தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 102 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20261003090745578.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

கடந்த பல வாரங்களாக பாம்பே ஞானம் அவர்கள் இயக்கிய ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை தொகுப்புகளை நடமாடும் தெய்வம் என்ற தலைப்பில் வெளிவந்த தொடரை கண்டு ரசித்து, சிலாகித்து அனுக்கிரஹம் பெற்றோம். இந்த வாரம் ஒரு ஆஸ்தான பக்தரின் சிறு அனுபவத்தை பார்ப்போம். ஆஸ்தான பக்தர் மட்டுமல்ல காஞ்சி மடத்தின் மடாதிபதிகள் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் கலைமாமணி செம்பனார்கோவில் மோகன்தாஸ் அவர்களின் அனுபவம்.

மூன்று பெரியவாளிடமும் பிரியமும்,பக்தியும் கொண்ட அவர் தனது அனுபவங்களை பயபக்தியுடன் பகிர்கிறார். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு அனுபவம். எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அவர் குறிப்பிடும் போது அது அவருக்கு கிடைத்த மரியாதை அல்ல தனது கலைக்கு கிடைத்த மரியாதை என்பதை விவரிக்கும் போது நமது குருமார்கள் நமக்கு எத்தகைய ஒழுக்கத்தையும், பக்குவத்தையும் அந்தக் காலத்தில் கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்று புரிகிறது.