தொடர்கள்
அரசியல்
கருத்து க்கதிர்வேலன்

2026030311331415.jpeg

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதம் ஏன் பரபரப்பு தகவல் !!

வேற என்ன வேட்பாளர் கிடைத்து இருக்க மாட்டாங்க அதானே !!

தொகுதி மாறி போட்டியிடுவது ஏன், நயினார் விளக்கம்.

அந்தத் தொகுதியில் ஜெயிக்கிறது வாய்ப்பு கம்மி அதான் !!

எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக களத்துக்கு வந்துள்ளேன் – விஜய்.

அதெல்லாம் ஒன்னும் பயப்பட வேண்டாம் தலைவரே வலி நிவாரணி தைலம் நிறைய விக்குது அதுக்கு எதுக்கு களத்துக்கு வந்தீங்க கடைக்கு போங்க !!

விஜயை விட அஜித்துக்கு இரண்டு மடங்கு கூட்டம் வரும் செல்வப் பெருந்தகை.

அப்ப கூட எனக்கும் கூட்டம் வரும் என்று உங்களால சொல்ல முடியல பாத்தீங்களா ?

திமுகவிடம் அதிக சீட்டு வாங்க காங்கிரஸ் தலைவருக்கு திறன் இல்லை -பிரவீன் சக்கரவர்த்தி.

அப்படியே வாங்கி தந்தாலும் ஜெயிக்கிற திறன் உங்களுக்கு இல்லையே !!

60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் திமுக தேர்தல் அறிக்கை.

அப்ப செந்தில் பாலாஜி கே என் நேரு வசூல் வேட்டையில் இறங்கி விடுவார்களே !!

விஜய் மீது தேர்தல் அதிகாரி புகார்.

பதிலுக்கு விஜய் தேர்தல் அதிகாரி மீது புகார் சொல்லி இருப்பாரே !

காங்கிரஸ் மட்டுமே பிஜேபியை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது - ராகுல் காந்தி.

பிஜேபியின் பி டீம் திமுக என்று விஜய் சொன்னது உண்மைதானா கோபால்.

மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வேறு மாநிலத்தினரை சேர்க்க பாஜக முயற்சி - மம்தா பானர்ஜி.

இது பரவாயில்லையே , நீங்க வேறு நாட்டினரே தானே சேர்க்க முயற்சி பண்றீங்க !!

ரூபாய் 8000 கூப்பன் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் -நயினார் நாகேந்திரன்.

நீங்களும் கேரளாவுல கூப்பன் கொடுக்க போறதா சொல்லி இருக்கீங்க அப்ப அதுக்கு பேர் என்ன ?

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள்.

அது இருக்கட்டும் பொட்டி எப்ப வருமாம் ? அத கேட்டீங்களா !!

ஜாடிக்கேத்த மூடி மாதிரி மோடிக்கேத்த அடிமை இபிஎஸ் -உதயநிதி ஸ்டாலின்.

உங்க சைடுல அடிமைகள் எண்ணிக்கை கொஞ்சம் ஜாஸ்தி போல !!

ஸ்டாலின் வாகனத்தில் சோதனை.

ஆமாமா வழக்கம் போல இந்த சடங்கு கண்டிப்பா நடக்கும் !!

கேரளத் தலைமை அதிகாரி உள்ளிட்டோர் ஆளும் அரசுடன் கூட்டு சேர்ந்து சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதை சீர்குலைக்க பார்க்கிறார்கள் - கேரள பாஜக குற்றச்சாட்டு.

இது நம்பற மாதிரி இல்லையே, அப்படியே மாத்தி சொல்றீங்க !!