நான்கு முனை போட்டி !!

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலாவதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் என்று அறிவித்து சாதனை படைத்திருக்கிறார்.
வேட்பாளர்கள் அறிமுகம் தேர்தல் பிரச்சாரம் என்று தீவிரமாக இருக்கிறார் சீமான்.

முதலில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் விஜய்.
மோப்பம் பிடித்த திமுக ,காங்கிரஸ் கட்சியை மடக்கி போட்டு கூடுதலாக ஒரு ராஜ்யசபா தந்து தொகுதி பங்கிட்டை முடித்து விட்டது.
அதன் பிறகு...
விஜய்க்கு பாஜக அழுத்தம் தந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது.
முதல் இரண்டரை வருடம் விஜய் முதல்வர்...
அடுத்த இரண்டரை வருடம் எடப்பாடி முதல்வர் என்று அமித்ஷா தரப்பு பேசியும் எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை.
இப்போதெல்லாம் அமித் ஷாவை எதிர்த்துப் பேசுகிறார்கள் மாநில கட்சி தலைவர்கள் பாஜக கூட்டணியில் எடப்பாடி சொல்வது தான் நடக்கிறது.
எடப்பாடியை அடிமை போல் நடத்துகிறார் என்கிறது திமுக.
பாண்டிச்சேரியில் ரங்கசாமி ,லாட்டரி அதிபர் நடத்தும் கட்சி சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று நிபந்தனை இருக்கிறார். இதற்கு சம்மதம் இல்லை என்றால் நான் விஜய்யுடன் கூட்டணி வைத்துக் கொள்வேன் என்று மிரட்டுகிறார். இப்போதைக்கு பாஜக நிலைமை இதுதான்.
கூட்டணித் தலைவர்களை மேடை ஏற்றி மூன்று முறை பிரதமர் மோடி மதுராந்தகம், திருச்சி, மதுரை என்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டார் பிரதமர். இதுவரை திமுகவிலும் சரி ,அதிமுகவிலும் சரி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.
இடது கம்யூனிஸ்ட் கூடுதல் தொகுதிகளை கேட்கிறது.
திமுக 5 தொகுதிகள் தருவோம் என்கிறது.
விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மையம் ஆகியவற்றுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.
தொகுதி பங்கீடு இறுதி செய்வதற்காக அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்று இருக்கிறார் எடப்பாடி.
கூட்டணி எல்லாம் கிடையாது வதந்தி நம்பாதீர்கள் என்று இப்தார் விருந்தில் சொல்லிவிட்டார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.
திமுகவை பொருத்தவரை விஜயை கண்டு கொள்ளவில்லை போன்று பாவலா காட்டினாலும் சிறுபான்மையினர் பிரிவு ஓட்டுக்களை விஜய் நம்மிடம் பங்கு போட்டுக் கொள்வார் என்ற பயம் இருக்கிறது.
அதற்கு ஏற்றார் போல் இந்த முறை சிறுபான்மையர் மீது கரிசனம் காட்டுகிறது திமுக.
சிறுபான்மையினர் அமைப்பை சேர்ந்தவர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை தந்து நீங்கள் திமுகவுக்காக பேசுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இந்த முறை வேட்பாளர் தேர்வில் 50 சதவீதம் இளைஞர் அணிக்கு தர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முறை தேர்தல் வாய்ப்பு இல்லை என்று திமுக தரப்பில் முடிவு செய்தாலும் அதை செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகம்.
துரைமுருகன் 80 வயதை கடந்தவர். இந்த முறை தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று முதல்வர் வலியுறுத்துகிறார்.
அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்படுகிறார்.
அதை ஏற்றுக் கொள்ளாத துரைமுருகன் வலுகட்டாயமாக வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டார்.
இதன் மூலம் இந்த முறை நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதை மறைமுகமாக தலைமைக்கு சொல்லியிருக்கிறார் துரைமுருகன்.
தமிழக வெற்றி கழகத்தை பொறுத்த வரை பசையுள்ள வேட்பாளர்களை தேடுகிறது .
கட்சி நடத்துவதற்காக அண்ணா நகரில் உள்ள 40 கோடி சொத்தை சமீபத்தில் விற்றுக்கிறார் விஜய்.
முதல் 60 பேர் நேர்காணலில் கலந்து கொண்ட விஜய் அதன் பிறகு நடந்த நேர்காணலில் கலந்து கொள்ளவில்லை .
புஸ்ஸிஆனந்த், செங்கோட்டையன் , ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் ஆகியோர் கொண்ட குழு தான் நேர்காணல் நடத்துகிறது.
இப்போதைக்கு தேர்தல் செலவை ஆதவ் அர்ஜுனா பார்த்துக் கொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதால் வேட்பாளர் தேர்வில் அவர் கை ஓங்கி இருக்கிறது.
ஆதவ் அர்ஜுனா பேச்சை தான் விஜய் கேட்கிறார்.
ஆட்சியில் பங்கு என்று கட்சி ஆரம்பித்ததும் விஜய் அறிவித்தாலும் எந்தக் கட்சியும் அவருடன் கூட்டணி வைக்க வரவில்லை.
திமுகவை பொருத்தவரை ஆட்சியில் பங்கு என்ற குரலை வாய்ப்பில்லை என்று முடித்து விட்டது.
எடப்பாடி அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அந்தக் குரலை எழும்ப விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடி அணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிக்கு பாஜக அழுத்தம் தர வாய்ப்பு இருக்கிறது.
இந்த முறை தேர்தல் செலவை வேட்பாளர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் கட்சி செலவு செய்யாது என்று சொல்லி இருக்கிறார் எடப்பாடி.
திமுக அமைச்சர்களை தவிர மற்ற வேட்பாளர்கள் செலவை நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறது.
கிட்டதட்ட திருவாளர் வாக்களார்கள் அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் ஒட்டுபோடுவோம் என்று வாய்திறக்காமல் சைலாண்டாக இருப்பது தான் பல அரசியல் கட்சிகளின் அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறந்து கொண்டிருக்கிறது .
நான்கு முனை போட்டி என்ற சக்கர வியூகத்தில் சிக்கி இருக்கிறது தமிழக அரசியல் கட்சிகள்.
இந்த சக்கர வியூகத்தில் தப்பி வரும் கட்சி எது என்பது மே நான்காம் தேதி தெரியும்.
கடைசி செய்தி :
டாக்டர் ராமதாசை சசிகலா முதலில் சந்தித்து நாம் இருவரும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்ற போது முதலில் மறுத்தவர் டாக்டர் ராமதாஸ். இப்போது மறுபடியும் சசிகலா பேச்சுவார்த்தைக்கு பிறகு பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திப்பதாக சசிகலா அறிவித்திருக்கிறார். நான்கு முனைபோட்டி என்பது இப்போது ஐந்து முனை போட்டியாக மாறப் போகிறது.தமிழகத்துக்கு இது புதுசைய்யா புதுசு.

Leave a comment
Upload