்தால் ஒரே நிசப்தம் காரணம் மகனோ, மகளோ , எதோ பணியில் இருக்கிறார்கள் அதனால் யாரும் பேசக்கூடாதாம் .

கிறிஸ்துமஸ் விசிட் என்று நாம் எங்கள் உறவு வீட்டுக்கு சென்றோம் .அவர்கள் ஒரு சில வார்த்தை பேசி விட்டு அமைதியானார்கள்.எங்களிடம் அவர்கள் ஒன்றும் பேசவில்லை .

நாங்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தோம் .பின் எழுந்து வந்து விட்டோம் ...எப்படி உறவுகள் .

இப்படி உறவுகள் காணாமல் போக யார் காரணம் ?...

இல்லங்களில் புதியவர்களின் வருகையும் குடும்பங்களில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது .

20251005231100829.jpg

ஒரு காலத்தில் குடும்பத்தில் திருமணம் என்றால் எல்லோரும் இணைந்து கலகலப்பாக கொண்டாடுவோம் திருமணம் முடிந்த பின் உறவுகளுக்கு அந்த புதிய குடும்பத்தை அறிமுகம் செய்து வைப்பார்கள் அதில் அவ்வளவு மகிழ்ச்சி பின் தம்பதிகளுக்கு விருந்துகள் ஒவ்வொரு இல்லத்திலும் ரெடியாகும் இப்பொழுது அந்த உறவு அறிமுகமே கிடையாது .

தற்போது வேலை , நேரமின்மை அதை விட நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஈகோ தான் .

20251005231605748.jpg

சில உறவுகளின் இல்லங்களில் குழந்தைகள் படிக்கிறார்கள் என்ற சாக்கு போக்கை வைத்து கொண்டு உறவுகளை வீட்டிலே சேர்ப்பதில்லை .

குழந்தைகள் உறவுகள் தெரியாமல் தனி தீவில் வாழ்வது போல இருப்பதும் உண்டு .

இன்றைய உறவுகள் தொடர்வதுமில்லை கைகொடுப்பதுமில்லை

கண்டுகொள்வதில்லை என்பது தான் உண்மை .

பல உறவுகள் காணாமலே போய்விட்டது !.

இன்றைய கால சூழ்நிலை , வேலை , பணம் ஒரு குறிக்கோள் இதனால் யாரை பற்றியும் அக்கறை இல்லாத நிலமை தான் உள்ளது .

இப்படியே போய்க்கொண்டேயிருக்க உறவுகள் மறைந்து கொண்டிருப்பதே தெரியாமல் போய்விட்டது .

2025100523163324.jpg

எப்படி vanishing family bond யை Reunion செய்வது .??..