
தூத்துகுடி துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரத்தை தொடர்ந்து நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா தூத்துகுடிக்கு மாற்றப்பட்டார்.
இதன் பொருட்டு இரவோடு இரவாக தூத்துகுடி விரைந்தார் முரளி ரம்பா .
2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நீலகிரி எஸ்.பி. பொறுப்பை ஏற்று ஒரு கண்டிப்பான அதிகாரியாக வலம் வந்தவர் இவர். தூத்துகுடி கோவில்பட்டியில் சப் டிவிஷன் இணை காவல் கண்காணிப்பாளராக இதற்கு முன்பு பணியாற்றியவர் என்பதால் இவருக்கு அந்த மாவாட்டம் அத்துப்படி என அரசு நினைத்திருக்கலாம்!
இவர் மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல்களை ஒடுக்கும் சிறப்பு கமாண்டோ பயிற்சி பெற்றவர். நீலகிரியில் தமிழக கேரளா எல்லையில் உலாவி வந்த மாவோயிஸ்டுகளை இவரே ஒடுக்கி வைத்தார். வனத்தினுள் துணிவோடு செல்லும் முரளி ரம்பாவை பார்த்து தீவிரவாதிகள் ஓடி ஒளிந்ததை இன்றும் நீலகிரி போலீஸார் பிரமிப்போடு பேசுகிறார்கள். கண்டிப்பு என்றால் அசாத்திய கண்டிப்பு. இவர் அருகில் நிருபர்கள் சென்று பேசினால் முகம் கொடுத்து கூட பேசமாட்டார். மீட்டிங் என்று சென்றால் அவ்வளவு ஈசியாக பார்த்து பேசி விட முடியாது. சக ஊழியர்களிடமும் எந்நேரமும் கெடுபிடியாகவே நடப்பார்.
ஒரு காவல் துறை நண்பர் கூறும் போது, "அவரும் தூங்க மாட்டார். எங்களையும் தூங்க விடமாட்டார்." என்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு எஸ்.பி. தற்போது தூத்துகுடியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை வெகு சீக்கிரத்தில் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார் என்று முதல்வர் முழுமையாக நம்பியுள்ளாராம்! ஆக..முரளி ரம்பா சென்றது தூத்துக்குடிக்கு லாபம்...நீலகிரிக்கு நஷ்டம்!

Leave a comment
Upload