தொடர்கள்
வலையங்கம்
நல்ல விஷயம் தானே வரவேற்போம்

20261027200417502.jpeg

பொட்டலங்களில் அடைத்து வைக்கப்படும் உணவுப் பொருட்களில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவை அதிகமாக இருந்தால், தனித்தனியாக சிவப்பு நிற எச்சரிக்கை சின்னங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று மூலப்பொருட்களும் அதிகமாக இருந்தால், தனித்தனி எச்சரிக்கை சின்னங்கள் அவசியம். அனைத்தையும் ஒரே சின்னத்தில் குறிப்பிடுவது போதுமானது அல்ல. ஒவ்வொரு சின்னமும் பொட்டலத்தின் பிரதான காட்சிப்பரப்பில் 4 முதல் 5 சதவீத இடத்தை ஆக்கிரமிக்க வேண்டும். அதில் உள்ள எழுத்துக்களை எளிதில் படிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். பயிற்சிப் பட்டறைகள் ,கலந்துரையாடல்கள் மற்றும் செயல்வழிக்கற்றல் மூலமாக ஊட்டச்சத்தின் முக்கியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.