
மகாபலிபுரத்தில் நட்சத்திர விடுதியில் சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார் விஜய்.
கிட்டத்தட்ட 2400 பேர்கள் இந்த பொதுக்குழுவில் கலந்துக் கொண்டார்கள்.
அதிமுகவுடன் கூட்டணியா என்ற சஸ்பென்ஸ் இந்தப் பொதுக்குழுவில் உடைந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விஜய் தனது உரையில் மீண்டும் சொல்கிறேன் இரண்டே இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி ஒன்று என்று சொன்னதும் பொதுக்குழு உறுப்பினர்கள் தளபதி என்று சொல்ல .....
இரண்டு என்று சொன்னதும் திமுக என்று ஒரே குரலில் பொதுக்குழு உறுப்பினர்கள் சொல்ல அதிமுகவுடன் கூட்டணி என்ற கதவு மூடப்பட்டு விட்டது என்பது தெளிவானது.
பொதுக்குழுவில் வழக்கப்படி திமுகவை மட்டும் கடுமையாக சாடிப் பேசினார் விஜய்.
தமிழக சட்டமன்றத்தில் கரூர் சம்பவம் பற்றி முதலமைச்சர் பேசியதற்கு பதில் என்ற பெயரில் "நான் நாகரிகமாக பதிலடி தரணும் என்று நினைக்கிறேன் "என்று ஆரம்பித்தார்.

அரசியல் செய்ய விரும்பவில்லை என்று அடிக்கடி கூறும் தமிழக முதல்வர் 15.10.25 அன்று சட்டமன்றத்தில் நமக்கு எதிராக பேசிய பேச்சில் எவ்வளவு வன்மத்தை கக்கி உள்ளார் என்பதையும் அவர் எப்படிப்பட்ட அரசியலை செய்ய முயல்கிறார் என்பதையும் மக்கள் உணராமல் இருக்கின்றனர் ? என்று கேட்டார்.
கருர் உடன் சேர்ந்து ஐந்து, ஆறு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம். அந்த இடம் தருவார்களா? இந்த இடம் தருவார்களா? என்று நாம் அலைக்கழிக்கப் பட்டோம்.
இந்தியாவில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இல்லாத அளவில் பிரச்சார வாகனத்துக்கு உள்ளே மக்களைப் பார்க்க வேண்டும்.
வாகனத்துக்கு மேலே வந்து கை காட்டக்கூடாது என்றெல்லாம் போலீஸ் நிபந்தனைகள் விதித்தது. நாம் அதை எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டதோடுமுறையான ஒரு பொது வழிகாட்டு முறைகளோடு நமக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தை நாடினோம். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள் ? என்று கேட்டார் விஜய்.
அரசியல் காழ்ப்புடன் நேர்மைத் திறனற்று நம்மைப் பற்றி குற்றம் சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு ஒரு சில கேள்விகள் என்று சொல்லி உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் திக்கித் திணறியதை மறந்து விட்டீர்கள்.
உங்கள் தலையில் ஓங்கி உச்ச நீதிமன்றம் குட்டியது. கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர அவசரமாக ஒரு ஆணையம். அந்த ஆணையத்தை அவமதிப்பது போல் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரி வைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற பெயரில் அவசர அவசரமாக நம் மீது அவதூறு பரப்பு. இப்போது அந்த ஆணையத்தையே குட்டி உட்கார வச்சிட்டாங்க.
50 ஆண்டு கால பொதுவாழ்வை கொண்ட முதல்வர் சொல்வது எப்படிப்பட்ட வடிகட்டிய பொய் என்று நான் சொல்லவில்லை உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது என்று ஆவேசப்பட்டார் விஜய் .
நீதிபதிகள் விசாரணையின் போது சொன்ன சில கருத்துக்களையும் அந்த பொதுக்குழுவில் பதிவு செய்தார்.

