
விஜய் முதல்வராகி 15 நாட்களில் சாதித்ததை விட சறுக்கல்கள் தான் அதிகம்.
நம்பிக்கை ஓட்டே தீய சக்தி என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொன்ன திமுகவின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சிகளின் தயவில் வெற்றி.
குதிரை வேகம் என்று சொல்லிவிட்டு குதிரை பேரம் நடத்தி அதிமுகவை இரண்டாக உடைத்தார் .
நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா உடனே கட்சியில் சேர்த்து தொகுதிகள் காலியிடங்கள் என்று அறிவிப்பு....
'நான் வேற லெவல் 'என்று சொல்லிக்கொண்டு ஆட்சியைப் பிடித்து விட்டு எல்லா அரசியல் முரண்களின் மொத்த உருவமாக இன்று தமிழக வெற்றி கழகம் இருக்கிறது.
விஜய் முதல்வராக பதவி ஏற்ற 15 நாட்களில் 25 கொலைகள், நான்கு இரட்டை கொலை 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது.
இந்த லட்சணத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது "ஸ்டாலின் சார் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை "என்று பேசியவர் தான் விஜய்.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடூரம் அடங்குவதற்குள் விழுப்புரம் மரக்காணத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.
மதுரையில் சிறுவன் படுகொலை, கோவையில் இளம் பெண் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீச்சு ,
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதை கும்பல் 13 வாகனங்களை அடித்து நொறுக்கி இருக்கிறது.
இதற்கெல்லாம் சரியான விளக்கம் தராமல் காவல்துறை உயர்மட்டக் கூட்டம் என்று கண் துடைப்பு நாடகம் நடத்தி இருக்கிறார் விஜய் .
மரபை மீறி விஜய் எழுதிய புதுக்கவிதை......

ஜோசப் விஜய்யின் டெல்லி விஜயம் இன்னொரு தமாஷ்.
பிரதமரை சந்திக்க அவர் அமைச்சர்கள் யாரையும் அழைத்துச் செல்லவில்லை.
அதற்கு பதில் அவரது நண்பர்களை அழைத்துச் சென்று இருக்கிறார். மேகதாது அணை விவகாரம், மீனவர்கள் கைது, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை என தமிழகத்தில் வாழ்வாதார அடங்கிய கோரிக்கைகளை எடுத்துச் சென்ற முதலமைச்சருக்கு பிரதமரிடமிருந்து கிடைத்தது 20 நிமிட சம்பிரதாய சந்திப்பு மட்டுமே.
இதே விஜய் இதற்கு முன் இருந்த முதலமைச்சரை அடிபணிந்து போகிறார் பயப்படுகிறார் என்று பேசியவருக்கு பிரதமர் சொன்ன மரியாதை இவ்வளவுதான்.
இப்போது தமிழக கூட்டணியில் அமைச்சரவையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது .
மேகதாதுவில் அணை கட்டிய தீருவோம் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் முதல்வராக போகிற டி.கே.சிவகுமார் முதல்வர் என்ற முறையில் இதற்கு விஜயின் பதில் இதுவரை வரவில்லை.
இதுவரை பத்திரிக்கை தோழர்களை விஜய் சந்திக்கவில்லை அது அவர் தனிப்பட்ட விருப்பம்.
ஆட்சி நடத்துபவர்களின் செயல்பாடு பற்றிய கருத்து மற்றும் விமர்சனங்களுக்கு ஆட்சியாளர்களில் யாராவது ஒருத்தர் பொறுப்பாக பதில் அல்லது விளக்கம் சொல்ல வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் இருக்கிறது.
15 நாட்களிலேயே விஜய் ஆட்சி பற்றி காமெண்ட் சொல்வது தவறு என்று ஒரு பக்கம் பேசினாலும்,மேற்கு வங்கத்தில் பாஜகவின் புதிய அரசை பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டைப் போலவே மேற்கு வங்கத்திலும் ஆட்சி மாற்றம்.
பதவி ஏற்ற முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இந்திய வங்கதேச எல்லைப் பகுதியில் ஊடுருவலை தடுக்கவும் பாதுகாப்பை பலப்படுத்தவும், சுமார் 145 ஏக்கருக்கு அதிகமான இடத்தை பி எஸ் எஃப் எனப்படும் பாதுகாப்பு எல்லை படைக்கு தந்து மிகப்பெரிய பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கிறது மேற்குவங்க அரசு.
பெண்களுக்கு மாதம் 3000 திட்டத்திற்கு நேரடியாக வீடுகளில் படிவங்கள் வழங்கி தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலையில் அந்த அரசு இறங்கி இருக்கிறது.
பள்ளி கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இருந்த மதுக்கடைகளை அகற்றும் நடவடிக்கையில் உடனடியாக இறங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் சந்திப்பு சம்பிரதாய சடங்கை தவிர்த்துப் பார்த்தால் பத்து நிமிடம் தான்.
அதற்கு முந்தைய தினம் கேரள முதல்வர் சதீசன் பிரதமரை சந்தித்து 40 நிமிடம் பேசி இருக்கிறார்.
சதீசன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இதே போல் மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருந்து ரத்து என்பதும் இப்போது சர்ச்சை விஷயமாக இருக்கிறது.
தமிழக அரசு சார்பில் விஜய் சந்திப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டது உண்மைதான். அதுவும் பிரதமர் சந்திப்புக்குப் பிறகு உள்துறை அமைச்சர் சந்திப்பு என்று தான் திட்டமிடப்பட்டது. ஆனாலும் சந்திப்பு நடக்கவில்லை கேரளா முதல்வர் அமித்ஷா சந்திப்பு நடந்திருக்கிறது.
அப்போதும் அமித் ஷாவுக்கு முக்கிய ஒரு அலுவல் கூட்டம் இருந்தது அப்படி இருந்தும் அவர் கேரள முதல்வருக்கு நேரம் ஒதுக்கி இருக்கிறார்.
மறுநாள் 10 மணிக்கு காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி அவர்கள் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதுவும் நடக்கவில்லை.
இப்படி தமிழ் சினிமா மாதிரி கடைசிவரை சஸ்பென்ஸ் வைத்து நடத்தும் விஜயின் ஆட்சி சினிமா தனமானது என்பதை மக்கள் மெல்ல, ஆனால் தெளிவாக புரிந்து கொள்ள துவங்கியிருக்கிறார்கள்.
மரபை மீறிய முக்கிய விஷயம் பிரதமரை சந்தித்து விட்டு பத்திரிகையாளர்களை சந்திக்காமல் விலகி சென்றது தான். இது பத்திரிகையாளர்களிடையே அதிர்ச்சி அளித்திருக்கிறது.
புதுக்கவிதை என்று எழுதி விட்டோம்.
சினிமா பாடல் வரி போல.... கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை.
பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a comment
Upload