தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

கல்யாண ஆசை !

20260220125819587.jpeg

திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் திருமணத்துக்கு தயாராகும் மணப்பெண் போல் காட்சி அளிக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்து "பூ மாலையே நூல் சேரவா போன்ற பாடலை இணைத்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. த்ரிஷாவுக்கும் கல்யாண ஆசை வந்துவிட்டது என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா

20260220130549762.png

திருமணத்திற்கு பிறகு தேன்நிலவு கொண்டாட்டம் எல்லாம் முடிந்து மீண்டும் படப்பிடிப்புக்கு வரத் தொடங்கி விட்டால் நடிகை ராஷ்மிகா மந்தனா மைசா படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.

சிம்பு

20260220135407787.jpeg

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தில் கபடி வீரராக நடிக்கிறார் சிம்பு. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ,சமுத்திரக்கனி ,விக்ரந், கிஷோர் ,சைத்ரா ஆச்சர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் .மதுரையில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது இந்த படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் டூரிஸ்ட் பேமிலி உள்ளிட்ட படங்களில் நடித்த யோகலட்சுமியும் நடிக்கிறார்கள்

ஸ்ரீ லீலா

20260220135220434.jpeg

அசுரவேக ஆட்டநாயகி என்ற பெயர் பெற்ற நடிகை லீலா தற்போது பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு சம்பளம் மூன்று கோடியே 25 லட்சம்.

ஜனநாயகன்

20260220125021442.png

ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு குழு பார்த்து சான்றிதழ் தர ஒப்புதல் தந்து விட்டது. தமிழகத்தில் தற்சமயம் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் ஆணையம் தான் படரிலீஸை முடிவு செய்யுமாம்.

மணிரத்தினம்

20260220134115414.jpeg

விஜய் சேதுபதி சாய் பல்லவி நடித்து மணிரத்தினம் இயக்கும் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இல்லை. அவருக்கு பதிலாக சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி

20260220133818125.jpeg

"திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை போய்விட்டது. அதனால் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. திருமணத்தில் இரண்டு பேர் சேர்ந்து வாழும் போது நிம்மதி இல்லாத நிலை வரும். அதேசமயம் ஆண் பெண் இருவருக்கும் துணை தேவை தான். அதற்குத் திருமணம் இல்லாத உறவே நல்லது "என்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சமீபத்தில் இதே கருத்தை ஸ்ருதிஹாசன் சொல்லி இருந்தார்.

கமலஹாசன்

2026022013362124.jpeg

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன் நடிக்கும் சேயோன். படத்தில் ஐகான் வேடத்தில் கமலஹாசன் நடிக்க இருக்கிறார். கதையின் முக்கிய திருப்புமுனையாக இந்த வேடம் இருக்குமாம்.

சூர்யா

சூர்யா நடிக்கும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா துப்பாக்கி சூடும் வீரராக நடிக்கிறார் 40 வயது சூரியாவை 20 வயது மமிதா பைஜூ காதலிப்பதாக கதை.

திரிஷா

20260220125049891.jpg

"விஜய் திரிஷா இருவருமே எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். குறிப்பாக திரிஷாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் சந்தித்த பெண்களிலேயே மிகவும் கண்ணியமானவர் மென்மையான வரும் கூட. சமூக வலைதளங்களில் வெளியாகும் அவதூறுகளுக்கு எல்லாம் அவர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் "என்று கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகை குஷ்பூ.

சமீரா ரெட்டி

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் திண்டாடி வரும் நிலையில் தனக்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டதை சமீரா ரெட்டி கொண்டாடியுள்ளார். வீட்டுக்கு வந்த சிலிண்டரை சிவப்புகம்பளம் விரித்து நகர்த்திவீட்டுக்குள் கொண்டு வரும் சமீரா ரெட்டி அந்த சிலிண்டருக்கு கிரீடம் வைத்து பணத்தால் விசிறி விட்டு காபி கொடுத்து உபசரிப்பது போன்ற காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

பூனம் பாஜ்வா

20260220132826319.jpeg

"எல்லாவற்றையும் மறந்து விடலாம் என்று சொல்லும் பெண்களிடம் உஷாராக இருங்கள். பெண்கள் எதையும் மறப்பதில்லை. குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் வரும் மற்ற பெண்கள் சார்ந்த விஷயங்களை மறக்கவே மாட்டார்கள். எனவே பெண்களிடம் உஷாராக நீங்கள் ஜாக்கிரதை" என்று ஆண்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் நடிகை பூனம் பாஜ்வா