தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

.2020923165527748.jpeg

காலமே போதி மரம் - 15 - என்.குமார்

தொடக்கமே மிக அருமையாக இருந்தது குமார். சொல்லி முடிக்காமல் சொல்ல முடியாமல் முடித்த வாக்கியங்கள் தான் அதிகம். என்னிடம் ஒருமுறை நீங்கள் கூறினீர்கள்.. ஒரு மனிதன் வாயை திறக்கும் வரைதான் அவருக்கான மதிப்பு என்று. அதே போல் இங்கு கேட்ட வார்த்தைகளை விட கேட்காத வார்த்தைகள் எப்போதும் மதிப்போடு இருக்கின்றது என்று மிக அழகாக கூறியுள்ளீர்கள் உண்மைதான். வெள்ளை வெளேர் என்று போன நோட்டில் அப்பழுக்கற்ற அன்பின் பழுப்பு படர்ந்திருந்தது. என்ன அழகான உவமை. அதேபோல் நீல நீல மை சூப்பர் குமார். அவளுக்கு(ம்) வலிக்கும். ஒரு எழுத்தில் ஒன்றிணையும் உணர்வு அருமை. வார்த்தையின் என்ன இருக்கிறது, வார்த்தையில் தான் ஏதோ இருக்கிறது. வார்த்தையில் தான் பாதை இருக்கிறது. அவரைத் தவிர மற்றவர்களுக்கு வேடிக்கை. இதையும் முன்பே ஒருமுறை என்னிடம் கூறியுள்ளீர்கள். உங்களுடைய வெற்றியும், உங்களுடைய கஷ்டங்களும் எனக்கு செய்திதான். அது உங்களுக்குத்தான் உணர்வு. நீங்க சந்தோஷப்படும் அளவிற்கு, நீங்கள் வருந்தும் அளவிற்கும் வேறு ஒருவரால் உணர முடியாது என்று முன்பு நீங்கள் என்னிடம் கூறியது. பலமுறை நான் உணர்ந்து இருக்கிறேன் மற்றவர்களின் வலி எனக்கு செய்தியாகவே இருக்கும். கிடைக்கும்போது எனக்கு மட்டும்தான் வேணும்னு தோணும் சார். மத்தவங்களுக்கு கிடைச்சி தனக்கு கிடைக்கவில்லை என்றால், மற்றவர்களோடு சேர்ந்து தனக்கும் வேணும்னு ஏங்கும். 'மகாவும் ஞானியே'. வார்த்தையில் தான் கேட்பவரின் மனமும் இருக்கின்றது. மிக அருமையாக இருந்தது குமார். வார்த்தையில் என்ன இருக்கின்றது வார்த்தையில் தான் எல்லாம் இருக்கின்றது. நான் உணர்ந்தது நம் மீதுள்ள மதிப்பும், மரியாதையும் இருக்கின்றது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது வாழ்த்துக்கள். கண்கள் வாசிக்கும்போதே என் காதுகளும் விரிந்து மகிழ்ந்தது! நன்றி.

இவன் ஸ்ரீ, கே கே நகர், சென்னை


வலையங்கம்

சபாஷ்... சரியான நெத்தியடி வலையங்கம்! எல்லாவற்றுக்கும் மத்திய அரசு மற்றும் கவர்னரின் முடிவுக்காக காத்திருப்பதற்கு மாநில அரசு எதற்கு? ஒருவேளை, அதிக விலை கொடுத்து மக்களின் ஓட்டுகளை வாங்கிவிடலாம் என கருதுகிறார்களோ? இது, மக்களுக்கான அரசு இல்லை என்பது உறுதி.

ராமகிருஷ்ணன், சேர்வராயன் மலை, சேலம்


புவியை அசைத்த தத்துவங்கள் - 40 - மரியா சிவானந்தம்

அருமையான தொடர். உலக தத்துவங்களின் உள்ளங்கை நெல்லிக்கணி இந்த படைப்பு. தனிப் புத்தகமாக வெளியிட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

சிவா


வேண்டாம் அரசியல்..! ரஜினி திடீர் முடிவு?! ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

பல லட்சம் மதிப்பில் தயாராக இருந்த படப்பிடிப்பை, ஒரேயொரு போன்காலில் ரத்து செய்ய வைத்துவிட்டாரே... பொன் முட்டையிடும் வாத்தை அரசியலுக்கு தாரை வார்த்துவிட திருமதி ரஜினிக்கு மனசு வருமா? இதில் ரசிகர்கள்தான் ஐயோ பாவம் என தோன்றுகிறது. இனி வரவே வராது என உறுதி கூறுகிறது ஜாசனின் பரபரப்பு கட்டுரை. பலே!

