தொடர்கள்
அனுபவம்
நினைவலைகள் : "பெருந்தலைவர் காமராஜர் அய்யா" – அம்பத்தூர் ரங்கராஜன்


20260408102446380.jpg

நான் பள்ளிக்கூட மாணவனாக இருந்த காலத்திலேயே ஸ்தாபன காங்கிரஸ்காரன். ஆம், 1969ல் காங்கிரஸ் இரண்டாக உடைந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடைய தலைமையிலான காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் என்றும், நிஜலிங்கப்பாவைத்

தலைவராகக் கொண்டது.

அது ஸ்தாபன காங்கிரஸ் என்றழைக்கப்பட்டது.

நான், என்தம்பி, எல்லோரும் ஸ்தாபன காங்கிரஸ் பக்கம்.1971 முதல் 1975 வரை.

கல்லூரி மாணவப்பருவத்தில் காஞ்சி பச்சையப்பன்கல்லூரி யூனியன் தேர்தலில் திமுக மற்றும் ஸ்தாபன காங்கிரஸ்மட்டுமே.

நான் யூனியனில் எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனால் யூனியன் கூட்டங்களில் முக்கிய பிரமுகரை பேச காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வந்து குமரி அனந்தன் அவர்களை சந்திக்க உதவியது நான் சார்ந்திருந்த ஸ்தாபன காங்கிரஸ்மட்டுமே.

இதுதவிர பெருந்தலைவர் அவர்களை அவருடைய பிறந்த தினமான 15/07/1975 அன்று திருமலைப்பிள்ளை ரோட்டில் அவருடைய வீட்டில் காலை சுமாராக 7.00 மணிக்கு ஆசி வாங்க சென்றேன், அந்த சமயத்தில் எமர்ஜென்சி, மிசா காலம் எனவே ரொம்ப ரொம்ப மூட் அவுட்டில் இருந்தார், ஆசீர்வாதம் செயயும் எண்ணமில்லை என்றார். ரொம்ப கெஞ்சி ஆட்டோகிராப் மட்டும் வாங்கிவந்தேன்.

20260408102515127.jpg