தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் : தெளிவான முடிவெடுங்கள்

20260416095443776.jpeg

சென்ற திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் ஒரு கோடியே முப்பத்தி ஒரு லட்சம் குடும்பத்தினருக்கு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் போடப்பட்டது. தமிழக வெற்றி கழகம் தேர்தல் அறிக்கையில் நாங்கள் 2500 ரூபாய் தருவோம் என்றார்கள். ஆனால் முதல்வர் விஜய் தனது முதல் உரையிலேயே கஜானாவை துடைத்து வைத்திருக்கிறார்கள் எனவே கொஞ்சம் அவகாசம் தாருங்கள் என்றார்.

14ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை பற்றி தமிழக அரசு செய்திக் குறிப்பில் அது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் அதை சீரமைத்து பிறகு மகளிர்க்கு வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்குக் காரணம் தெளிவான முடிவு எடுக்காமல் அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்வார்களோ என்ற அச்சம் தான். மகளிர் உரிமைத் தொகை வழங்கிய திமுகவை தமிழக மகளிர் புறக்கணித்து தமிழக வெற்றி கழகத்தை ஆட்சியில் அமர செய்திருக்கிறார்கள். மகளிருக்கு நான் நிறைய செய்திருக்கிறேன் என்று பெருமை பேசிய முதல்வரே அவரது தொகுதியில் தோல்வியை சந்திக்கிறார். அப்படி இருக்கும்போது மறு ஆய்வு செய்யப்படும் என்று சொன்ன இந்த அரசுஅவசர அவசரமாகவங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டிய அவசியம் என்ன.சரியோ தவரோ முதலில் தெளிவான முடிவை எடுக்க பழகிக் கொள்ளுங்கள் அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.