
அங்கோர் வாட்டை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து ஒரு கட்டுரையாக்க ஆசை தான்.
ஆனால் ஆசைப் பட்டதெல்லாம் நடந்து விடுகிறதா. எப்போது ராஜேந்திர சோழன் நேரடியாக இந்த கோவில் கட்டுமானத்தில் ஈடு படவில்லை என்று தெரிந்ததோ அல்லது தெரியப்படுத்தினார்களோ அந்த சரித்திரத்தில் கொஞ்சம் சுவாரஸ்யம் விட்டுப் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
கைமர் பேரரசு காலத்தில் தான் ராஜேந்திர சோழன் ஆண்ட சமயம் என்பதும் குறிப்பு சொல்கிறது. அவரது தாக்கம் நிச்சயம் இருந்திருக்கும்.
ஏனெனில் மலேசியாவை கைப்பற்றி கடாரம் கொண்டான் என்ற பட்டமெல்லாம் இருக்கிறதே....
12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோவிலின் டைம் லைன் இது தான்.
- 1113 ஆம் ஆண்டில், கம்போடியாவின் மன்னர் இரண்டாம் சூர்யவர்மன் அங்கோர் வாட் கோயிலை கட்ட ஆரம்பித்தார்.
- 1150 ஆம் ஆண்டில், கோயில் கட்டி முடிக்கப்பட்டது.
- 12 ஆம் நூற்றாண்டில், அங்கோர் வாட் கோயில் கம்போடியாவின் தலைநகரமான அங்கோர் தோமின் ஒரு பகுதியாக இருந்தது.
- 1432 ஆம் ஆண்டில், அங்கோர் வாட் கோயில் தாய்லாந்து படைகளால் கைப்பற்றப்பட்டது.
- 1863 ஆம் ஆண்டில், கம்போடியா பிரான்சின் காலனியாக மாறியது, அங்கோர் வாட் கோயில் பிரான்சியர்களால் பாதுகாக்கப்பட்டது.
- 1953 ஆம் ஆண்டில், கம்போடியா சுதந்திரம் பெற்றது, அங்கோர் வாட் கோயில் கம்போடியாவின் தேசிய அடையாளமாக மாறியது.
- 1992 ஆம் ஆண்டில், அங்கோர் வாட் கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
- கோயில் வளாகம் 402 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
- கோயில் வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன.
- கோயில் வளாகத்தில் உள்ள மிகப்பெரிய கட்டிடம் அங்கோர் வாட் கோயில். இது 65 மீட்டர் உயரம் கொண்டது.
ஏகப்பட்ட கோவில் சின்னங்கள் பாழாக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் மனது வலிக்கும்.
அங்கோர் வாட் கோயில் வளாகம் 1432 ஆம் ஆண்டில் அயுத்தயா அரசின் (தாய்லாந்து) படைகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இதன் பிறகு, அங்கோர் வாட் கோயில் வளாகம் பல நூற்றாண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.
அங்கோர் வாட் சில இடங்களின் காணொளிகள் இங்கே
வீடியோ 1
அங்கோர்வாட் கோவில் வளாகம் முழுவதும் இராமாயண மஹாபாரத காட்சிகளை செதுக்கி வைத்திருக்கின்றனர். நல்ல வேளையாக அந்த தாய்லாந்து கும்பல் இதை அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள்.
வீடியோ 2
நல்ல வேளையாக 1863 ஆம் ஆண்டில், கம்போடியா பிரான்சின் காலனியாக மாறியது, அங்கோர் வாட் கோயில் வளாகம் ஃபிரெஞ்சு மக்களால் பாதுகாக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது.
இன்று யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக விளங்கும் அங்கோர் வாட் பல நூறு வருடங்களாக புதர் மண்டி கேட்பாரற்று இருந்தது என்பதை நினைக்கையில் நெஞ்சு பதறுகிறது.
இன்று கண்காட்சியாக மட்டுமே இருக்கிறது என்றாலும், கைமர் அரசாங்கத்தின் கனவுக் கோவில் இன்றும் இருக்கிறது என்பதே ஒரு ஆறுதல்.

Leave a comment
Upload