

கடந்த ஜூலை 17 அன்று தனது இல்லத்திலேயே காலமானார் 'கேரி' சோபர்ஸ் எனும் சர் கார்ஃபீல்ட் செய்ன்ட் ஓபர்ன் சோபர்ஸ்.
மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸில் பிறந்தவர். 28 ஜூலை, 2026 அன்று இருந்திருந்தால் 90 வயது .
ஆல் ரௌண்டர்.

இடது கை பேட்ஸ்மன், இடது கை வேகமான நடுத்தரம், மெதுவான இடது கை ஆர்த்தடாக்ஸ், இடது கை மணிக்கட்டு சுழற்சி பௌலரும் ஆவார்.
1954 முதல் 1974 வரை மேற்கிந்திய அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். சிறந்த ஆல்-ரவுண்டர் திறனுடன் 26 சதங்கள் உட்பட மொத்தம் 8,032 ரன்களையும் (இதில் 26 சதங்கள் அடங்கும்), 235 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். பிடித்த கேட்சுகள் 109.
இளமைக்காலம்
பள்ளி கிரிக்கெட் மற்றும் பார்படாஸ் கிரிக்கெட் லீக் போட்டிகளில் தனது சிறப்பான ஆல்-ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் முத்திரை பதித்த சோபர்ஸ், தனது சம வயதுடையவர்கள் பள்ளிக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த வயதிலேயே - அதாவது 17 வயதிலேயே - சர்வதேச அரங்கில் அடியெடுத்து வைத்தார்.
12 விரல்களுக்குச் சொந்தக்காரர்
ஒவ்வொரு கையிலும் ஒரு கூடுதல் விரலுடன் பிறந்த (பிறக்கும்போதே அகற்றப்பட்டது) சோபர்ஸ், பெரும்பாலான தடகள நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினார்; பார்படாஸுக்காக கோல்ஃப், கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாடினார்,
இங்கிலாந்துக்கி எதிராக தனது நாட்டில் அறிமுகமானார். தனது நாட்டில் தான் தனது இறுதி டெஸ்ட் மேட்ச்சயும் இங்கிலாந்துக்கு எதிராகத்தான் ஆடியுள்ளார்.
நீண்ட நேர ஆட்டக்காரன்
ஒரு சமயம், இங்கிலாந்து பந்துவீச்சுப் படைக்கு எதிராக 101.28 என்ற சராசரியுடன் மொத்தம் 709 ரன்களைக் குவித்தார்; இதில் ஃபிராங்க் வோரெல்லுடன் இணைந்து ஒன்பதரை மணி நேரம் நீடித்த 399 ரன்கள் கூட்டணியில் அவர் அடித்த 226 ரன்கள் ஒரு உலக ரெக்கார்ட் இன்னிங்ஸாக அமைந்தது.

விடாக்கொண்டன்
ஆஸ்திரேலியாவிடனான வரலாற்றில் முதல்முறையாக 'டை' (tied) ஆன பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அவர் 132 ரன்களைக் குவித்துள்ளார்
குறிப்பாக, அந்த 'டை' ஆன டெஸ்ட் தொடரில் அவரது உடல் தகுதி (fitness) வெளிப்பட்டது; பல வீரர்கள் சோர்வடைந்து தளர்ந்துபோன கடுமையான வெப்பமான சூழலிலும், சோபர்ஸ் தொடர்ந்து 22 ஓவர்களை (ஒவ்வொன்றும் 8 பந்துகள் கொண்டவை) வீசினார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு கேப்டன்
சர் ஃபிராங்க் வோரெல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அணியை வழிநடத்தும் பொறுப்பு சோபர்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. கேப்டனாக அவர் கணிசமான வெற்றியைப் பெற்றார்; கிளைவ் லாய்ட் (74 போட்டிகள்) அந்தப் பொறுப்பை ஏற்கும் வரை, சோபர்ஸ் 39 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வழிநடத்தினார்.
துணிச்சலான கேப்டன்
சோபர்ஸ் ஒரு துணிச்சலான கேப்டனாக இருந்தார் - சில சமயங்களில் ஒருவேளை அளவுக்கு அதிகமாகவே துணிச்சலானவராக இருந்தார், உதாரணமாக, போர்ட்-ஆஃப்-ஸ்பெயினில் நடந்த ஒரு தீர்க்கமான போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற அவரது தாராளமான டிக்ளேரேஷன் உதவியது.
365 நாட் அவுட்


