தொடர்கள்
கவிதை
தெரிந்த குறள்கள் - புரியும் வடிவில் - குறுங்கவிதை - வேங்கடகிருஷ்ணன்

20200803160515509.jpg

தெரிந்த குறள்கள் - புரியும் வடிவில் குறுங்கவிதையில் ஒரு தொடர் முயற்சி....

திருக்குறள் படிக்க மட்டுமல்லாமல் படித்தபின் நம்மை சிந்திக்கவும் வைக்கும். அதற்கு அது சுலபமாய் புரிந்து கொண்டு மேலும் சிந்தனையை தூண்டும் வகையில்... அதிகாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குறள்கள் வீதம் வாரம் பத்து குறள்களை சிந்திப்போம்...

பெண்வழிச்சேறல்

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமாறு ரேஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

மனைவிக்கு
அஞ்சுவோன்
பிறர்
நன்மைக்கும்
அஞ்சுவான்....

வரைவின் மகளிர்

இருமணப்பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

பொது மகளிர்
மது, சூது
மூன்றும்
செல்வத்திற்கு
தொடர்பில்லாதவை.

கள் உண்ணாமை

கள்ளுண்ணாப்போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

மதுவினால்
மயங்கி இருப்பவனைக்
கண்டு
மது உண்ணாமல்
மறுப்பது
நன்று

சூது

உடை செல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
அடையவாம் ஆயம் கொளின்.

சூதாடினால்
கல்வி, புகழ்
செல்வம், உணவு உடை
இவை ஐந்தும்
நீங்கும்.

மருந்து

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி யுணின்.

உண்டது செரித்த பின்
உண்ணல் போதும்
மருந்தேதும்
தேவையில்லை

நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்செயல்.

அறிகுறி, காரணம்
தெரிந்து
தீர்க்கும் வகையில்
மருத்துவம் செய்பவனே
மருத்துவன்.

மானம்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

ஒரு முடி இழப்பினும்
உயிர் வாழாக் கவரி மான் போன்று
மானம் இழந்தால்
நல்லோர் வாழார்.

பெருமை

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பெருமையுடையோர்
பணிந்தே நடப்பர்
சிறுமையுடையோர் தன்னையே
வியந்துகொள்வார்.

சான்றாண்மை

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

எவ்வுயிரும் கொல்லாமை
தவம்
பிறர் குற்றம் சொல்லாமையும்
அதுவே.

பண்புடைமை

அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லாதவர்.

நற் பண்பு இல்லாமல்
கூரிய அறிவு இருந்தாலும்
அவர் ஓரறிவு
மரத்திற்கு ஒப்பு.