
தலைமுழுக்க கர்ல் முடியுடன் ஜேகேவை எப்போது சந்தித்தேன் என்று யோசிக்கின்றேன்.
சட்டென நினைவுக்கு வருவது….. ஆனந்த விகடன் அலுவலகத்தில் அடிக்கடி சென்று கதை, கவிதை எழுதியதை வேலைதேடி அலைந்த காலத்தில் ரிசப்ஷனில் கொடுத்து விட்டு செல்வேன். அந்த மாதிரியான ஒரு தினத்தில் ஜேகே அறிமுகம் கிடைத்தது.
சினிமாவுக்குப் போன சித்தாளு படித்ததும் அவரைப்பார்க்க ஆவல் பெருகியது. அது விகடன் மூலமாக தீர்ந்தது. அந்த சமயத்தில் கைவசம் ஆட்டோகிராப் புக் என்னிடம் இல்லை. ஆனால், இன்னொரு தருணத்தில் லஷ்மி, ஸ்ரீகாந்த், ஒய்ஜிபி நடித்த ஜேகே வின் திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள் "பார்த்தேன்.ப்ரிவ்யூ ஷோ தான்.

அதன்பிறகுஅவரை ராணி சீதை ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் பார்த்து பேசிய சமயத்தில் வாங்கிய ஆட்டோகிராப் தான் இதோ மேலே. இதில் தேதி போடவில்லை ஆனால் வீட்டுவிலாசம் அவராகவே எழுதியது.

Leave a comment
Upload