தொடர்கள்
பொது
இணைய வழி தமிழ் உறவுகள் கூடும் தமிழ்த் திண்ணை- லாவண்யா மணிமுத்து

20261006145237589.jpg

அறுபதாம் மாத நிகழ்வு . "தமிழ்த் திண்ணை 60" ஆம் சரியாகத் தான்வாசித்தீர்கள். திண்ணை தான் - ஆனால், இன்றைய உலகிற்கு ஏற்றநவீனத் தமிழ்த் திண்ணை எல்லோரும் அவரவர் வீட்டில் இருந்தேஇணைய வழியில்( கூகிள் மீட்) இந்தத் திண்ணையில் வந்து அமரலாம்;
கொஞ்சம் தமிழ் ஆர்வமும், சிக்கல் இல்லா இணையம் இருந்தால்போதும் நீங்களும் பேசலாம், கேட்கலாம், ரசிக்கலாம்…
அறிவுப் பகிர்தலை தமிழில் செய்யும் ஒரு முயற்சி
ஆங்கிலம் கலக்காது தமிழ்ச் சொற்களை பயன்படுத்தும் எழுச்சி
கவிதை முதல் கருத்து வரை
அமெரிக்கா முதல் ஆண்டிபட்டி வரை
பாடல் முதல் பயணம் வரை
புத்தகம் முதல் புத்தாக்கம் வரை
ஆய்வு முதல் அறிவு பகிர்தல் வரை
வரலாறு முதல் வாழ்வியல் வரை
கவிஞர் முதல் காடு வரை
பக்தி முதல் பாராட்டு வரை
கேள்வி முதல் கல்வி வரை
சிற்பம் முதல் சிந்தை உயரும் வரை
இதிகாசம் முதல் சிறு கதைகள் வரை
எட்டு முதல் எண்பது வயது வரை
ஒன்றாய் உறவாடும் பண்பாட்டை மறக்காத
பாசத் திண்ணை இது.
பங்கேற்பாளர்கள் சென்னை, செங்கல்பட்டு , கடலூர் , அஹமதாபாத்,குஜராத், அமெரிக்கா, பல்லடம், உடுமலை , காரைக்குடி, மும்பை ,பெங்களூர் , என்று பல இடங்களில் இருந்தும் ஆர்வமாய் ஒவ்வொரு மாதமும், நான்காம் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் கலந்துகொள்வர்.

20261006145441463.jpg
2021 நவம்பர் மாதம் முதல் திருமிகு சங்கர் கணேஷ் , திருமிகு மணிநாச்சியப்பன் அவர்களின் சீரிய தலைமையில் முன்னெடுக்கப்பட்டுசிறப்பாக செயல்பட்டு வருகிறது.

குழுவினரின் ஒற்றுமை மற்றும்ஆர்வத்துடன் கூடிய முயற்சி இந்த நிகழ்ச்சிக்கு மேலும் வலு கூட்டுகிறது.
இந்தத் தளம் பல கதை ஆசிரியரை, கவிஞரை , பேச்சாளரை , கதைசொல்லியை, நற்சிந்தனையாளரை உருவாகியிருக்கிறது என்றால் மிகையன்று.
கேள்வி பதில்களும், பட்டிமன்றங்களும், பயணக் கட்டுரைகளும் ,புதுக்குறளும், பழந்தமிழர் விளையாட்டுகள், உணவுகள் ,ஆளுமைகளைபற்றிய உரை, மறந்து போன கதாபாத்திரங்கள், வரலாறு, மனம்,சிவபுராணம், குணநலன்கள், மாந்தம், சிற்பக் கலை, அரசாட்சி , ஒலிசிகிச்சை , இசை மருத்துவம் மேலாண்மை, போர் , வீரம், திறமை என்றுதலைப்புகள் நீண்டு கொண்டே செல்லும். இன்னும் பல சொந்த படைப்புகள்என்று ஒவ்வொரு மாதமும் இந்தத் திண்ணையில் பகிரப்படுவது சிறப்பான ஒன்று.

