
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
நடமாடும் தெய்வம் - பாகம் - 6
நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
இந்த வாரம் ஆறாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .
ஸ்ரீ மஹா பெரியவாளின் பால்ய கால நிகழ்வுகள் தொடர்கிறது.
இந்தவாரம் ஸ்ரீ லட்சுமிகாந்தன் மடத்திலிருந்து தனது இல்லத்திற்கு வந்து தனது தாயார் கையில் பசியாற,ருசியாக உணவு அருந்துகிறார். ஸ்ரீ பெரியவா மடத்தில் உடல்நிலை சரியாக இல்லாமல் இருக்கிறார் என்ற தகவல் அறிந்து விரைகிறார். தனது இல்லத்தில் தான் உண்ட இந்த உணவு தான் தனது தாயார் கையால் கடைசியாக சாப்பிட உணவு என்பது அவருக்கு தெரியாது.

Leave a comment
Upload