
அன்னிய மொழி தான் ஆங்கிலம்...
அதை அணைத்துக் கொண்டு பெருமிதம் கொள்ளும் நமக்கு
பிற மாநில மொழிகள் அருகில்
வரக் கூட அனுமதி மறுப்பு!
தமிழின் இனியதோர் மொழி வேறில்லை. மொழிக்கு மாற்று தேடவில்லை. மாற்று மொழியிடம்
பகைமையும் தேவையில்லை!
காபியில் துவங்கி குட்நைட் டில்
முடிவுறும் ஒரு நாளில் நாம் பேசும் கலப்புச் சொற்கள் தான் எத்தனை?
பிற மொழி சகிப்புத் தன்மைக்கு சான்றிதுவே!
பன் மொழி இலக்கியங்களின்
தமிழாக்கமே சொல்லும் ,
தமிழன் அன்னிய மொழிகளுக்கு
தந்திடும் அரவணைப்பும் ,ஆதரவும், மதிப்பும்.
தகவலின் சாதனம் மொழியே!
தகவலின் குவியலே அறிவுமென்பர்.
பன் மொழிப் புலமை
அறிவுத்திறன் சேர்க்குமன்றி குறைக்காது.
தமிழ் கற்றலும் வளர்த்தலும் நம்
கடமையாய், பிற மொழி கற்றலும்
விலக்கலும் நம் உரிமையாய்க் கொண்டால்
அதுவே உறுதி மொழியாகும்.
மொழி வைத்து அரசியல் செய்து
ஆதாயம் காணும் எண்ணம் கொண்டோர்க்கு
நம் இறுதி மொழியாகும்!...

Leave a comment
Upload