
அமெரிக்கா –இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து 20 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் ஆயுத பலம் , போர்க்கப்பல்களை பார்த்து எப்படியும் ஈரான் பயந்து வழிக்கு வந்துவிடும் என்ற தவறான கணக்கு இன்று அமெரிக்காவிற்கு தலைவலி போய் திருகுவலி வந்துவிட்டது.
அமெரிக்கா காங்கிரஸ் இடம் போர் முன்னெடுப்பு குறித்து எந்த தகவல் சொல்லாமல் ட்ரம்ப் போர் புரிகிறார் இதனால் அமெரிக்க பொருளாதரத்திற்கு பெருத்த சேதம் என்ற எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரிரு நாட்களில் போர் முடிந்துவிடும் என்ற நினைப்போடு இருந்த அமெரிக்க ராணுவம் கூட ஈரான் இப்படி எதிர்த்து போர் புரியும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

அமெரிக்கா வான் எதிர்ப்பு ஆயுதங்கள் ஈரான் அனுப்பும் ட்ரோன்களை அழிக்க பெருமளவில் பயன்படுத்துவதால் பெரும் செலவு ஏற்படுகிறது என்று அமெரிக்க ராணுவத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க உளவு செயற்கை கோள்கள் கண்ணில் மண்ணை தூவி ஈரான் தனது எதிர்ப்பு ஏவுகணை மூலம் அமெரிக்க ஆதரவு தரும் அண்டை நாடுகளின் இடங்களை குறி தவறாமல் தாக்கி வருகிறது.
இதுவரை ஈரான் பழைய ஆயுதம் முலம் தாக்கியதற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு பெருத்த சேதம் ,உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எங்கிருக்கிறார் என்பதே இப்போதைக்கு மர்மமாக உள்ளது. அவரது வீடியோக்கள் உண்மை தன்மையுடன் உள்ளதா என்ற ஆராய்ச்சி சமூக வலைதளங்களில் பேசு பொருளாகிவிட்டது.
உலக நாடுகளுக்கு எரிப்பொருள் செல்லாமல் அமெரிக்க இஸ்ரேல் ஈரான் போரால் எரிபொருள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

ஈரான் அணு ஆயுதத்தைப் உற்பத்தி செய்யவோ அல்லது அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கோ எந்த ஆதாரமும் இல்லை .மார்ச் 1 ஆம் தேதி, 9/11, பேர்ல் ஹார்பர் போன்ற ஒரு பெரிய திடீர் தாக்குதல்களை ஈரானியர்கள் நடத்தப் போகிறார்கள், நமது தளங்களில் ஒன்றைத் தாக்கப் போகிறார்கள்’ என்று எந்த உளவுத் தகவலும் இல்லை. இஸ்ரேல்தான் ட்ரம்பை இந்த முடிவை எடுக்கக் கட்டாயப்படுத்தி ஈரான் மீது போர் தொடங்கியது அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் ஜோசப் கென்ட் தனது எதிர்ப்பினை தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இது குறித்து அமெரிக்காவின் எப் பி ஐ புலனாய்வு விசாரித்து வருகிறது.

அமெரிக்காவிற்கு போரை நிறுத்தும் படி எந்த நாடும் வேண்டுகோள் விடுவிக்கவில்லை .
அழம் தெரியாமல் காலை விட்டு முதலை வாயில் மாட்டிகொண்ட கதையாக அமெரிக்க இப்போது ஈரான் போரில் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.

அமெரிக்கா தனக்கு உதவி செய்யும் படி நேட்டோ நாடுகளுக்கு வேண்டுக்கோள் விடுத்தும் யாரும் உதவி செய்யவில்லை .
நாளுக்கு நாள் அமெரிக்காவில் ஈரான் மீது போர் குறித்து எதிர்ப்பு குரல் ட்ரம்ப் எதிராக ஒலிக்க தொடங்கி விட்டது.
இன்னும் ஒரிரு வாரத்திற்க்குள் போர் நிறுத்தம் வரவில்லை என்றால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரான் தனது ஆயுத கிடங்கில் இருந்து சூப்பர்ஸானிக் ஏவுகணைகள் எடுக்கவில்லை , அப்படி நிகழ்ந்தால் ஈரான் சுற்றியிருக்கும் நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

துபாய் கிட்டதட்ட போர் மேகம் சூழ்ந்து பெருத்த சேதம் கண்டு வருகிறது.
எங்கும் சைரன் சத்தம், கச்சா எண்ணெய் தேக்கி வைக்கும் இடங்கள் எல்லாம் குண்டுகளால் தாக்கப்பட்டதால் எங்கும் புகைமண்டலம் மற்றும் தீஜுவாலையுடன் எரிகிறது. இதனால் காற்று மாசு மற்றும் பலவித புதிய நோய்கள் இந்தியா வரை பரவக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் ஈரான் போர் இஸ்ரேல் ஆதரவால் நிகழ்த்தி வருவது அமெரிக்காவிற்கு பெருத்த இழப்பு என்று அங்கு எதிர்ப்பு குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.
ஈரானில் போர் புரிய 18 லட்சம் கோடி வேண்டும் என்று அமெரிக்க ராணுவம் பென்டகனிடம் கோரியது.

அமெரிக்காவின் அதிநவீன F35 போர் விமானத்தினை ஈரான் தாக்கியுள்ளது. இதன் மதிப்பு 850 கோடி ஆகும்.

அமெரிக்கா முட்டு சந்தில் வந்து மாட்டிக்கொண்டது போல் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.
ஈரான் போர் அமெரிக்காவிற்கு பூமரங் ஆகிவிட்டது.

Leave a comment
Upload