தொடர்கள்
கதை
தாம்பூலம் எனக்கல்ல - சுந்தர மணிவண்ணன்.

20260221060423941.jpeg

சாமி…..சாமி…

சன்னமாய் வந்த அந்த இரக்கக் குரல், ஒரு கணம் என்னை உலுக்கியது.

மண்டபத்தின் பிரதான கேட்டிலிருந்து வெளியே வந்த நான், காரை சிறிது நேரம் நிறுத்தி, திரும்பிப் பார்த்தேன்.

இடது புறம் இருந்த அவள், தன் குழந்தையுடன், என்னை நோக்கி ஓடி வந்து, கண்ணீர் வழிந்த முகத்துடன், கையை நீட்டி,

“ஐயா,... தர்ம பிரபு”,

“சாப்புட்டு இரண்டு நாளாச்சு சாமி . உங்க கையாலே ஏதாவது தர்மம் செய்யுங்க சாமி “.

கையோடு அவள் கண்களும் கெஞ்சின. அவள் அருகி்ல் நின்றிருந்த அந்த பிஞ்சு மனம் ஒன்றும் அறியாமல் , என்னை ஏக்கத்தோடு பார்த்தது.

ஆடம்பர விழாக்கள் எதுவும் எனக்கு அறவே பிடிக்காது.அவற்றைத் தவிர்த்து வந்த எனக்கு, இவள் சந்திப்பு, அந்த உறுதியிலிருந்து விலகியதற்குக் கிடைத்த சோதனைையோ என்று எண்ணி, அந்த நினைவுக்குள் என் மனம் நுழைந்தது.

அன்று என்னை நேரில் அழைக்க அவர்கள் என் வீடு தேடி வந்தார்கள்.

திருமண அழைப்பிதழில் இருந்த அலங்காரம், செல்வச் செழிப்பின் பெருமையைக் காட்டியது.

ஆடம்பரமாக நடக்கப்போகும்

இத் திருமணத்தை, ஏதோ ஒரு காரணம் சொல்லி நான் கலந்து கொள்வதை தவிர்க்க இயலாது. மிகவும் நெருக்கமான நட்பு.

மரியாதை கருதி, அந்த அழைப்பிதழைத் திறந்து பார்த்தேன்.

முதல் நாள் வரவேற்பு . பிரபல இசை அமைப்பாளரின் மெல்லிசை நிகழ்ச்சி, இன்னும் பல சம்பிரதாயச் சடங்குகள்.

முகூர்த்த நேரம் மறுநாள் . அதுவே எனக்கு இலகு வாக இருக்கும் என நினைத்து, நான் வருவதாகக் கூறினேன்.

நகரின் மையப் பகுதியில் உள்ள அந்த மண்டபம். செல்வச் செழிப்பின் வெளிப்பாடாய், உட்புறமும், வெளிப்புறமும் தக தகவென ஜொலித்தது.

கனவான்களும்,பிரபலங்களும் மட்டுமே நாடும் மண்டபம்

பல கார்கள் மண்டபத்துள் நுழைந்து வெளியே வந்து கொண்டிருந்தன,

பிரபல கேட்டரர். பட்டியலில் அடங்காத பல மெனுக்கள்.

“சாப்பிட வயிறு இருக்குமாப்பா” கிண்டல் இல்லை. நண்பர் உண்மையைத்தான் சொன்னார்.

“ நேற்றையிலிருந்து ஒரு செய்தி வைரலா போகுது. உண்மையா? பொய்யா? சிலிண்டர் தட்டுப்பாடு நிறைய இருக்காமே".

“இந்த கேட்டரருக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லப்பா.பெரிய இடத்துச் செல்வாக்கு நிறைய உண்டு. அவருக்கு சிலிண்டர் கிடைக்காம போயிடுமா”. நையாண்டியாய்ச் சொன்னார் இன்னொரு நண்பர்.

.

முகூர்த்தம் முடிஞ்சதும், டைனிங் ஹாலை

நோக்கினோம்.

புதுப் புதுப் பெயர்களில் மெனுக்கள். எத்தனை வெரைட்டி. எண்ணி மாளாது. அடுக்கி வைத்தவற்றைப் பார்க்கவே என் மனம் கூசியது.

ரசித்துப் பார்த்தவர்கள் அவைகளின் சுவை அறிய, இனி்ப்பு, காரம் என எல்லாவற்றையும் இலைகளில் நிரப்பிக் கொண்டனர். அது பசியால் அல்ல.பார்வை தந்த ஆசை.

எனக்கோ சுவைக்க நேரம் இல்லை. ஆசையும் இல்லை.

பரிமாறப்பட்ட உணவுகளில் பாதியை உண்டு, மீதியை ஒதுக்கி வைத்தனர்,

எறிந்த இலைகளில் மிச்சமாய்க் கிடந்த உணவுகள் ஏராளமாய் இருந்தது.

கனத்த இலைைகளை அள்ளிச் செல்லக் கார்ப்பரேஷன் வண்டிகள் அருகில் காத்திருந்தன.

கசந்த மனத்தோடு அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டே, வெளியே வந்தேன்.

“அந்த நினைவின் பிடியிலிருந்து நான் வெளியே வந்தபோது…”

“என் வருகைக்கே காத்திருந்தவள் போல, யாசகம் கேட்டு அவள் என்னைத் தேடி வந்தாள்.”

அவளைப் புறக்கணித்துப் போக மனமில்லாமல்,

ஐந் நூறு ரூபாய் தாள் ஒன்றை என் சட்டைப் பையிலிருந்த எடுத்து, அந்த தாம்பூல பையில் வைத்து, அவளிடம் கொடுத்தேன்.

“சாமி நீ நல்லா இருக்கணும்”

என்னை வாயார வாழ்த்தி விட்டு, ஐநூறு ரூபாய் தாளை மட்டும் எடுத்துக் கொண்டு, தாம்பூலப் பையை என்னிடமே திருப்பித் தந்தாள்.

அவளின் இச் செய்கை, எனை திடுக்கிட வைத்தது.

“அந்த தாம்பூலம் தன்னதல்ல என்பதை அவள் சொல்லாமல் சொல்லிவிட்டாள்.”

எனக்கு தண்டனையா? இல்லை மன்னிப்பா?

தாம்பூலம் எனக்கல்ல……

சுந்தர மணிவண்ணன்.

எனக்குத் தெரியல.