
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் வரவேற்கிறோம் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அறிக்கை.
அதாவது ,அம்மணி வந்து அதிமுக கூட்டணியில் இல்லையாம்.!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அரசியல் தலைவர்களிடம் சிபிஐ விரைவில் விசாரணை.
எல்லா கட்சியும் விசாரிக்கணுமே !!
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போட்டி போராட்டம் பாராளுமன்ற வளாகத்தில்
பாராளுமன்றம் நடப்பதில்லை தினம் போராட்டம் தான் நடக்குது !!
முதல்வர் விஜய் தலைமையில் முதலீட்டாளர் மாநாடு 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து !!
கையெழுத்து எல்லாம் சரி கம்பெனி வருமா ?
காவிரி விவகாரம் கர்நாடகா பந்த் அடியோடு தோல்வி !!
விஜய் ரசிகர்கள் அங்கே ஜாஸ்தியா இருக்காங்க போல இருக்கு !!
50 ஆண்டுகால பணிகளை ஐந்தாண்டுகளில் அறநிலைத்துறையில் முடித்துள்ளோம் சேகர் பாபு பேட்டி.
அதாவது கருணாநிதியின் ஆட்சியிலும் எந்த வேலையும் நடக்கலை என்கிறார் !!
பட்ஜெட் கூட்டத் தொடரில் செயல்பாடு: திமுக எம்எல்ஏக்கள் மீது ஸ்டாலின் கடும் கோபம் !!
எல்லோரையும் விஜய் ரசிகர்களாக மாற்றி இருப்பார் !!
அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவி சண்முகம் வீட்டில் மூன்று மணி நேரம் ஆலோசனை !!
ஆனா, வெளிய வந்து எடப்பாடி தான் பொதுச் செயலாளர் சும்மா பேசிகிட்டு இருந்தோம்னு சொல்லுவாங்க !!
தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு திமுக ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்.
தீய சக்தி ஆதரவுடன்னு சொல்லுங்க !!
யாரும் நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார் சட்டமன்றத்தில் ஓபிஎஸ் பேச்சு.
அதாவது தொடர்பு எல்லையில் இல்லையாம். .
மாணவர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அமித்ஷா சம்மதம்.
பாராளுமன்ற கூட்டமே முடிஞ்சு போச்சு !!
தமிழக வெற்றி கழகத்திற்க்கு தாவிய அதிமுகவினர் தன்மானத்தை இழந்து தவிக்கிறார்கள் முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் கருத்து.
தன்மானத்துக்கு விலையா ? சன்மானம் கிடைக்கும்ன்னு தானே போயிருக்காங்க !!
அரசியலில் எதிரி நண்பர்களை யாரும் கிடையாது கனிமொழி சோமு எம்பி கருத்து.
கனிமொழி கருணாநிதி எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கத்த. ஓம் பிர்ல்லா விருந்தில் கலந்துக்கும் போதே தெரிஞ்சு போச்சு !!
நீங்கள் படம் பார்த்து வந்தவர்கள் நாங்கள் அப்படி அல்ல எம் ஆர் கே பன்னீர்செல்வம்.
நீங்க கதை விட்டீங்க அதை ஜனங்க நம்பல !!

Leave a comment
Upload