தொடர்கள்
வலையங்கம்
இது சரி இல்லை

20260810190720535.jpeg

சட்டசபையில் போலீஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஆற்றிய பதிலுரை இப்போது பரபரப்பான பேசும் பொருளாக மாறி இருக்கிறது. திமுகவை போட்டு தாக்கி விட்டார். எதிர்க்கட்சியை காட்டு என்று காட்டி விட்டார் என்று விஜய் மொழியிலேயே அவரை நெட்டிசன்கள் பாராட்டுகிறார்கள்.ஆனால், சட்டசபை அரசியல் மேடை அல்ல என்று காம்ரேட்கள் அவர் மீது குறை சொல்லி இருக்கிறார்கள். எதற்கு தேவையில்லாமல் பழைய குப்பை எல்லாம் கிளறுகிறீர்கள் என்றும் கேட்டிருக்கிறார்கள். சர்க்காரியா கமிஷன் பற்றிய முதல்வர் பேச்சு இன்றைய ஜென்ஸி தலை முறை மத்தியில் அது என்ன சர்க்காரியா கமிஷன் என்று அவர்களைத் தேட வைத்திருக்கிறது. காவல்துறை சரியாக இருந்தால் தான் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியே நன்றாக இருக்கும் என்று சொன்ன முதல்வர் காவல்துறைக்கு செய்தது என்ன ?போலீஸ் துறையில் எட்டு மணி நேரம் வேலை, சுழற்சி முறையில் வார விடுப்பு ,பணிச் சுமை குறைப்பு ,முக்கிய தலைவர்கள் வரும்போது பாதுகாப்பு என்ற பெயரில் சாலை முழுக்க பல மணி நேரம் சிறுநீர் கழிக்க கூட போக முடியாமல் காத்திருப்பது, போதிய அளவு காவல்துறையில் நியமனம் இல்லாதது போன்றவை பற்றி எல்லாம் எதுவும் பேசவில்லை. அரசு ஊழியர்கள் கோரிக்கையை முறையிட சங்கங்கள் இருக்கின்றன அதன் முலம் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பார்கள். காவல்துறைக்கு அந்த வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் போது அந்தத் துறையின் அமைச்சர் என்ற முறையில் முதல்வர் பொறுப்பாக அவர்கள் நலனில் அக்கறை காட்டுவது போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கலாம் அதையெல்லாம் செய்யாமல் அவரது அரசியல் உரை காவல்துறைக்கு முதல்வர் மீது வெறுப்பை தான் ஏற்படுத்தும் .