
வரும் மார்ச் 25 புதன் ஸ்ரீராம நவமி.
பாரதமெங்கும் கடந்த பத்து லட்ச வருடங்களாக த்ரேதா யுகம் தொட்டு கடந்த த்வாபர யுகம் முழுதுமாக கொண்டாடப்பட்டு இந்த கையுகத்திலும் கொண்டாடப்பட்டு வரும் புண்ணிய தினம்.
நவமியில் உதித்தவர் மஹாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரம்.
கொண்டாட்டங்கள் யுகங்கள் கடந்து வருகையில் மனிதர்களின் பக்தி மற்றும் உணர்வின் வெளிப்பாடில் தற்போது நீண்ட தூரம் பாத யாத்திரையாக தீர்த்த யாத்திரை செல்வது வழக்கமாகி விட்டது.
இந்த பாத யாத்திரையெல்லாம் பாரதத்தில் மட்டும் தான் பிரபலம். ஆம், திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற தமிழ் மூதுரைக்கேற்ப பாரதீயர்கள் பொருளீட்டும் பொருட்டு கடல் கடந்து எங்கெல்லாம் சென்றார்களோ அங்கும் கோயில்களமைத்து பாத யாத்திரைகளை அறிமுகப்படித்தி வருகின்றனர்.
அமெரிக்காவிலும் ஆஸ்த்திரேலியவிலும் ஐய்யப்பன் ஆலயங்களுக்கு சற்று தூரத்திலிருந்து இருமுடியுடன் நடப்பது என்று ஆரம்பித்து விட்டனர்.
அந்த வகையில், பூனாவிலிருந்து பண்டரிபுரத்திற்கு வார்கரி யாத்திரையை மூன்று வாரம் தங்களின் கிருமார்களின் பாதுகைகலை பல்லக்கில் அமர்த்தி தோள்களில் சுமந்தவாறு நடந்து லட்சோப லட்ச எண்ணிக்கையில் இரு பாலரும் வயது வரம்பின்றி, செல்வ அந்தஸ்து பேதமின்றி ஆஷாட சுக்ல ஏகாதசிக்கு நடந்து செல்வதை விகடகவி வாசகர்களுக்கு பரிச்சியமான ஒன்று தானே.
இது போன்று, வடக்கே சார் தாம் என்று அழைக்கப்படும் கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரினாத், கேதார்னாத் என்ற திருத்தலங்களுக்கு பாத யாத்திரையும் உண்டு.
அந்த வகையில் மஹாராஷ்டிராவின் ஷிர்டிக்கு மும்பையிலிருந்து 235 கிமீ தூரத்தை ஷிர்டி சாயிபாபாவின் திரு உருவம் அமர்ந்துள்ள பல்லாக்கை 7 நாள், 9 நாள் என்ற கணக்கு வைத்து சுமந்த படியே ஷிர்டி சென்றடைந்து தரிசனம் செய்வார்கள். குளிர் காலத்தில் காடுகளையும் மலைகளையும் தூரம் கடப்பது எளிது. ஆனால் இந்த ஸ்ரீராமநவமியை முன்னிட்டு நல்ல வெய்யிலில் அந்த திருநாளில் ஷிர்டி அடைவது போன்று தத்தம் பாத யாத்திரைகளை அமைத்துக்கொண்டு மும்பையிலுள்ள சாயி பக்த மண்டலிகள் சாரை சாரையாக செல்ல ஆரம்பித்து விட்டனர்.

அப்படித் தான் எங்கள் சொசய்டிபில்டிங்கிற்கு அடித்த பில்டிங்கிலிருந்து சுமார் 200 பெண்கள் அடங்கிய ஸ்ரீஸாயீ ப்ரேரணாமஹிள பதயாதரா மண்டல் அந்தேரி, மும்பை குழு சென்ற 16 மார்ச் 2026 கிளம்பியுள்ளார்கள்.
வரும் ஸ்ரீராமநவமி, 25 மார்ச் அன்று ஷிர்டியை அடைந்து தரிசனம் செய்வர். சுமார் 230 கி.மீ தொலைவு தூரத்தை இந்த ஒன்பது தினங்களில் கடந்து விடுவார்கள் என தகவல் கிடைத்தது.


[யாத்திரை தொடங்குமுன் குழு தலைவை அம்பிகா நாயர் கொடியை தூக்கிகொள்ளும் காட்சி.]

ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். இது அவரது 21ஆவது வருட பாத யாத்திரை.


குழு தலைவர் அம்பிகா நாயருடன் யாத்திட குறித்து என்னோடு சிறு உரையாடல்.