ராதிகா மனோகரன், நெமிலிச்சேரி


மதம், மொழி, இனம் - ஜாக்கிரதை... - ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதி

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி கதையா, விஜய்சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரன் படத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். ஏன்னா, வரும் தேர்தலில் பெரிய கட்சிகளிடம் ஒரு சீட்டாவது வாங்கணுமேங்கிற ஆதங்கமாக இருக்கும். வேறென்ன சொல்ல?

ராம்பாபு சுக்தேவ், பெங்களூர்


வந்தார்கள்... வென்றார்கள்... - 9 - மதன்

மதனின் வந்தார்கள், வென்றார்கள் தொடரில் ஜலாலுதீன் கில்ஜி மற்றும் அலாவுதீன் கில்ஜியின் நயவஞ்சக திட்டங்களை எதிர்கால இயக்குநர்கள் 'நோட்' பண்ணி வெச்சுக்குங்க. பின்னாடி ஏதாவது சரித்திர படமெடுத்தா பயன்படுத்தலாம். என்னம்மா பிளான் பண்றாங்கய்யா அவங்க!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


சுடச் சுட மழை...! - சி. கோவேந்த ராஜா

Congratulatos sir...! Poetry is raining from your heart...! Mana nilaiyai unarthidum mazha nilai...rain is always arousing emotions...love that...

லக்‌ஷ்மணன், துபாய்


நவராத்திரியில் நலன் பயக்கும் நவதுர்க்கைகள்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Engalukku Navarathiri prasathamAroor.Sundarasekarin Navadhurkkaigal article.

சுப்ரமணியன்


வாசி யோசி.. - 9 - வேங்கடகிருஷ்ணன்

29 நாள் 29 பரிசுகள் புத்தக விமர்சனம் செம இன்ட்ரஸ்டிங்! இதேபோல் மனதளவில் பாதித்து உடல்நலம் பாதித்த நண்பருக்கு அனுப்பி, பரிசோதித்து பார்க்கும்படி கூறியிருக்கிறேன். நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறேன். மிக சிறப்பு!

சக்திவேல் ஜெகன், பொன்பரப்பி


வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை... - 9 - டாக்டர் எம்.ஏ. வேங்கடக்ருஷ்ணன்

வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை தொடரையும், கண்ணன் வெவ்வேறு விதங்களில் வெண்ணெய் திருடி தூங்குவது போல் பாசாங்கு செய்வதையும், அதற்கான பாசுரங்கள் படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டன. மேலும், வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் நான் வெண்ணெயை மறைத்து ருசிப்பதற்கும்!

பாக்யலட்சுமி ராகவன், திருவல்லிக்கேணீ


எட்டுத் திசைகளிலிருந்தும்.. கொலு அப்டேட்ஸ் !!

கொரோனா பரவல் ஊரடங்கினால் நவராத்திரி கொலுவுக்கு யாரையும் அழைக்க முடியலையே என ஏங்கினேன். எங்கள் ஏக்கத்தை போக்கும் வகையில், விகடகவி நவராத்திரி ஸ்பெஷல் அறிவித்து, பலரது ஆசைகளை பூர்த்தி செய்துவிட்டீர்கள். மிக சந்தோஷம்.

பரமேஸ்வரன், திருச்சி


நவராத்திரியில் நலன் பயக்கும் நவதுர்க்கைகள்!! - ஆரூர் சுந்தரசேகர்.

நவராத்திரியின் மகிமையை அழகாக கூறியுள்ள அரூர் சுந்தரசேகருக்கு நன்றி. அன்றாட கூற வேண்டிய ஸலோகங்களையும் அழகாக குறிப்பிட்டுள்ளார். நல்ல தகவல்களை பகிர்ந்ததுகாக மிக்க நன்றி.

வேம்புலக்‌ஷ்மி, நங்கநல்லூர்


எட்டுத் திசைகளிலிருந்தும்.. கொலு அப்டேட்ஸ் !!

எல்லார் வீட்டு கொலுவும் செம அசத்தலா இருக்கு. ஒருசில வீடியோக்கள் மட்டும் வேலை செய்யலை. அதுவும் வேலை செய்தால் நல்லாயிருக்கும். முதல் முயற்சியை வெற்றிகரமாக தொடருங்கள்.

