தொடர்கள்
அரசியல்
கருத்துக் கதிர்வேலன்

20260220124557790.jpeg

234 தொகுதியிலும் தமிழக வெற்றிக்கழகம் தனித்துப் போட்டி

கூட்டணி எல்லாம் கிடையாதா? !!

தமிழ்நாட்டுக்கு வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு

இது வெயில் காலம் ஆச்சே?!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆள வேண்டும் ஓ பன்னீர்செல்வம்

எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க?!!

கேஸ் சிலிண்டர்கள் தடை இன்றி வினியோகம் இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி

ஆனா கிடைக்க மாட்டேங்குது?!!

திமுகவுக்கு கிடைக்கும் பெண்கள் வாக்குகளை தடுக்க அதிமுக சதி அமைச்சர் ரகுபதி பேட்டி

மகளிர் உரிமைத்தொகை, ஸ்டாலின் பஸ் பயணம் எதுவும் ஒர்க் அவுட் ஆகலையா !!

திமுக குறைத்துக் கொடுத்த நாலு தொகுதிகளை ஏற்றுக் கொண்டது ஏன் வைகோ பேட்டி

ரொம்ப பேசினா இதயத்தில் இடம்ன்னு சொல்லிட்டாங்க அதான்

ஆதவ் அர்ஜுனாவை விஜய் கண்டிக்காதது ஏன் நயினார்நாகேந்திரன் கேள்வி

பேசச் சொன்னதே அவர்தான் அப்புறம் எப்படி கண்டிப்பாக ?

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ரங்கசாமி

அமித்க்ஷா பயம் எல்லாம் இப்ப கிடையாது போல தெரியுது !!

மக்களுக்கு புடிச்சவங்களுக்கு மட்டுமே தேர்தல் வாய்ப்பு முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு

மக்களுக்குப் பிடிச்ச கட்சிக்காரங்க என்றால் கொஞ்சம் கஷ்டம் தலைவரே

கரூர் சம்பவம் தொடர்பாக சென்னையில் விசாரணை நடத்த வேண்டும் சிபிஐக்கு விஜய் கடிதம்

ஆமாம் பிராந்தி பாட்டில் எல்லாம் எடுத்துட்டு போறதுக்கு பிளைட்ல தடையாம் !!

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் யாரும் எதிர்பார்க்காத வகையில்இருக்கும் செல்வப் பெருந்தகை சொல்கிறார்.

கரெக்டு தான் அவருக்கே தெரியாது !!

சென்னை மாவட்ட வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் விவரங்கள் வெளியீடு.

ஆனால் இதில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் என்று விவரம் இருக்காது !!

விஜய் அரசியலுக்கு வந்ததே முதல் அமைச்சர் ஆவதற்கு தான் செங்கோட்டையன் பேட்டி

நல்ல கொள்கை !! நல்ல லட்சியம் !!