(50 வது தமிழ்த்திண்ணையின் போது வழங்கப்பட்ட நினைவுப்பரிசு மேலே புகைப்படத்தில். கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு அவர்கள் முகவரிக்கே அனுப்பி வைத்தது சிறப்பு. பரிசு பவானி ஜமுக்காள பின்னணியில், அதாவது த்திண்ணையில் ஜமுக்காளம் விரித்து அதன் மேல் அமர்ந்து பேசுதலை நினைவுபடுத்தும் விதமாய் அமைத்தது இன்னும் வெகு சிறப்பு )


தொடர்ந்து இந்த நிகழ்விற்கு ஊக்கமளிக்கும் சாமிநாதன் அய்யா ,பங்கேற்று சிறப்பளிக்கும் சுபஸ்ரீ, கீதா அம்மா, சொர்ணவல்லி, வேங்கடகிருஷ்ணன், ரேணு மீரா , வினைதீர்த்தான் அய்யா , தனபாண்டியன்,
வெங்கட்ராம் வாசி , நந்தா ,திவ்யா , கிருபா நாகினி , கவிதா மற்றும் பலர்.

எங்கள் அரசு மகன் இங்கே இருப்பதில் இளையவர், தற்போது நான்காம்
வகுப்பு படிக்கும் இவர் சளைக்காமல் தன்னுடைய பங்களிப்பை இந்த
தளத்தில் தொடர்ந்து வழங்கி வருகிறார். இவருடைய தலை கீழ் வாசிப்பின்

மூலம் சரியாய் திருக்குறளைக் கண்டுபிடிக்கும் விளையாட்டால்
அனைவரும் மீண்டும் திருக்குறள் படித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தக் குழுவின் சார்பாக சிறப்பு நிகழ்வில் திருக்குறள் மகன் என்ற
பட்டம் அரசு மகனுக்கு வழங்கப்பட்டது.

20261006145558732.jpg
60 ம் நிகழ்வில் 25.10.2026 அன்று மணி நாச்சியப்பன் வரவேற்பு நல்க
திருக்குறளை அரசுமகன் தன் மழலைக் குரலில் தலைகீழாகக் கூற,
இலாவண்யா உவமைகளை எடுத்தாள ,
சாந்தா மாமி கண்ணதாசனின் கருத்து நிறைந்த பாடல்கள் பாட,
மங்கை தமிழில் முதல் சிறுகதை எது என்ற புத்தகத்தை பரிந்துரைக்க,
உமா கோவில் அமைப்பின் வகைகளை பட்டியலிட,
ஆனந்தி நீர்பெயற்றை பறைசாற்ற ,
சிவக்கனி பயணம் பற்றி சிலாகித்துக் கூற,
வித்யாலட்சுமி பாரதியும் கண்ணதாசனையும் இணைத்துக் காட்ட,
முத்துலெட்சுமியோ கல்லில் இருந்து கைபேசி வரை உரைத்துக் கூற,
சிவசங்கரியோ ஒரு சொல் பல உணர்வுகள் பகிர்ந்திட ,
சுந்தரம் அய்யாவோ பெரிதினும் பெரிது கேள் என்று அறுதியிட்டுக் கூற,
நன்றியுரை சுவாமிமலை ஷங்கர் கணேஷ் நவில இனிதே இந்த நிகழ்வு
கூகிள் மீட் வழியாய் நடந்து முடிந்தது.
ஐந்து வருடங்களை விடாது இந்த நிகழ்வினை முன்னெடுத்து நடத்தி வரும் இரட்டையர்களை நீங்களும் வாழ்த்தலாமே.

பின் குறிப்பு:
சங்கர் கணேஷ் 9710423778
மணி நாச்சியப்பன் 97899 04421. இந்த எண்களில் தொடர்பு கொண்டு தமிழ்த்திண்ணையில் இணைவது பற்றி தெரிந்து கொள்ளலாம்.