புவனா கிரிதரன், சேலையூர்


மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

எல்லார் வீட்டிலும் பேரன், பேத்திகளை மிக அன்பாக தாத்தா, பாட்டிகள் கவனித்துக் கொள்வர். அதுவும் கிராமத்தில் வசிப்பவர்கள் என்றால், அவர்களின் அன்புக்கு அளவே கிடையாது. அதிலும், உங்க பாட்டி ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, உங்களை நள்ளிரவு வரை விளையாட விட்டிருக்கிறாரே?!

வரலட்சுமி ராகவன், தாம்பரம்


உலகம் சுற்றும் விகடகவி இந்த வாரம். ராம்

உலகம் சுற்றும் விகடகவியில் வெளியான பல்வேறு நாட்டு செய்திகளில் காரசாரமான விவகாரங்கள் தென்படவில்லை. ஒரே ஆறுதல், ஆசிய பெண்ணின் அழகான படங்களை வெளியிட்டதுதான். உங்க புண்ணியத்தில், எங்க கண்களுக்கு 'ஜில்'லான குளிர்ச்சி! கீப் இட் அப் புரோ!


"ஆட்சியர் பெயரில் போலி மெயில் ஐடி!" - ஸ்வேதா அப்புதாஸ்

சரியான நேரத்தில் வெளியான எச்சரிக்கை ரிப்போர்ட். எங்களைப் போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இதேபோல் ஏராளமான போன்கால், மெயில்கள் வந்தன. இப்போ... மாவட்ட கலெக்டர் பெயரிலா? சைபர் கிரைம் போலீஸ் இத்தகைய குற்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

வித்யா மோகன், குரோம்பேட்டை


சாட் & ஸ்வீட்ஸ்... - சத்யா ஜிபி

எங்க ஏரியாவுல இத்தகைய சாட் அண்ட் ஸ்வீட் கடை இருப்பது தெரியாம போச்சே... அட துர்கா... இதுவரை எத்தனைவாட்டி உன் கோயிலுக்கு வந்திருப்பேன்... கண்ல காட்டாம மறைச்சிட்டியே! இன்னிக்கு கடைக்கு போய், எல்லா அயிட்டத்தையும் ஒரு கை பார்த்துடலாம். நன்றி சத்யம் ஜிபி!

லட்சுமி ராமகிருஷ்ணன், மடிப்பாக்கம்


ஆ(ழ்)ள் துளைக்கிணறு... – பா.அய்யாசாமி

கதைக்கேற்றபடி 'ஆ(ழ்)ள்துளை கிணறு' என பொருத்தமான தலைப்பை வைத்திருக்கிறீர் அய்யாசாமி. எமலோகத்தில் நடைபெறும் பேச்சுகளில் அரசியல் நெடி இருக்கத்தான் செய்கிறது. ஆனா, தூக்கலாக இல்லை. உ-ம் விதியை மதியால் வென்ற நிதியை எமதர்மன் ஓரங்கட்டியது.

சரளா கோபாலன், அனகாபுத்தூர்


சுடச் சுட மழை...! - சி. கோவேந்த ராஜா

மழையை பற்றி மிக அழகாக வர்ணித்த கோவேந்தராஜாவே, நீர் குடும்பத்துடன் பல்லாண்டு வாழ்க. ஏன்னா, மழை பேரை கேட்டாலே உடம்பு ச்சும்மா அதிருதுல்ல... மாமழையை வரவேற்போம்.

விஜிபி சர்மா கணேஷ், அபிராமபுரம்


சென்னையை மிரட்ட வரும் வடகிழக்கு பருவமழை?! - ஆர்.ராஜேஷ் கன்னா

வடகிழக்கு பருவமழை குறித்து தங்களது எச்சரிக்கை நாளிதழ்களைவிட விரிவாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது. இதை காட்டி, எங்கள் பகுதியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகளை மக்களே மேற்கொண்டு வருகிறோம்.

கோதைநாயகி, பெரவள்ளூர்


உணவே மருந்து... மீனாசேகர்.

very fine subject handled in best way! kindly..publish continuously about medicated plants.fruitsetc..may be much useful in these worst affected virus period.

