
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபரிடம் சட்டமன்ற உறுப்பினரே, இருபத்தைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள படப்பிடிப்பு கேமராவை பிடுங்கி கடுமையாக தாக்கியது குறித்து வீடியோ வெளியிட்டு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியே நியாயம் கேட்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் கல் குவாரி முறைகேடு செய்தது என்று ஏற்கனவே கனிமவளத்துறை 23 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் முறைகேடுகள் தொடர்ந்து நடந்திருக்கிறது. இதைத்தான் அந்த தொலைக்காட்சி வெளிச்சம் போட்டு காண்பிக்க முயற்சி செய்திருக்கிறது. அதனால் தான் சட்டமன்ற உறுப்பினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு படப்பிடிப்புக் குழுவினரை தாக்கியிருக்கிறார். காவல்துறையிடம் புகார் செய்தும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை,. காரணம் அவர் ஆளுங்கட்சி உறுப்பினர் என்பதுதான்.
சட்டமன்ற உறுப்பினரின் இந்த அராஜகத்தை கண்டித்து கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி, அண்ணாமலை ,நயினார் நாகேந்திரன் , டிடிவி தினகரன், திமுகவின் கூட்டணி கட்சிகளா ன மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் போன்றவையும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க சொல்லியும் முதலமைச்சர் மௌனம் சாதிக்கிறார். இந்த மௌனம் ஆபத்தானது. அவரது மௌனம் கலைந்து பாரபட்சம் இன்றி சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் முதல்வர் பதவிக்கு அழகு.


Leave a comment
Upload