தொடர்கள்
பொது
மெலோனிக்கு மெலோடி - பால்கி

20260429192101180.jpeg

சமீபத்தில் ஐந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்று வந்த பிரதமர் இத்தாலிக்கு சென்று அந்நாட்டு பிரதமர் மெலோனியை சந்தித்திருக்கிறார்.

தனது சார்பாக அவருக்கு பார்லே கம்பெனியின் ஒரு ரூபாய்கு ஒரு சாக்லேட் வருமே அந்த மெலோடி சாக்லேட்கள் அடங்கிய ஒரு பரிசுப் பையைக் கொடுத்திருக்கிறார்.

மெலோனிக்கு மெலோடி.

இதில் நடந்தது இது தான்.

மோடி எப்போதுமே லோக்கல் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்று நமது உள்நாட்டு சாக்லேட்டை எடுத்து சென்றிருக்கிறார்.

ஆனால் விளைந்ததோ, அந்த பார்லே என்ற பெயருள்ள கம்பெனியின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் சர சரவென விற்கப்பட்டன.

மெலோடி சாக்லேட் செய்யும் கம்பெனி பார்லே ப்ராடக்ட்ஸ். அந்த கம்பெனியின் பங்குகள் பங்கு சந்தையில் இல்லை, ஏனெனில், அது ஒரு பிரைவேட் கம்பெனி ஆகும். மாறாய், முதலீட்டாளர்கள் பார்லே என்ற பெயருடைய கம்பெனியின் பங்குகளை பங்கு சந்தையில் தேடியிருக்கிறார்கள். கிடைத்ததோ, பார்லே இண்டஸ்ட்ரீஸ்.

அது ஒரு உள்கட்டமைப்பு மற்றும் காகித மறுசுழற்சி நிறுவனம்.

ஒரு பங்கு ரூ.4.95 க்கு விற்றுக்கொண்டிருந்தது தடாலென ரூ.5.25க்கு விலை போயிற்று. 21% விலையேற்றம். என்றுமே பங்கு சந்தையில் 5% விலையேற்றத்திலேயே அந்த கம்பெனி பங்கின் மீதான வர்த்தகத்தை நிறுத்தி வைப்பது பங்கு சந்தையின் வழக்கம்.

என்ன ஒரு ஸ்வீட் குழப்பம்!!!