லலிதாசாய்சந்திரன், மதுரை


சுடச் சுட மழை...! - சி. கோவேந்த ராஜா

மழையினால் நமக்கு ஏற்படும் குஷியான மனநிலை மாற்றம் உள்பட பலவற்றை அழகான கவிதையாக வடித்திருக்கிறார் கோவேந்தராஜா. அற்புதம்!

சார்லஸ் அந்தோணி, வேளாங்கண்ணி


கடிதங்கள் - கே.ராஜலட்சுமி

கடிதங்கள் பற்றிய ராஜலட்சுமியின் கவிதை வரிகள் அட்சர லட்சம் பெறும். ஏனெனில், ஒவ்வொரு கடிதத்தை எழுதும்போது உரிய வார்த்தை கிடைக்க தடுமாறுவது, அதற்கு பதில் கடிதம் வந்த சந்தோஷத்தில் குதிப்பது... இப்படி நட்பு, உறவு வட்டங்களை அன்பு வளையத்தில் கொண்டு வந்தது கடிதங்களே! சிறப்பு.

கலா கார்த்திக், வடபழனி


‘ஃபிளைட்-ஃபோபியா’... - வெ. சுப்பிரமணியன்

திருச்சிலருந்து சென்னைக்கு பிளைட்ல வந்ததுக்கு இத்தனை அலம்பலா பெரிசுக்கு... நாங்கல்லாம் ஒருநாள்ல எம்மாம் பெரிய பிளேனை கட்டிங் போட்டு இஸ்த்துகறோம்! அதென்னா... அதுக்கு பேரு பிளைட் போபியாவாம்! சோக்கா கீதுபா...

பழனிச்சாமி, ராயபுரம்


உலகை குலுக்கிய வழக்குகள் ! - ஆர். ராஜேஷ் கன்னா

உலகை குலுக்கிய வழக்கில் மனநிலை பாதித்த பெண் துப்பாக்கியால் சுட்டது, கணவர் தலையில் குண்டு, வழக்கு விசாரணை என அழகாக கொண்டு சென்றீர். கடைசியில் 'எல்லாம் முடிந்தது' என கொட்டை எழுத்தில் எண்ட் கார்டு எதற்கு?

பன்னீர்செல்வம், பெரியபாளையம்


அண்ணன் என்னடா?.. தம்பி என்னடா அவசரமான உலகத்திலே?! - பாலநாகராஜன்

அடப்பாவமே... உயிரோடு ஒருவரை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து கொல்லப் பார்த்திருக்கானே... படுபாவி! அதுவும் டாக்டர் சர்டிஃபிகேட் வேற! ஒருவேளை, கிணத்தை காணோம்னு போலீசாரை வடிவேலு அலைய விடுவாரே... ஒரு படத்தில்! அதுமாதிரி இல்ல இருக்கு! சம்பந்தப்பட்டவர்களை அதே மாதிரி ஃப்ரீசர் பாக்சில் வைத்து சித்ரவதை செய்யணும்.

கிருஷ்ணகுமார், சூளகிரி, கோவை


வலைக்கள்ளன்

வலைகள்ளனில் வந்த மூன்று ஜோக்குகளும் அருமை, மிக அருமை. அதுவும் 50-வது மாடியில் மூச்சு வாங்க நின்றபடி பாலா சோகமான கதை சொல்றேன்னு, 3 பேரின் ரூம் சாவியும் காரில் வெச்சிட்டேன்ல என சொன்னது வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இதத்தான் வலைகள்ளனிடம் எதிர்பார்த்தோம்!

ரோகிணி, வளர்மதி, அனுஷ்கா, கோவை


கொலுவில் கொரோனா விழிப்புணர்வு... - மாலாஸ்ரீ

மரகதம்மாளின் நவராத்திரி கொலு வழியே கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பாராட்டுக்கு உரியது. நெல்லை மாவட்டக்காரர்கள் அனைத்துக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

ஜெயலட்சுமி கணேசன், சைதாப்பேட்டை


விபசாரக் கூடமாக மாறிய சென்னை மசாஜ் சென்டர்கள்.!- நமது நிருபர்

நான் ரொம்ப நாளா மசாஜ் பண்ணிக்கணும்னு நாக்கை தொங்க போட்டு அலைஞ்சேன். இப்போ, இக்கட்டுரையை படிச்சதும் அந்த ஆசை அறவே ஓடிடுச்சு! அப்புறம்... அதுக்கு ஆசைப்பட்டு போனா, என் வாழ்க்கையே நரகமாயிடும்

புருஷோத்தமன், அண்ணனூர், ஆவடி


வாவ் வாட்ஸப்!

