தொடர்கள்
வலையங்கம்
வேண்டாம் இலவசம்

20260220132559847.jpeg

அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக இலவசங்களை அறிவிப்பது வாடிக்கையாகி விட்டது. மகளிர் உரிமைத் தொகை, அரசுப் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை ,பெண்களுக்கு இலவச பயணம், முதியோர் இலவச பயணம், இலவச கேஸ் சிலிண்டர், கல்விக் கட்டணம் தள்ளுபடி என்று இலவசங்களை வாரி இறைக்கிறது. அரசியல் கட்சிகள். ஒரு பக்கம் மத்திய அரசு நிதி தரவில்லை என்று சொல்லும் தமிழக அரசு இலவசங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி செலவு செய்கிறது. தமிழகத்தின் கடன் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடன் அதிகரிக்க முக்கிய காரணம் இலவசம்தான். ஆனால் இந்த இலவசங்களை மக்கள் நல திட்டங்கள் என்று சொல்லி பெருமை பேசுகிறது தமிழக அரசு. இலவசங்கள் இப்போது இந்தியா முழுவதும் முக்கிய இடத்தை வகிக்கிறது எல்லாமே வாக்கு வங்கி அரசியல் தான்.

மத்திய அரசுகூட இப்போது இலவசங்களில் கவனம் செலுத்துகிறது. நம் நாட்டின் மொத்த கடன் 197 லட்சம் கோடி. தமிழக அரசு தொடர்ந்து ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் இலவசங்கள் பொருளாதார வளர்ச்சியை தடுக்கிறது என்று கருத்து சொல்லி இருக்கிறது. மீனைத் தருவதற்கு பதில் தூண்டில் தந்து மீன் பிடிக்க கற்றுத் தருவது தான் சரியான உதவி என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. தனி மனிதன் தனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கான வழிகாட்டுதலாக வேலை வாய்ப்பு கல்விக்கு உதவி இலவச கல்வி போன்றவை தான் உண்மையான பொருளாதாரம் வளர்ச்சிக்கு உதவும். இதை அரசியல் கட்சிகள் என்று தெரிந்து கொள்ளும் என்பது தெரியவில்லை.