தொடர்கள்
அனுபவம்
இப்படியும் ஒரு தாயா ?? - முனைவர் என்.பத்ரி

2026043008262596.jpeg

(பெர்த் இப்படி தான் இருக்குமா என்று கேட்க கூடாது. ஏ.ஐ.கொடுத்த படம்)

அந்த இரவு நேர ரயில் சிதம்பரத்தை விட்டு புறப்பட்டது. நான் கீழ் படுக்கையில் படுத்துகொண்டிருந்தேன். எதிர்படுக்கையில் என்னைப் போன்றே ஒரு வயதானவர் படுத்துக்கொண்டிருந்தார்.

அடுத்த நிறுத்தத்தில் ரயில் நின்றது. ஒரு 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி ரயிலில்எங்கள் பெட்டியில் ஏறினாள்.அவள் கையில் ஒரு கைக்குழந்தை இருந்தது. கைக்குழந்தைபடுப்பதற்கு ஏதுவாக மேல் இருக்கைகள் இரண்டையும் தன் புடவை ஒன்றால் இணைத்து ஒருதொட்டிலை அமைத்தாள்.

குழந்தையை தொட்டிலில் இட்டு அதற்கு ஒரு பாட்டிலில் பாலை குடிப்பதற்கு வைத்துவிட்டாள். மேல் படுக்கையில் சுடிதார் அணிந்திருந்த குழந்தையின் அம்மா லாவகமாகஏறி வசதியாக படுத்தார்.விரைவில் அவளிடமிருந்து வந்த குறட்டைச் சத்தம் அவளின் ஆழ்ந்தஉறக்கத்தை உறுதிப்படுத்தியது. சிறிது நேர அழுகைக்கு பிறகு பாட்டில் பாலைக் குடிக்கத்துவங்கிய குழந்தையும் உறங்கத் தொடங்கியது.

நள்ளிரவு வந்தது. ரயில் விரைந்து சென்று கொண்டிருந்தது. பெட்டியில் எல்லோரும்உறங்கிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் குழந்தை திரும்பவும் அழத் தொடங்கியது.பெட்டியில் கீழே நான் கால் வைக்கும் போது ஈரமாக இருந்தது.ஒரு வேளை குழந்தைக்குவயிறு காலியாகி மீண்டும் பசியோ?

மேல் பெர்த்தில் படுத்திருந்த அந்த பெண் கீழ்பெர்த்தில் எனக்கு எதிரே இருந்தபெரியவரிடம்,’ஐயா தொட்டிலை கொஞ்சம் ஆட்டி விடுங்களேன். குழந்தை அழுதில்ல? என்றுசொன்னாளே பார்க்கலாம்.என்னுள் அதிர்ச்சியும், ஆச்சரியமும்.என்ன தாய் இவள்? யாருடையகுழந்தையை யார் தூங்க வைப்பது?

தொடர்ந்து பாலை குடிக்க தொடங்கிய குழந்தை, பால் தீர்த்தவுடன் மீண்டும் அழத்தொடங்கியது. மேலே அவளுடைய அம்மா நன்றாக குறட்டை விட்டு இன்னும் நன்றாகக்தூங்கிக் கொண்டிருந்தாள்.

கீழே எனக்கு எதிரே இருந்த பெரியவருக்கு அந்த குழந்தையின் அழுகை குரல்அவஸ்தையைக் கொடுத்து இருக்க வேண்டும்.அவரால் தூங்கவும் முடியவில்லை குழந்தையின்அழுகுரல் அவருக்கு அவருடைய பேத்தியை நினைவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.

அந்த குழந்தையின் அம்மாவோ இந்தக் குழந்தையின் அழும் குரலைஇம்மியளவும் சட்டை செய்யவில்லை.இவர் எழுந்து உட்கார்ந்து அந்த குழந்தையின்தொட்டிலை அடிக்கடி ஆட்டி குழந்தையை ஆசுவாசிப்படுத்தி தூங்க வைத்தார். பிறகும்தூங்கவில்லை.

பிறகு கஷ்டப்பட்டு எடுத்து தனக்கு பக்கத்தில் தனது வேட்டி ஒன்றைப் பரப்பி படுக்கவைத்தார். தான் குடிக்க வைத்திருந்த பாலை குழந்தையின் பாட்டிலில் ஊற்றினார். அந்தக்குழந்தையை குடிக்க வைத்தார். குழந்தை சற்று நேரத்தில் நிம்மதியாகஉறங்கத்தொடங்கியது. அவரும்,நானும் சற்று உறங்கத் தொடங்கினோம்.

மறுநாள் காலை இரயில் தாம்பரம் ரயில் நிலையத்தை அடைந்தது. அந்த தாய்இறங்கி உடல் சோம்பலை முறித்துக் கொண்டாள். முகத்தைப் பார்த்தாலே நன்றாகதெரிந்தது நல்ல உறக்கத்தில் இருந்தாள் என்பது. ஆனால் எங்களுக்குத்தான் இரவு முழுவதும்உறக்கம் இல்லாமல் போனது. நாங்கள் மிகவும் சோர்வாக இருந்தோம்..ஆனால் குழந்தையைகவனிக்க வேண்டிய அந்த அம்மாவின் பெண்ணின் தூக்கம் கெடவில்லை. தாய் மகள் உறவுஎன்பது இந்த தலைமுறையில் இப்படி மாறிவிட்டது

இறங்கியவள் தொட்டிலிலிருந்து,’குழந்தையை ஏன் எடுத்தீர்கள்?’ என்றுகோபமாக அவர் மீது எறிந்து விழுந்தாள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்குமிகவும் வருத்தமாக இருந்தது.

நான் அவரிடம்,’உங்களுக்கு ஏன் சார் இந்த வேலை?’ என்று கேட்டேன்.அவர் ஏதோ ஒருமனிதாபிமானம்தான் சார்’ என்றார்.

ஆனால், அந்த பெண் தூக்கத்தை இழந்த அந்த பெரியவருக்கு ஒரு நன்றியைக் கூடதெரிவிக்காமல் தன் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு வேகமாக ரயிலை விட்டுஇறங்கினாள். எனக்கு அந்த பெருவரை பார்த்தால் பரிதாபமாக இருந்தது.

அடுத்து மாம்பலத்தில் அவர் இறங்க வேண்டும். பையன் வந்து அழைத்துச் செல்லவேண்டும். வருவானா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆட்டோவில்தான் செல்லவேண்டும் என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

’இப்படியும் ஒரு தாய்’ என்று எண்ணிக் கொண்டு நாங்கள் இருவரும் அடுத்த ரயில்நிலையத்தில் இறங்கினோம்.