அதிகாரிகள் ஊடகங்களிடையே பேசியது என்பது பொது மக்களிடையே நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நியாயமான விசாரணை மூலமே அந்த சந்தேகத்தை மீட்டெடுத்து ஆக வேண்டும் என்று தமிழக அரசின் தலையில் ஓங்கி நறுக்கு நறுக்கு என்று குட்டியது என்றார்.
அதிகார மயக்கத்தில் இருக்கிறார் முதல்வர் என்றும் சொன்னார் விஜய் .
கடைசியாக 2026 தேர்தலில் திமுக தலைமை ஆழமாக உணரும் வகையில் மக்கள் மன்றம் அவர்களுக்கு அழுத்தமாக புரிய வைக்கும். நீங்கள் பழக்க தோஷத்தில் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று சொல்வீர்கள். இப்போதே அதை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்றார் விஜய்.
ஹைலைட் ஆக தனது உரையை முடிக்கும் போது பிரம்மாண்டமான பெரியார் படத்துக்கு அருகில் பேசிய விஜய் "நான் சென்ற பொதுக்குழுவில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன் இயற்கையும் இறைவனும் நம் தமிழ் சொந்தங்கள் வடிவில் மாபெரும் மக்கள் சக்தியாக நமக்குத் துணையாக இருக்கும் போது எம் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் யார்?என்று சொல்லி முடித்தார் விஜய்.

விஜயின் இந்த தாக்குதல் பற்றி திமுக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கொள்கை பரப்பு செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் "அவர் பனையூர் விட்டு வெளியே வந்து முதலில் மக்களை சந்திக்க சொல்லுங்கள் "என்பதோடு திமுகவின் கருத்து முடிந்து விட்டது. திமுகவை பொருத்தவரை அதிமுக பாஜக கூட்டணி தான் பெரும் சவாலாக இருக்கும் என்று நம்புகிறது. அதனால் தான் திமுக கடுமையாக எடப்பாடியை சாடி வருகிறது. பிரதமர் மோடியை எதிர்த்தும் கருத்து சொல்கிறது.
விஜய் என் தலைமையில் தான் கூட்டணி என்று சொன்னாலும் விஜயை சந்திக்க டிடிவி தினகரன் முயற்சி செய்தும் இதுவரை அது நடக்கவில்லை.
பொதுக்குழு தீர்மானத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்னை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னது விஜய் தான். தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் அருண் ராஜ் முன்னாள் வருமானவரித்துறை அதிகாரியிடம் தினகரன் பேசியபோது "நான் விஜய்யை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்" என்று கேட்டு இருக்கிறார்
அப்போது அருண் ராஜ் எதுவாக இ
ருந்தாலும் என்னிடம் பேசுங்கள் என்று சொல்ல அதற்கு தினகரன் "சார் நான் உங்களுக்கு முன்பே கட்சி ஆரம்பித்தவன் என் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தல் கூட சந்தித்திருக்கிறோம் எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல முடியாது விஜய் இடம் தான் பேச வேண்டும் என்று சொல்ல அதற்கு அருண் ராஜன் பதில் மழுப்பலாக இருந்தது. இதுதான் இன்றைய தமிழக வெற்றி கழகத்தின் நிலைமை.
ஆதவ் அர்ஜுனா திமுகவுக்காக பத்து வருடம் உழைத்ததாக பொதுக்குழுவில் சொல்லி இருக்கிறார். OMG -One minded Generation என்ற குழு சபரீசனுக்கு சொந்தமானது. தேர்தல் சம்பந்தமான ஆலோசனைகளை இந்த குழு தான் சொல்லியது
திமுக தலைவர் ஸ்டாலின் இந்த குழுவின் முடிவை ஏற்று அதன்படி செயல்பட்டார். உண்மையில் இதன் மூளையாக செயல்பட்டது சபரீசன் தான். இந்தக் குழுவில் ஆதார் அர்ஜுனா இருந்தார் அவ்வளவுதான்.
ஆனால் அவர் ஏன் இருந்தார் அதன் மூலம் என்னென்ன சலுகைகள் பெற்றார் என்பதையெல்லாம் எங்களுக்கு சொல்ல ரொம்ப நேரம் ஆகாது எங்கள் தலைவர் எங்கள் கையை கட்டி வைத்திருக்கிறார். வாயை மூடி வைத்திருக்கிறார். இல்லையென்றால் ஆதவ் அர்ஜுனா என்ற குப்பை பற்றி நாங்கள் நிறைய பேசுவோம் நாறிவிடும் என்கிறார்கள் திமுகவினர்.

விஜயின் ஆவேசம் ஓட்டாக மாறுமா என்பது 2026-இல் தான் தெரியும். அதுவரை காத்திருப்போம்.

Leave a comment
Upload