
பிரதிகா ராவல்
உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து விருந்து அளித்தார். அப்போது காயமடைந்து சக்கர நாற்காலியில் வந்த பிரித்திகா ராவல் உணவை எடுக்க முடியாமல் தடுமாறினார். இதை கவனித்த பிரதமர் மோடி அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு தன் கையாலேயே அவருக்கு பரிமாறினார். காயம் காரணமாக பிரித்திகாராவல் கடைசி சில போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் அவருக்கு மெடல் மறுக்கப்பட்டது என்ற பேச்சு இருந்தது. ஆனால் பிரதமரை சந்திக்கும் போது அவர் மெடலுடன் இருந்தார் .

ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்
உலகக் கோப்பை வென்று சாதனை செய்த இந்திய மகளிர் அணியை ஜனாதிபதி திரௌபதி முர்மு நேரில் சந்தித்து பேசினார். போட்டிகளில் நடந்த முக்கியமான அனுபவங்களை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார் ஜனாதிபதி. பயிற்சியாளர் அமோல் மஜும்தார் ஜனாதிபதியிடம் இது இந்திய கிரிக்கெட் மகளிர் அணி வெற்றி ஒவ்வொரு இந்தியரின் வெற்றி என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.

பிரதமர் பாராட்டினார்.
உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியை நேரில் அழைத்து விருந்து தந்து பாராட்டிய பிரதமர் மோடி அவர்களுக்கு 'Namo ' என்று பெயர் பொறித்த இந்திய ஜெர்சியை அவர்களுக்கு வழங்கினார்.

ஹர்லீன் தியோல் கேட்ட கேள்வி
கிரிக்கெட் வீராங்கனைகளை விருந்து அளித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோல் கேட்ட கேள்வி பிரதமரை வெட்கப்பட வைத்தது. "உங்கள் சருமம் எப்போதும் பளபளப்பாக உள்ளது .உங்கள் சரும பராமரிப்பு பற்றி சொல்லுங்கள் "என்று கேட்க அதற்கு பிரதமர் சிரித்தபடி "மில்லியன் கணக்கான இந்தியர்களின் அன்பும், ஆசியும் 25 ஆண்டுகால பொது சேவையின் பிரதிபலிப்பு எனது சரும பளபளப்புக்கு காரணம்" என்றார் .


ஹர்மன்பிரித் கவுர்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன் பிரித்கவுர் .மறக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்துள்ள அவர் உலகக்கோப்பையை தனது கையில் டாட்டு குத்தியுள்ளார் .
பணக்கார வீராங்கனைகள்
மகளிர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி யின் பரிசுத்தொகை பிசிசிஐ அறிவித்துள்ள சிறப்பு தொகை என்று 90 கோடி பரிசாக கிடைக்கப் போகிறது. அதே சமயத்தில் இந்த அணியின் வீராங்கனைகள் பலர் கோடீஸ்வரராக ஏற்கனவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் பட்டியல் இதோ. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 கோடி, திப்தி சர்மா 7 கோடி ஷபாலி வர்மா 8 கோடி, ஜீலான் கோஸ்வாமி 8 கோடி, ஹர்மன் பிரீத் கவுர் 24 கோடி, ஸ்மிருதி மந்தனா 32 கோடி இது தவிர இந்த வீரர்களின் மாநில அரசும் பரிசு பதவிஉயர்வு என்று கௌரவம் செய்திருக்கிறது.
நமது அணி வீராங்கனைகளைப் பற்றி
அறிந்து கொள்வோம்.

ஷெஃபாலி வெர்மா
வலது கை அதிரடி பேட்டர், சேவாக்குடன் ஒப்பிடலாம். ஒவ்வொரு பந்தையும் பறக்கவிட வேண்டும் என்ற வெறி கொண்டவர். சமீபத்திய ஸ்ட்ரைக் ரேட் 180+ .

