
தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்பதே டி.கே.பட்டம்மாள் என்றானது. இந்தியாசுதந்திரம் அடைந்த தினத்தன்று மகாகவியின் ஆடுவோமே பாடலை அகில இந்திய வானொலி யில் பாடியவர் இவர்தான்.
வழக்கமாக தினமும் செய்திதாள் படிப்பவன் நான். முக்கிய செய்திகளை என் மூளையில் [சில பேர் இவனுக்கு ஏது மூளை என்பது காதில் விழுகிறது]ஏற்றி அலுவலகம் சென்றதும் அன்று மாலையே டி.கே.பட்டம்மாள் அவர்களுடைய வீட்டுக்கு செல்ல எண்ணி,அப்போது கைபேசி வராதகாலம்.
லேண்ட்லைன் மூலமாக பேசி வழிதெரிந்துகொண்டேன்.
அதன்பிறகு 29/09/1998அன்று மாலை அலுவலகம் முடிந்ததும், கிண்டியில் இருந்து, 21ஜி மூலமாக பயணம் செய்து கோட்டூர்புரம் பஸ் ஸ்டாப் அங்கிருந்து 3நிமிட நடைப்பயணம் மூலமாக டி.கே.பி அவர்களுடைய வீட்டை அடைந்தேன்
அதன்பிறகு டி.கே.பி.அம்மா, ஈஸ்வரன் மாமா விடம் பேசினேன்.
30/09/1998 அன்று டிகேபி அம்மா அவர்களுக்கு, செட்டியார் குழுவினரால் பரிசுத்தொகை ரூ.1.00 இலட்சம், விருது வழங்க இருப்பதை தெரிந்தகொண்ட நான் அதற்கு வாழ்த்துக்கள் கூறினேன்.
வழக்கப்படிசுடச்சுட டிகிரிகாப்பி, ஸ்வீட் வர சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது, அம்மா, அவர்களுடைய சமையல்காரனை அழைத்து வாழைப்பழம் தரச்சொல்ல, அவர் கொடுத்த பழம் பயங்கரமா கலர் மாறி இருக்க, எங்கே இருந்து எடுத்து வந்தது? என்றதும் பீரிஜ் என்றதும், நான் அம்மாவிடம் கேட்டு பீரிஜ்ஜை திறக்க, அதிலுள்ள சுமார் 2 டஜன் வாழைப்பழம், 6 வாழக்காய் எல்லாம் அங்கிருந்து எடுத்து ஒரு கவரில் போட்டு வெளியே உள்ள குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு வந்து, பிரிஜ்ஜில் வாழைக்காய், வாழைப் பழம் வைக்கக் கூடாது என்றதும், எனக்கு தெரியாது, நிறைய விஷயங்கள் தெரிய வேண்டியுள்ளது என்று சொல்ல, நான் விடைப்பெற்றுக்கொண்டு வீடு திரும்பினேன்.

Leave a comment
Upload