
திருப்பரங்குன்றம் மலையில் இங்கு ஏற்றலாம் அங்கும் ஏற்றலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதால் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது அமைச்சர் வன்னியரசு.
தீபம் ஏற்றலாம் என்று தான் சொல்லி இருக்கிறார்கள், இதில் என்ன குழப்பம் அமைச்சரே ?
என் வாழ்க்கையையே நாசமாக்கியவர்கள் திமுகவினர் - வைகோ.
ஆமா, உங்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி, உங்க பையனை எம்பி-யா ஜெயிக்க வைத்தது இப்படி நிறைய சொல்லலாம் !!
ஆளுங்கட்சியிடம் இருந்து பெண்களை காக்கும் சூழல் உள்ளது- உதயநிதி
உங்க ஆட்சி மாதிரியே தான் இவங்களும் !!
தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் சொன்னதால் தங்கம் விலை குறைந்தது - பிரதமர் மோடி.
அப்படி ஒண்ணும் கொறஞ்சா மாதிரி தெரியலையே ?
கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை.
அப்போது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப் போகிறார்கள் என்பது உண்மையா கோபால் ?
தலையில் இருக்கும் பேன் போன்றது காங்கிரஸ் கட்சி அண்ணாமலை விமர்சனம்.
அப்ப தலைவர் சீக்கிரம் பேன் ஒழிப்பு போராட்டம் நடத்துவார் போல தெரியுது ?
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து தொகுதி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் பேட்டி.
அவங்க பிரச்சினையை தான் அவங்க தொகுதி பிரச்சனை என்று சொல்றாங்க ?
வரும் ஏழாம் தேதிக்குள், சட்டமன்ற மனுக் குழுவிடம் குறைகளை தெரிவிக்கலாம் சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.
சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் வராங்க மேடம் பாதுகாப்பா இருங்க !!
தெலுங்கானாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் முதல்வர் ரேவந்த் திட்டவட்டம்.
ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய வராமல் பாத்துக்கோங்க, அதான் முக்கியம் !!
2 கோடி தொண்டர்களால் தான் நீங்கள் பொதுச் செயலாளராக இருக்கிறீர்கள் முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி.
இப்பவும் அந்த ரெண்டு கோடி தொண்டர்கள் இருக்கிறார்களா ?
அண்ணாமலை 'ஒரு வேஸ்ட் பீஸ் 'மாணிக்கம் தாகூர் ஆவேசம்.
ஆமா, ஆமா, உங்களை ரொம்ப சதாய்கிறார் ?
ஸ்டாலினுடன் பழனிசாமி சிரிச்சு பேசியது கட்சிக்கு முரணானது நத்தம் விஸ்வநாதன்.
ஜோசப் விஜய் கூட கூட சிரிச்சு பேச சொல்றீங்க !!
காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.
ஆமா ஆனா தண்ணி விடமாட்டோம்னு முடிவு செய்யறது கர்நாடகா தான்!!

Leave a comment
Upload