ஸ்மிருதி மந்தனா
இடது கை பேட்டர், சங்கக்காராவுடன் ஒப்பிடலாம், சிறப்பான சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் . இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு அதிக ரன்கள் குவித்தவர். ஸ்ட்ரைக் ரேட் 90.7 , ஆவரேஜ் 48.4 ,

ஹர்மன்ப்ரீத் கவுர்
வலது கை பேட்டர், ராகுல் டிராவிடுடன் ஒப்பிடலாம். நின்று நிதானமாக அதே சமயம் பொறுப்புடனும் ரன் அ பால் ப்ளேயர். ஸ்ட்ரைக் ரேட் 77.1, ஆவரேஜ் 37.2.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்
வலது கை பேட்டர் , விராட் கோஹ்லியுடன் ஒப்பிடலாம். நல்ல ஸ்ட்ரைக் ரேட் # நல்ல ஆவரேஜ் , மிஸ். ரிலையபிள், ஸ்ட்ரைக் ரேட் 90.3, ஆவரேஜ் 35.2 .

தீப்தி சர்மா
இடது கை பேட்டர், சுரேஷ் ரெய்னாவுடன் ஒப்பிடலாம். 70 ஸ்ட்ரைக் ரேட் இருந்தாலும் சராசரி 36.7 என்பதால் மிடில் ஆர்டரில் சரிவைச் சமாளிக்கும் திறன் உண்டு. மீடியம் ஃபாஸ்ட் பந்து வீசுவார் ஜோஹிந்தர் சர்மா போன்று தோன்றுகிறது. அதிக விக்கெட் எடுத்தோர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். வேலுயபிள் ஆல்ரவுண்டர். டெய்ல் எண்டர்களை விரைவாக வீழ்த்தி விடுகிறார்.

ரிச்சா கோஷ்
வலது கை பேட்டர், ரோமேஷ் கலுவிதரனாவுடன்/ மேக்ஸ்வெல்லுடன் ஒப்பிடலாம். செமி பைனலில் பேட்டிங் பார்த்திருப்பீர்கள். பயம் அறியாள் ஸ்ட்ரைக் ரேட் 103.1 , இறுதி பவர் ப்ளேவுக்கும் சேசிங்குக்கும் அளவெடுத்து தைக்கப்பட்டவர். விக்கெட் கீப்பர்.

அமன்ஜோத் கவுர்
வலது கை பேட்டர், குறைவான போட்டிகளிலேயே விளையாடியிருந்தாலும் நம்பகமான ப்ளேயர் என்ற அந்தஸ்து கிடைத்திருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடும் ப்ளேயர் என்பது செமிபைனலில் தெரிந்தது.
ஸ்ட்ரைக் ரேட் 77 , முகமது கைஃப் போன்ற ப்ளேயர் மீடியம் ஃபாஸ்ட் பந்து வீசுவார்.

ராதா யாதவ்
இடது கை ஆஃப் ஸ்பின்னர் ,பந்து வீச்சில் யுவராஜ் சிங் போல
கண்டிப்பாக முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகள் எடுப்பார். (17 விக்கெட்டுகள்)

கிராந்தி கவுட்
வலது கை மிதமான வேகப்பந்து வீச்சாளர், ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.ஜவகல் ஸ்ரீநாத் போன்ற பவுலர், ஆவரேஜ் அதிகம் ,எகானமி 5.75.

ஸ்ரீசரணி
இடது கை ஆஃப் ஸ்பின்னர் ,,ரவீந்திர ஜடேஜா போல ,திடீரென பேட்ஸ்மேனுக்கு உள்ளே பந்து வருமாறு வீசுவார். 4.91 என்ற சிறப்பான எகானமியுடன் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் .

ரேணுகா சிங்
வலது கை மித வேகப்பந்து வீச்சாளர், பும்ரா போல நல்ல எகானமி வைத்துள்ளார். இவர் தான் இந்த தொடரிலேயே அதிக ஓவர்கள் வீசி குறைவான எகானமி வைத்துள்ளவர் - 4.13 .ஆனால் விக்கெட்டுகள் 3 மட்டுமே விழுந்துள்ளது.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

Leave a comment
Upload