கிளம்பும் முன் குழுவினரின் குரூப் போட்டோ.
இன்னும் இந்த குழுவில் நடக்கும் பெண்மணிகள் வந்து சேர்ந்த் வண்ணமிருந்தனர்.


இந்த பெண்கள் குழுவிற்குத் துணையாக செல்லும் ஆண்களின் சப்போர்ட் டீம். இருபது பேருள்ளனராம். செல்லும் பெண்களின் சகோதரர்கள், கணவன்மார்கள் தான் அவர்கள் என்ற விவரமும் கிடைக்கிறது.

நாங்க ரெடி நடக்க என்று ஆரவாரம் செய்யும் இளம் பாத சாரி பெண்கள்.
இன்னும் சில போட்டோக்கள் இதோ:




கிளம்புமுன் சாயிபாவுடன் ஒரு குரூப் போட்டோ செஷன்



ஷிர்டி சாயிபாப கோவில் அமைப்பு மாதிரி ஜோடிக்கப்பட்ட செட்டைத் தாங்கிய காரும் இந்த யாத்திரீகர்களோடு செல்கிறது.
அப்படி, இந்த ஜனவரி 22 ஆம் தேதி கடைசி 25 கிமீ யாத்திரை செய்ய எனக்குத் தெரிந்த, ஏன் உங்களுக்கும் தான் அவரைத் நன்கு தெரியுமே!, சந்திர சேகர் ராதோட் நடத்திச் சென்ற ஷிர்டி பாத யாத்திரைக் குழுவுடன் ககந்து கொண்டு சாயிபாபாவின் பல்லக்கு சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றேன். நவம்பர் 16, 2025 சபரிமலை நோக்கி நடக்க அரம்பித்தவர் சபரிமலயில் மகர ஜோதி தரிசனம் முடித்துவிட்டு மும்பை திரும்பிய கையோடு ஷிர்டிக்கு பாத யாத்திரை கிளம்பிவிட்டார். இது அவருக்கு 25 ஆம் வருட பாத யாத்திரையாம். அந்த குழுக்கு அவர் தான் பல்லக்கு சுமக்கும் குழுவின் தலைவர்.

இந்த யாத்திரை பற்றி சிறு குறிப்பு: -
ஒவ்வொரு குழுவிலும் குறைந்த பட்சம் 200லிருந்து 300 வரை பாத யாத்திரீகர்கள் இருப்பார்கள்.
முன்னே கொடி பிடித்த தலைவரொருவர் நடப்பார். பின்னே தோளில் சுமந்த வாறே பல்லக்கு வரும், அதற்கு நிழலாய் (திருப்பதிக்கு குடை போன்று) குடை தாங்கியவர் நடப்பர். அதன் பின் குழுவினர் சாயி பஜன் செய்வதோ, நாமம் சொல்வதோ செய்தவாறே நடந்து வருவர்.
இந்த யாத்திரைக்கு பக்க பலமே, ஆங்காங்கே வேண்டிய நேரங்களில் டீ காபி, டிஃபன், மதியத்திற்கு லன்ச், இரவு டின்னர் போன்றவற்றை செய்து போட வரும் நடமாடும் சமயலறை சப்போர்ட் ஆட்கள் தான். குழுவினருக்கேற்ற தேவையான நீரை ஆங்காங்கு நிறுத்துமிடங்களிகள், மற்றும் இரவு தங்குமிடங்களில் பிடித்து வைக்க பெரிய சின்டக்ஸ் டேங்க் ஒன்றையும் அந்த லாரியில் எடுத்து வருவார்கள். இந்த மாதிரி உதவி வாகனங்களாக இவர்களுடன் ஒரு கார், இரண்டு பைக்குகள் கூடவே எமர்ஜென்சிக்கு. நடப்பவர்களுக்கு அவ்வப்போது தண்ணீர் கொண்டு போய் சேர்ப்பது, முடியாதவர்களுக்கு முதலுதவி மருத்துவம் செய்வது, அல்லது முடியாதவர்களை அன்றைய இரவு தங்கிமிடத்திற்கு அழைத்துச் சென்று இருத்துவது போன்ற சேவைகளை செய்ய வரும் உதவியாளர்கள். பாத யாத்திரீகர்களின் பர்சனல் பொருட்களடங்கிய பெட்டிகள், கைப்பைகள் யாவையும் சேர்த்து இரவில் தங்குமிடத்தில் தரையில் விரித்து உறங்கிடத்தேவையான சீதோஷ்ண நிலைக்கேற்ப டார்பாலீன் ஷீட்டுகள், பாய்க்ள், பெட்சீட்டுகள் தாங்கிவர லாரி, டெம்போவையும் கூடவே எடுத்துச் செல்வர்.

Leave a comment
Upload