
தமிழக சட்டமன்ற தேர்தல் 23.4.2026 அதன் தேர்தல் ரிசல்ட் 4.5.2026 என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
4.5.2026 தேர்தல் ரிசல்ட் வரும் நாள் நடிகை த்ரிஷா பிறந்தநாள் என்று சமூக வலை தளங்களில் வைரல் டிராண்டாக உள்ளது.
தமிழக தேர்தல், பாண்டிசேரி தேர்தல் 25 வருடங்களுக்கு பிறகு வெவ்வேறு தேதிகளில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் தேர்தல் களையிழந்து காணப்படுகிறது. தெருமுனை கூட்டங்கள் , மைக் டெஸ்டிங் மேடை பேச்சுக்கள் எதுவுமின்றி வெறிச்சோடி கிடக்கிறது.சமுக வலைதளங்களால் இவைகள் முடுவிழா கண்டது.
வேட்பாளர்கள் செலவு கணக்கில் சாப்பாடு , பிரியாணி செலவு செய்யும் கணக்கு இடம்பெற வேண்டும் என்கிறது தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் தற்போது நான்கு முனை போட்டி நிலவுவதால் வெற்றி வாய்ப்பு நூலிழையில் இருக்கும் என பிரதான கட்சிகள் கணிப்பாக உள்ளது.
அதிமுக –பாஜக கூட்டணி தேர்தல் திருவிழா பணிகளில் சுறுசுறுப்பு இல்லாமல் சுரத்து இல்லாமல் சைலாண்டாக இருக்கிறது .

டெல்லிக்கு சென்ற ஜோசப் விஜய் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையை 7 மணி நேரம் முடித்து விட்டு ரோடு ஷோ நடத்தி போட்டோ ஷுட் நடத்தி விட்டு ஹையாக திரும்பி வந்துள்ளார்.

அதிமுக –பாஜக கூட்டணியில் நடிகர் ஜோசப் விஜய் இடம்பெற போவதில்லை. 234 தொகுதியிலும் தனித்து போட்டி என்று ஆதவ் அர்சுனா அறிவித்து விட்டார்.

சீமான் கட்சியினர் இனி எப்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார்கள் என்பது இனிமேல் தான் தெரியும்.தேர்தல் அறிக்கையினை சீமான் அறிவித்துவிட்டார். தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் என்று….
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் விட்டமின் “ப” விநியோகம் செய்ய தடை செய்வது உட்பட 234 தொகுதிகளுக்கும்136 பொது பார்வையாளர்கள் , 40 காவல்துறை பார்வையாளர்கள் தேர்தல் கண்காணிப்பு டீமை தேர்தல் ஆணையம் களத்தில் இறக்கியுள்ளது.
தாயின் மருத்துவ செலவிற்கு எடுத்து சென்ற மகளிடம் இருந்து பணம் பறிமுதல் செய்த தேர்தல் கண்காணிப்பு குழவின் செயல் தமிழகம் முழவதும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

த்ரிஷா, நயன்தாரா, ரஜினிகாந்த் என தனிப்பட்ட விமர்சனங்கள் முலம் சில அரசியல்வாதிகள் இந்த தேர்தலில் பேசி வருவது மக்களை எரிச்சலடைய செய்துள்ளது. மக்கள் பிரச்சனைகளை பற்றி எந்த அரசியல் கட்சியினரும் கவலைபடாமல் சுற்றி வரும் அதிசய தேர்தலாக உள்ளது.

மாதவரம் தொகுதியில் கியாஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்று பெண்கள் புடைசூழ அடுப்புடன் சாலையில் போராட்டம் நடத்தியது கண்கொள்ளக்காட்சியாக இருந்தது.
தமிழக தேர்தலில் அடுத்த முதல்வர் யார் என்று பெட்டிங் கிரிப்டோ கரன்ஸியில் ஆன்லைன் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பெட்டிங்கில் உலகெங்கும் இருக்கும் என் ஆர் ஐ மற்றும் ஆன்லைன் சூதாட்ட குருப் ஈடுபட்டு பல மில்லியன் கிரிப்டோ கரன்சி ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சூதாட்டம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது என்றாலும் இதனை கண்டுபிடித்து பணம் பறிமுதல் செய்ய முடியாது என்கிறார் விவரமறிந்த சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரி.
இந்த பெட்டிங்கில் திமுக விற்கும், தவெகவிற்கும் அதிக அளவில் பெட்டிங் கட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வருகிறது. இது கிரிக்கெட் சூதாட்டத்தில் பயன்படுத்தும் ஒரு ட்ரிக் , தற்போது தமிழத்தின் அடுத்த முதல்வர் யார் என்று பெட்டிங் வரை வந்துள்ளது.
இப்போதைக்கு திமுக கூட்டணி வலம் வந்தாலும் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று தலைமை இல்லத்தில் டிஸ்கஷன் நடந்து வருகிறது.

த.வெ. க தலைமையில் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று ஜோசப் விஜய் சொல்லிவிட்டார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் உப்பு சப்பற்ற தேர்தலாக மாறிவிட்டது.

எடப்பாடியார் டெல்லி பயணத்தில் சுரத்து இல்லாமல் சென்று இருக்கிறார். கூட்டணி கட்சிகளுக்கு எப்படி தொகுதி ஒதுக்குவது என யோசனையில் இருக்கிறார்.

அமித்ஷா இந்த தேர்தலின் போக்கை எப்படி மாற்றி அமைப்பார் என்பது அடுத்த வாரத்திற்குள் தெரியும் என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.
போடுங்கம்மா ஓட்டு என்று எந்த அரசியல் கட்சியும் வாக்களர்களிடம் உற்சாகமாக கேட்கும் மூடில் இல்லை என்பது தான் பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்த பின்பாவது தமிழக தேர்தல் திருவிழா விறுவிறுப்பு கூடுமா என்று தெரியவில்லை.

Leave a comment
Upload