சென்ற வார வாட்ஸ் ஆப்பில் பல்வேறு பல்டிகள் அடித்து அசத்தியதுடன், 'இதெப்படி...' என ஆச்சரியத்தில் நாக்கினால் மூக்கை தொட வைத்தது.

கௌஷிக், தீட்சிதா, சூர்யா, சென்னை


மரண சாசனம்... - ஆர்னிகா நாசர்

மிக அருமையான மரண சாசனம் கதையை வடிவமைத்து தந்திருக்கிறார் ஆர்னிகா நாசர். பொதுவாக, உயில் சாசனத்தால் பல்வேறு குடும்பங்கள் பிரிந்து கோர்ட், கேஸ், அடிதடி, வெட்டு குத்து கொலை வரையில் சென்றிருக்கின்றன. இதில் டர்னிங் பாயிண்டாக, 4 பேர் குடும்பத்தையும் இஸ்லாமிய விதிகளின்படி ஒன்றுசேர்ந்து உள்ளனர்.

அப்துல் ரகுமான், வாணியம்பாடி


நவராத்திரி மூன்றாம் நாள் - 19-10-2020

நவராத்திரியின் 3-ம் நாளின் மகிமை குறித்து மிக தத்ரூபமாக விளக்கியுள்ளார் கல்யாணபுரம் சுந்தரராமன். இப்பேச்சு, வரும் நாட்களின் மகிமையை அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டியது.

ரேணுகா ஹரிஹரன், சாலிகிராமம்


ராக தேவதைகள்... - 9 - மாயவரத்தான் சந்திரசேகரன்

ரீதிகௌளை ராகத்தை எழுத ஆரம்பிக்கும்போதே அழகான ஸ்ரேயா கோஷல் படத்தைப் போட்டு கட்டுரையை அமர்க்களப்படுத்தி விட்டார் மாயவரத்தான் சந்திரசேகர். எல்லா ராகத்தையும் பற்றி அறிந்திருக்கும் நீங்கள் ஏன் டிசம்பர் கச்சேரிகளில் பாடக்கூடாது?!

கோபாலகிருஷ்ணன், அடையாறு


‘ஃபிளைட்-ஃபோபியா’... - வெ. சுப்பிரமணியன்

நானும் அந்த காலத்தில் விமானத்தில் Happy-RoundTrip போனதுண்டு. இப்போ பிளைட் டிராவல் ஒத்துக்கலே. Nice Reminiscence.

மதுரம்


கடவுள் கொதித்தார்! -தில்லைக்கரசிசம்பத்

அடேங்கப்பா... என்னவொரு விபரீதமான கற்பனை! ஆனால், இந்த விபரீத கற்பனையை தூண்டுவது போல்தான் இந்தியாவிலேயே பல்வேறு கொடூர சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதற்காகவே கடவுள் கொதித்தெழுந்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்கினாலே மக்களுக்கு பயம் ஏற்படும்! அந்த பயத்திலேயே தவறுகள் திருத்தப்படலாம். வெல்டன் தில்லைக்கரசி!

ரேணுகா ஹரி, வளசரவாக்கம்


டோனிக்கு பயந்தாரா அம்பயர்! - ஆர்.ராஜேஷ் கன்னா.

என்னது... வைடு பால் குடுக்க வந்த அம்பயரை பார்த்து நம்ம டோனி முறைச்சாரா? ஆச்சரியம். இம்முறை சிஎஸ்கேவின் மோசமான ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் முறைக்கிறாங்களே... அதுக்கு டோனி என்ன செய்யப் போகிறார்? கிரவுண்ட் சரியில்லை என கூறப்போறாராக்கும்!

ராதிகா பாலாஜி, விருகம்பாக்கம்


காலமே போதி மரம் - 15 - என்.குமார்

கடந்த 15 வாரங்களாக காலமே போதி மரம்னு தங்களது மலரும் நினைவுகள், நிகழ்வுகளை அழகாக தமிழில் என்.குமார் வெளிப்படுத்தினார். அதை ரசித்துக் கொண்டு இருக்கும்போதே, லவ் யூ... பை சொல்லியது அதிர்ச்சி. எனிவே தற்போதைக்கு குட்பை வித் லவ். வெல்கம் பேக் என்.குமார்!