1958ல் பாகிஸ்தானுக்கு எதிராக 365 ரன்கள் குவித்து ஒரு தனிப்பட்ட பேட்ஸ்மேனுக்கான உலக சாதனையை படைத்தார் - அதுவே அவரது முதல் டெஸ்ட் சதம். 1994-ல் பிரையன் லாரா 401 நாட் அவுட் என்ற ஸ்கோர் எடுத்த பின் தான் 36 நீண்ட ஆண்டுகள் நின்றிருந்த சாதனை முறியசிக்கப்பட்டது.
ஒரு ஓவரில் ஆறு சிக்சர்கள்
ஆகஸ்ட் 31, 1968 அன்று, நாட்டிங்ஹாம்ஷையர் அணியின் கேப்டனாக கிளாமோர்கனுக்கு எதிராக வேல்ஸில் உள்ள ஸ்வான்சீயில் இருக்கும் செயின்ட் ஹெலன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடியபோது, மால்கம் நாஷ் வீசிய ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுத்து சாதித்தார்.
முதல் நான்கு பந்துகளையும் எல்லைக்கோட்டிற்கு அப்பால் (சிக்ஸராக) அடித்த அவர், ஐந்தாவது பந்தில் 'லாங்-ஆஃப்' (long-off) திசையில் ரோஜர் டேவிஸிடம் கேட்ச் ஆனார். இருப்பினும், பந்தைப் பிடித்திருந்தபோது டேவிஸ் நிலைதடுமாறி எல்லைக்கோட்டில் விழுந்ததால், நடுவர் எட்டி பிலிப்சன் சிக்ஸர் அடிக்க சைகை காட்டினார்.
பின்னர் சோபர்ஸ், இறுதிப் பந்தை ஈஸ்ட் டெரஸ் பகுதிக்கு மேல் தூக்கி அடித்து சரித்திரம் படைத்தார். அப்போது வர்ணனையாளர் வில்ஃப் வூலர், “அவர் செய்துவிட்டார்! அவர் செய்துவிட்டார்! அடடா, அது… வெகுதூரம் ஸ்வான்சீ வரை சென்றுவிட்டது!” என்று வியந்து கூறினார்.
அந்த ஓவரில் 36 ரன்கள் எடுக்கப்பட்டு, ஒரு ஓவரில் 34 ரன்கள் எடுத்திருந்த டெட் அலெட்சனின் 57 ஆண்டுகள் பழமையான முதல் தர சாதனை முறியடிக்கப்பட்டது. அந்தப் பந்தை அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் இருந்து 11 வயது சிறுவன் எடுத்து வந்து, பின்னர் சோபர்ஸிடம் கொடுத்ததாக ஒரு கதை உண்டு.
"அது என் நினைவில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது; ஏனென்றால் நான் எங்கு சென்றாலும் அதுபற்றிப் பேசப்படுகிறது," என்று 2002-ல் அந்தச் சாதனை குறித்து சோபர்ஸ் கூறினார். "இது 1968-ல் நடந்தது; ஆனால் மக்கள் அதைப் பற்றிப் பேசும்போது, அது நேற்று நடந்தது போலத் தோன்றும்”.
சர் பட்டம்
கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக 1975 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் அவருக்கு அதிகாரப்பூர்வமாக 'நைட்' பட்டம் வழங்கப்பட்டது.
2000-ஆம் ஆண்டில் விஸ்டன் நூற்றாண்டின் ஐந்து சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.
விளையாட்டுக்கு அவர் ஆற்றிய இந்த இணையற்ற பங்களிப்புகளுக்காக, 1998-ல் அவர் பார்படாஸின் தேசிய நாயகனாக கௌரவிக்கப்பட்டார், இது அவரது சொந்த நாட்டில் அவருக்கு "மாபெரும் சர் கார்பீல்ட் சோபர்ஸ்" என்ற பட்டத்தை வழங்கியது.
பிராட்மேனின் புகழாரம்
கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் மறைந்த பிராட்மேன் தனது மதிப்பீட்டில், "நான் பார்த்ததிலேயே கேரி சோபர்ஸ்தான் மிகச்சிறந்த பன்முகத் திறமை கொண்ட கிரிக்கெட் வீரர் என்று சொல்வதில் எனக்குச் சிறிதும் தயக்கமில்லை" என்று பிரபலமாக கூறியிருக்கிறார்.
டொனால்ட் பிராட்மேனாலேயே 'ஐவர் அடங்கிய ஒரு கிரிக்கெட் வீரர்' (five-in-one cricketer) என்று வர்ணிக்கப்பட்ட கேரி சோபர்ஸ், உண்மையான அர்த்தத்தில் ஒரு ஜாம்பவானாகத் திகழ்ந்தார். விக்கெட் கீப்பிங் தவிர, கிரிக்கெட் மைதானத்தில் அவரால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
கிரிக்கெட்டின் முகமது அலி
சோபர்ஸை கிரிக்கெட்டின் முகமது அலி என்பார்கள்.
புத்தகம் எழுதியுள்ளார்
ஓய்வுக்குப் பிறகு, அவர் 'போனவென்ச்சர் அண்ட் தி ஃப்ளாஷிங் பிளேட்' என்ற கிரிக்கெட் பற்றிய சிறுவர் நாவலை எழுதினார்.
"வெங்கட்டை என்னிடம் கொடுங்கள், நான் உலகையே வெல்வேன்"
60, 70 களில் நமது தமிழக வெங்கடராகவன் சோபர்ஸ்சுடன் விளையாடியுள்ளார். அவரது பௌலிங்க் மற்றும் ஃபீல்டிங்க்கைப் பார்த்த சோபர்ஸ், "வெங்கட்டை என்னிடம் கொடுங்கள், நான் உலகையே வெல்வேன்"என்று சொல்லி இருக்கிறாராம் (“Give me Venkat, I'll beat the world”).
வெங்கட் தனது அணியில் இருந்தால், எந்த இடத்திலும் எந்த அணிக்கு எதிராகவும் வெற்றிபெற முடியும் என்று அவர் நம்பினார்.
அவரது மறைவு கிரிக்கெட் உலகிற்கு பேரிழப்பு.

Leave a comment
Upload