மாயா குப்புசாமி, ஶ்ரீதரன், சென்னை


“சுப்ரீம் கோர்ட் அதிரடி... கலக்கத்தில் காட்டேஜ் உரிமையாளர்கள்..!” - ஸ்வேதா அப்புதாஸ்

நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் வழங்கிய உறுதியான தீர்ப்பு பாராட்டுக்கு உரியது. இதை முழுமையாக செயல்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதற்கென முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் இயற்கை ஆர்வலர்களின் வாழ்த்துக்கள்.

ரகுநாதன், மடிப்பாக்கம்


பாட்டொன்று கேட்டேன், பரவசமானேன்... - மரியா சிவானந்தம்

சுபஶ்ரீ தணிகாசலத்தின் க்யு.எஃப்.ஆர் குறித்து 'பாட்டொன்று கேட்டேன், பரவசமானேன்' கட்டுரையை படித்த எங்களின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன. அந்தளவுக்கு மரியா சிவானந்தம் ரசனையுடன் தொகுத்து வழங்கியுள்ளார்.

செந்தில்குமார், கேளம்பாக்கம்


நவராத்திரியில் நலன் பயக்கும் நவதுர்க்கைகள்!! - ஆரூர் சுந்தரசேகர்.

நவராத்திரியில் நலம் பயக்கும் நவதுர்க்கைகளின் சிறப்புகள் குறித்து சுந்தரசேகரின் கட்டுரையை படித்து மெய்சிலிர்த்தேன். அடேங்கப்பா... எவ்வளவு தகவல்கள், மந்திரங்கள்!

கார்த்திகா சேகர், வளசரவாக்கம்


நவராத்திரி - இரண்டாம் நாள் 18-10-2020

நவராத்திரி பண்டிகையின் முதல் 2 நாட்களின் சிறப்பு குறித்து கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன் மிக அழகாக விளக்கியுள்ளார். இந்த 2 நாட்களின் விளக்கங்களும் அடுத்து வரும் 7 நாட்களின் சிறப்புகளை அறியும் ஆவலை தூண்டிவிட்டன.

சித்ரா ராமன், வேளச்சேரி


உணவே மருந்து... மீனாசேகர்.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய வகையில் உணவே மருந்து அமைந்துள்ளது. அதிலும் அகத்தி கீரை குறித்து தங்களின் விளக்கம் மிக பயனுள்ளதாகும். இனி அகத்தி கீரையை தேடி பலர் ஓடுவது நிச்சயம்!

கோமளா வரதன், அரும்பாக்கம்


நவராத்திரி - முதல் நாள்.... - புலவர் கிருஷ்ணாபுரம் சுந்தர் ராமன்.

உங்களின் ஒவ்வொரு பதிலும் அருமை . தொடரட்டும் உங்கள் ஆன்மீக சேவை.

வாரா, நேபெர்வில்லே, ஐஎல்


சாட் & ஸ்வீட்ஸ்... - சத்யா ஜிபி

Good info for chat lovers

ஹரி, நங்கநல்லூர்


நவராத்திரியில் நலன் பயக்கும் நவதுர்க்கைகள்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Sincere thanks to Aroor Sundarasekar for offering this writing more about North Indias Navarathri. We have come to know about each Devis mahimai very distinctly and related sloka about each one of them which are unknown to us that too during this Navarathri days.

எஸ். சாய்லக்‌ஷ்மி


உணவே மருந்து... மீனாசேகர்.

Unave Marundhu is the ever green title. Since it is a part of our life. Without food no one can survive. Meena Sekar has wisely chosen this title. We can eagerly wait for one topic that every week there would be about one food item. We are happy that we got the knowledge about Agathikeerai this week. Thanks to writer.

எஸ். சாய்லக்‌ஷ்மி



வேண்டாம் அரசியல்..! ரஜினி திடீர் முடிவு?! ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

இது ஒரு எதிர்பாரக்கப்பட்ட விஷயம் தான்!

எஸ். பார்கவன், அமெரிக்கா


வலையங்கம்

இந்த மாதிரி காலதாமதம் (ஆளுனர், நடுவண் அரசு )நடப்பது இப்போது தானா? தானா? இதுக்கு precedence உண்டா?

எஸ். பார்கவன், அமெரிக்கா


‘ஃபிளைட்-ஃபோபியா’... - வெ. சுப்பிரமணியன்

சோக்கா கீதும்மா உம் ப்ளைட்டு கத...அடுத்த தபா எப்ப போவ?

மாலா ரமேஷ், சென்னை